India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. கடந்த 41 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்தியா தோற்றதில்லை. கடைசியாக 1983இல் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. இதன் பின் நடைபெற்ற 9 டெஸ்டில் 5ல் வெற்றி, 4 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியாவின் வெற்றிநடை தொடருமா?
*உண்மையான காதல் ஒருபோதும் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்காது, ஏனெனில் உண்மையான காதலுக்கு முடிவே இல்லை.
*முயற்சி செய்பவருக்கு சாத்தியமற்றது என்று எதுவுமில்லை.
*என் உடலை புதைத்து, எந்த நினைவுச்சின்னத்தையும் கட்டாதீர்கள். என் கைகளை வெளியே வைத்திருங்கள், அதனால் உலகத்தையே வென்றவர் இறந்தபோது அவர் கையில் எதுவுமே இல்லை என்று மக்களுக்குத் தெரியட்டும்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி தர்மபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 65 ▶ குறள்: மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. ▶ பொருள்: தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு, இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், ”என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு மக்கள் மற்றும் திரையுலகம் சார்பில் நன்றி” என தெரிவித்துள்ளார்.
▶ செப்.27 (புரட்டாசி 11) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 – 10:15 AM & 4:45 – 5:45 PM ▶ கெளரி நேரம்: 12:00 AM – 1:00 AM & 6:30 – 7:30 PM ▶ ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶ எமகண்டம்: 3:00 – 4:30 PM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: நவமி▶ பிறை: தேய்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ சந்திராஷ்டமம்: மூலம் ▶ நட்சத்திரம் : புனர்பூசம் அ.கா 4.32 வரை ▶ யோகம் : மரண யோகம்.
இன்று (செப். 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (செப். 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*மேஷம் – நிம்மதி ஏற்படும் *ரிஷபம் – எதிர்ப்புகள் இருக்கும் *மிதுனம் – வரவு உண்டாகும் *கடகம் – ஏமாற்றம் ஏற்படலாம் *சிம்மம் – விவேகத்துடன் செயல்படுங்கள் *கன்னி – ஊக்கம் கிடைக்கும் *துலாம் – உதவி கிடைக்கும் *விருச்சிகம் – பொறுமையுடன் செயல்படுங்கள் *தனுசு – பெருமை வந்து சேரும் *மகரம் – ஆக்கம் உண்டாகும் *கும்பம் – அசதி இருக்கும் *மீனம் – போட்டி உண்டாகும்.
500 T20 போட்டிகளை விளையாடிய முதல் SA வீரர் என்ற பெருமையை டேவிட் மில்லர் படைத்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் T20 தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக இன்று அவர் விளையாடியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்குமுன், பொல்லார்ட், பிராவோ, சோயப் மாலிக், நரைன், ரஸல் ஆகியோர் 500 T20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களில் யார் இந்த முதல் பெருமையை பெறுவார்? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.