India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய்யின் கொள்கை நிலைப்பாட்டை வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுகதான் தங்கள் முதல் எதிரி என்று விஜய் பேசியிருப்பதை வரவேற்பதாகக் கூறினார். கொள்கை நிலைப்பாட்டை வெளிப்படுத்திய முதல் பேச்சிலேயே போலி திராவிட மாடலை எதிர்த்து குரல் கொடுத்தது மிக முக்கியம் என்று நினைப்பதாகத் தெரிவித்தார்.
கோழி இறைச்சி சாப்பிட விரும்புவோர், சில நேரம் இறைச்சி கடையில் விற்கும் நாட்டுக் கோழியை வாங்கி சமைப்பதுண்டு. இவர்களிடம், நாட்டுக் கோழி எனக் கூறி, அதேபோல் இருக்கும் பண்ணை கோழியை விற்று சில கும்பல் மாேசடி செய்து வருகிறது. இவை, நாட்டுக் கோழிகள் போல் தோற்றத்தில் இருந்தாலும், அக்கோழியில் இருக்கும் சத்தாே, சுவையோ இருக்காது. ஆதலால் தரம் பார்த்து வாங்கவில்லையெனில் ஏமாறுவது நிச்சயம்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு விளையாட்டை அனுபவிக்க விரும்புவதாக தோனி மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஜடேஜா, துபேவுக்கு அதிக வாய்ப்பு இருந்ததால், கடந்த ஐபிஎல் சீசனில் அவர்களுக்கு CSK-வில் முன்வரிசையில் வாய்ப்பு தரப்பட்டதாகக் கூறினார். தான் பின் வரிசையில் ஆடினாலும் அணியினர் மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பேச்சு, படம் பார்ப்பது போல் இருந்ததாக பாஜக கிண்டல் அடித்துள்ளது. அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், வெற்றிக்கழக தலைவர் விஜய், வெட்டிக் கழகத் தலைவராக மாறக்கூடாது என விமர்சித்துள்ளார். அதிகார அரசியலுக்காக திமுக வழியிலும், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையிலும் செயல்பட முடிவு செய்திருப்பது மக்களை ஏமாற்றுவதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையின் மறைவுக்குப் பின் சிறு வயதில் முடிசூடி போருக்கு சென்று வாகை சூடிய மன்னன் குறித்து விஜய் தனது குட்டிக்கதையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அந்த மன்னனின் பெயரைக் குறிப்பிடாமல் படித்துத் தெரிந்துக் கொள்ளும்படி கூறிவிட்டார். இந்நிலையில், அந்த மன்னன் யார் என ஏராளமானவர்கள் இணையத்தில் தேடியுள்ளனர். அந்த மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாள்களில் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. VAO, பில் கலெக்டர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வு ஜூன் 9ல் நடைபெற்றது. 20 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்த நிலையில், 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர். தொடர்ந்து, தற்போது கூடுதலாக 2,688 இடங்கள் சேர்க்கப்பட்டு காலிப்பணியிடம் 8,932 ஆக அதிகரித்துள்ளது.
‘கைதி 2’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். ‘கங்குவா’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு தனி திரைப்படம் தயாராகவுள்ளதாகக் கூறினார். அனைத்தும் டிஸ்கஷன் ஸ்டேஜிலேயே இருப்பதாகவும், கதை முடிவானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 குறைந்து ஒரு சவரன் ₹58,520க்கும், கிராமுக்கு ₹45 குறைந்து ஒரு கிராம் ₹7,315க்கும் விற்கப்படுகிறது. அதேநேரம், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹107க்கும், ஒரு கிலோ ₹1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மண்டல மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்பாக குறைந்தது 25 லட்சம் டின் அரவணை மற்றும் அப்பம் பாக்கெட்டுகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு சீசனையொட்டி நவ. 15ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் நிலக்கல், எருமேலியில் கூடுதலாக 4,500 வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 700 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அடுத்த 3 நாள்களுக்கு 14,086 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.