India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றைய IPL போட்டியில், LSG அணியை வெறும் 166/7 ரன்களில் சுருட்டியிருக்கிறது CSK அணி. டாஸ் வென்ற CSK கேப்டன் தோனி, LSG அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். அதன்படி களமிறங்கிய LSG, ஆரம்பம் முதலே சொதப்பியது. அதிரடி நாயகர்கள் மார்க்ரம், பூரன் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தாலும் கேப்டன் பண்ட் நிதானமாக விளையாடி 63 ரன்கள் குவித்தார். CSK அணியின் பதிரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதால், மாணவர்கள் உணவுக்கு கூட வீட்டிற்கு வராமல் வெளியே சுற்றுவதுண்டு. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறுவர், சிறுமியர் நீர் நிலைகளில் குளித்து மகிழ செல்வார்கள். அவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்வது பெற்றோரின் கடமை. ஆபத்தை உணராமல் இருக்கும் சிறார்களுக்கு அதனை எடுத்துக் கூறி, கட்டுப்பாடுகளுடன் விளையாட அனுமதியுங்கள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது, அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலா வந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே, குழந்தைகளை கவனிங்க.
சூரி, ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்’ திரைப்படம் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ’விலங்கு’ வெப் தொடர் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். குடும்ப உறவுகள் மற்றும் அதன் உணர்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.
சீமானின் நாதக-வில் மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர் இளவஞ்சி. கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியில் அவர் இன்று அக்கட்சித் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இணைந்தார். TN சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி நிர்வாகிகள் கட்சி மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizer, தாங்கள் ஆய்வு செய்து வந்த உடல் எடைகுறைப்பு மருந்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. Danuglipron என்ற பெயர் கொண்ட அந்த மருந்தினால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவதால், அதன் ஆய்வு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எடைகுறைப்பு மருந்துகளுக்கான தேவை அதிகம் இருக்கும் என்பதால், முன்னணி நிறுவனங்கள் அந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
வரும் ஏப்.27-ல், ரேவதி நட்சத்திரத்திற்கு புதன் பெயர்ச்சியாவதால் இந்த ராசிக்காரர்கள் நற்பலன்கள் பெறுவர்: *ரிஷபம்- தொழில், வருமானம் மேம்படும். வேலைத் தடைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி வரும். *தனுசு- நீண்டகால பிரச்னை முடிவுக்கு வரும். பணச்சிக்கல் தீர வழி பிறக்கும் *கடகம்- மன அழுத்தம் குறையும், வழக்குகளில் தீர்வு ஏற்படலாம், பணச்சிக்கல் குறையும். மொத்தத்தில் இந்த 3 ராசிகளுக்கு நன்மைகள் அதிகம்.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதையடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் <<16065106>>கடன்கள் <<>>மீதான வட்டியை குறைத்து வருகின்றன. அந்த வரிசையில், SBI வங்கியும் தான் வழங்கும் கடன்களுக்கான வட்டியை ஏப்.15 முதல் 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் லோன் வாங்குபவர்கள் பயனடைவர். அதேநேரம், டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டியையும் 10-25 புள்ளி SBI குறைத்துள்ளது.
பலரும் சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைக்கிறோம். ஆனால், அலாரம் அடித்தால் அதை ஆஃப் செய்து 10 நிமிடம் தூங்கி எழுந்திருக்கலாம் என மீண்டும் அலாரம் வைத்து தூங்குவோம். இதுபோன்று அலாரம் வைப்பது உடலுக்கு பல தாக்கத்தை ஏற்படுத்துமாம். தூக்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் விழுத்துக்கொள்வதால் கண்கள் மற்றும் இதய பாதிப்பு ஏற்பட வாய்புள்ளதாம். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் ஏற்படுமாம்.
மலேசிய முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது பதாவி (85) காலமானார். கோலாலம்பூரில் உள்ள ஹாஸ்பிடலில் இதய நோய் தொடர்பான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2003-2009-ம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக அவர் பதவி வகித்தார். ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரை கூட அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.