India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤சீனாவில் மாணவர்களுக்கு பள்ளிகளில் உடற்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டது. ➤நாய் இறைச்சி விற்பனை தடையால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை தென்கொரியா அரசு அறிவித்தது. ➤துணை மின் நிலையங்களை தாக்க முயன்ற சாராவுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனையை அமெரிக்காவின் மேரிலேண்ட் நீதிமன்றம் விதித்தது. ➤பாகிஸ்தானின் குர்ரமில் வசிக்கும் பழங்குடி குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
குரங்கு அம்மை தடுப்பு குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சந்தேகத்திற்கிடமான, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதிகள், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காலியாக இருக்கும் 250 இடங்களுக்கு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். NTPCஇல் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் துணை மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு 3-10 ஆண்டு வரை முன் அனுபவம், BE, B-TECH தேர்ச்சி அவசியம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை NTPCஇன் www.careers.ntpc.co.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
➤Macau Super 300 Badminton: 2ஆவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரர் ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ➤Youth ODI Series: ஆஸி. அணிக்கு எதிரான ODI தொடரை இந்திய அணி ‘ஹாட்ரிக்’ (3-0) வெற்றியுடன் கைப்பற்றியது. ➤F1 Singapore Grand Prix: டைட்டில் சுற்றில் லாண்டோ நோரிஸ் 516 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ➤ENG – AUS அணிகள் மோதும் 4ஆவது ODI போட்டி லார்ட்ஸில் இன்று நடைபெறுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு அடைந்திருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ₹3 வரை குறைக்கப்படலாம் என இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச்சில் ₹2 குறைக்கப்பட்டபோது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 83-84 டாலராக இருந்தது. ஆனால், தற்போது 74 டாலராக குறைந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. எனவே விலை குறைய வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது.
கூட்டணியில் இருந்து திருமாவை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக தெரிவித்துள்ளது. திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அளித்துள்ள பேட்டியில், கூட்டணி குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்து அவரின் சொந்த கருத்து. அதற்கு பதில் சொல்ல முடியாது என்று கூறினார். திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி. அதில் இருந்து திருமாவை பிரிக்கலாம் என்ற அதிமுக போன்ற கட்சிகளின் கனவு நனவாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
BAN எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஜடேஜா மற்றும் அஸ்வின் புதிய சாதனை படைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போட்டியில் மேலும் ஒரு விக்கெட் எடுத்தால் டெஸ்டில் 300 wkt மற்றும் 3,000 ரன்களை வேகமாக எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைப்பார். அதே போல் அஸ்வினும் இந்த போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தினால் நாதன் லயனை ஓவர்டேக் செய்து அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 7ஆவது இடத்தை பிடிப்பார்.
‘நாகேஷ்’ தமிழ் சினிமா கண்டெடுத்த தவப்புதல்வன். அவர் இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். அவரின் அலட்டிக்கொள்ளாத முகபாவங்களும், நொடியில் சீறிவரும் காமெடி வரிகளும், உடல் அசைவுகளும் அவருக்கு முன்பும் பின்பும் யாருமில்லை என்பதை இன்றுவரை நிரூபித்துள்ளது. நான் மழையில்தான் அழுவேன் அப்பொழுதுதான் என் கண்ணீர் யாருக்கும் தெரியாது என்ற சிரிப்பு சக்கரவர்த்தியின் பிறந்த தினம் இன்று.
சமூக வலைதளங்களில் நிதி, முகவரி உள்ளிட்ட முக்கிய தகவல்களை பகிர வேண்டாமென்று சைபர் கிரைம் பிரிவு போலீஸ் எச்சரித்துள்ளது. சைபர் மோசடியை சுட்டிக்காட்டி பொதுமக்களுக்கு அது எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், மின்னஞ்சல் லிங்குகளை கிளிக் செய்யும் முன்பும், பதிவிறக்கம் செய்யும் முன்பும் அதன் சட்டப்பூர்வ நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். ரகசியத் தகவல்களை அளித்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
காவிரி பாயும் பெருமை வாய்ந்த தஞ்சையின் கஞ்சனூரில் அமைந்துள்ளது ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் திருக்கோயில். இந்த திருத்தலத்தில் தேவகுருவின் வழிகாட்டலில், சகல தேவர்களும் கூடி, நோம்பிருந்து, யாகம் நடத்தி திருமகளை திருமாலோடு சேர்த்து வைத்ததாக புராணம் கூறுகிறது. அழகு, ஆடம்பர வாழ்க்கையை அருளும் சுக்கிரனின் ஸ்தலமான இங்கு சென்று ஸ்ரீலக்ஷ்மி ஹோமம் செய்து வழிபட்டால், 16 செல்வப் பேறுகளும் கிட்டும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.