news

News September 27, 2024

சற்றுமுன்: தங்கம் விலை புதிய உச்சம்

image

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ₹57 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ₹7,060ஆக விற்பனையானது. அதேபோல், 1 சவரன் தங்கம் ₹56,480ஆக விற்கப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று 1 கிராமுக்கு ₹40 உயர்ந்து, ₹7,100ஆக விற்பனையாகிறது. மேலும், 1 சவரன் தங்கம் விலை ₹320 உயர்ந்து, ₹56,800ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News September 27, 2024

பெரும்பான்மையை நிரூபிக்கும் அதிஷி

image

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஆளுநரின் அறிவுறுத்தலின்படி இன்று சட்டப்பேரவையில் அதிஷி பெரும்பான்மையை நிரூபிக்கிறார். 70 எம்எல்ஏக்கள் உள்ள டெல்லியில், ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 27, 2024

வைரமுத்துவுக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி

image

நடிகர் ரஜினிகாந்த் பற்றி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சி பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “கொடிபறக்குது படப்பிடிப்பின்போது, ரஜினி என்னைப் பார்த்து, தன்னை வைத்துப் படம் தயாரியுங்கள். உங்களுக்காக நடித்து தருகிறேன் என வாக்குறுதி தந்தார். நண்பர்களாய் இருப்பது புனிதம்; வியாபாரிகளாய் இருப்பது கணிதம். இப்போது மட்டுமல்ல எப்போதும் புனிதத்தைக் கைவிட மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

News September 27, 2024

சாதனை நாயகன் டுவைன் பிராவோ ஓய்வு

image

WI வீரர் டுவைன் பிராவோ, அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். CSK-வின் முன்னணி வீரராக இருந்த அவர், கடந்த ஆண்டு IPL-லில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு கரீபியன் லீக் தொடரில் விளையாடி வந்த அவர், தற்போது இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதுவரை 582 போட்டிகளில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20-யில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

News September 27, 2024

TNPSC குரூப் 2 முதல்நிலை தேர்வு: டிசம்பரில் ரிசல்ட்

image

TNPSC குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு ரிசல்ட் டிசம்பரில் வெளியிடப்படவுள்ளது. 1,300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 14ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான விடைக்குறிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, டிசம்பரில் ரிசல்ட் வெளியிடப்படும் என்றும், முதன்மைத் தேர்வு 2025 பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது. இத்தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News September 27, 2024

அதிக புரதச்சத்து கொண்ட தயிர்: ஆவின் திட்டம்

image

அதிக புரதச்சத்து கொண்ட தயிர் பாக்கெட்டுகளை விற்க ஆவின் திட்டமிட்டு வருகிறது. பால் மட்டுமன்றி, தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றையும் ஆவின் தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் 120, 250, 450 மில்லி பாக்கெட்டுகளில் அதிக புரதச்சத்து கொண்ட தயிர் பாக்கெட்டுகளையும், சுக்குமல்லி, அஸ்வகந்தா பாலும் விற்க திட்டமிட்டு வருவதாக ஆவின் மேலாண் இயக்குநர் வினீத் தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

போர் பீதி: லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு அட்வைஸ்

image

போர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், லெபனானில் உள்ள இந்தியர்களை வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து எந்நேரமும் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போர் அபாயம் நிலவுவதை கருத்தில் கொண்டு, லெபனானில் உள்ள 12,000 இந்தியர்களை கப்பல்கள், விமானங்களில் நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

News September 27, 2024

தேங்காய் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

image

தமிழகம் முழுவதும் தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.10-20 வரை உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் தேங்காய் பற்றாக்குறையால் அங்கு விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சி, வாடிப்பட்டி, சின்னமனூர், தேனியில் இருந்து அதிக அளவிலான தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தேங்காய் விலை கிலோவுக்கு ரூ 50-70 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் சில வாரங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

News September 27, 2024

ஹெலிகாப்டர் தயார்… ஜாமின் கிடைக்குமா?

image

நடிகர் தர்ஷனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. நடிகை பவித்ரா கவுடாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்த ரேணுகாசாமி என்பவரை, கூலிப்படை வைத்து தர்ஷன் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று அவருக்கு ஜாமின் கிடைத்தால் பெல்லாரி சிறையில் இருந்து பெங்களூருவுக்கு அவரை அழைத்து வர அவரது மனைவி விஜயலட்சுமி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்துள்ளார்.

News September 27, 2024

செல்லூர் ராஜூவே அதற்கு தகுதியானவர்: EVKS கிண்டல்

image

இபிஎஸ்-ஐ விட செல்லூர் ராஜூக்கே CM ஆக அதிக தகுதி உள்ளதென EVKS இளங்கோவன் கிண்டல் அடித்துள்ளார். 2026ல் இபிஎஸ்தான் CM ஆவார் என்று செல்லூர் ராஜூ உறுதியாகக் கூறியிருப்பது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த EVKS, செல்லூர் ராஜூ நன்கு காமெடி அடிப்பார் என்று கூறினார். மேலும், ஆற்றிலே தெர்மாகோல் விட்ட செல்லூர் ராஜூ மிகப்பெரிய அறிவாளி என்றும் EVKS இளங்கோவன் கிண்டலடித்தார்.

error: Content is protected !!