India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
₹10 லட்சம் கோடி முதலீடுகளில் 60% பணிகள் நிறைவேற்றமா? எங்கே? எப்போது? என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் தொழில் முதலீடுகள் வந்தது உண்மை என்றால், அந்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடலாம் என்றும், அதை வெளியிடத் தமிழக அரசு தயங்குவதிலிருந்தே முதலீடுகள் வரவில்லை என்ற சந்தேகம் உறுதியாகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
வளர்ந்த நாடு ஆவதற்கு இந்தியா இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது என்ற அவர், 7% பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து அடைந்தால், இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை முந்தி, பொருளாதாரத்தில் 3-வது இடத்தை அடைவது சாத்தியமே என்றார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும், நாளை கோவை, வேலூர், சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என்றும் RMC கணித்துள்ளது. இந்த தகவலை SHARE பண்ணுங்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூர கல்வி நிறுவனத்தின் கீழ் இளநிலை, முதுநிலை, தொழிற்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வு அக்.5ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்று 4 படங்கள் ரிலீசாக உள்ளன. கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது. பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன் நடித்துள்ள ‘பேட்ட ராப்’,ஆக்ஷன் த்ரில்லர் படமான விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. நீங்க டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவி ரயில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1933 – நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்.
1959 – ஜப்பானின், ஒன்சூ தீவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1994 – மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூச்சி உருவாக்கினார்.
இன்று காலை 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு இருக்க கூடிய மாவட்டங்கள் பெயரை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) வெளியிட்டுள்ளது. அதில், தி. மலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி – மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக RMC குறிப்பிட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளார்.
காலை 11 மணி அளவில் பிரதமரை சந்திக்கும் அவர், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தி, கோரிக்கை மனு ஒன்றை அளிக்க உள்ளார். பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதல்வர் சென்னை திரும்புகிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான வாழை திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் அவரது வாழ்வின் சோகத்தையும், மகிழ்ச்சியையும், பார்த்த அனுபவத்தையும் இப்படத்தின் மூலம் பகிர்ந்திருந்தார். ஓடிடி-யில் பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?
இலங்கையில் இன்று முதல் பழைய விசா நடைமுறை அமலாக உள்ளது. அதன்படி மக்கள் பழைய நடைமுறைப்படி 24 மணி நேரத்திற்குள் விசா பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன் VFS என்ற நிறுவனத்திற்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், வெளிநாட்டினர் விசா பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க அதனை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.