news

News September 27, 2024

Recipe: கம்பு உருண்டை செய்வது எப்படி?

image

வாணலியில் வெள்ளை எள், பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து, சலித்து எடுக்கவும். பாத்திரத்தில் கம்பு மாவுடன் (300 g) சிறிது நீர் & உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அடை போல சுடவும். இவை ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கருப்பட்டி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான கம்பு உருண்டை ரெடி.

News September 27, 2024

PM மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

image

டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். பள்ளிக் கல்வித்துறை, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தி அவர் மனு அளித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியினை தமிழகத்திற்கு மத்திய அரசு நிறுத்தியது. மேலும், மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.

News September 27, 2024

இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது

image

இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் லெபனான் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராக்கெட் வீச்சுக்கு பதிலடியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் 5 நாள்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நேற்று நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்ளிட்ட 92 பேர் பலியானதாகவும், 153 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News September 27, 2024

கனிமொழி குறித்து அவதூறு: அதிமுக நிர்வாகி மீது புகார்

image

திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக பெண் நிர்வாகி சசிரேகா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக அரசை கண்டித்து சென்னையில் அண்மையில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழியை தரக்குறைவாக பேசியதாகவும், தனிமனித ஒழுக்கத்தை பொருட்படுத்தாமல் பேசியதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

News September 27, 2024

Apply Now: SBI வங்கியில் வேலை வேண்டுமா?

image

SBI வங்கி காலியாக உள்ள 1,497 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது சிறப்பு பிரிவு அலுவலர், உதவி மேலாளர் பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: BE (IT, EEE, ECE, CE), B.Tech , M.Sc, M.Tech. சம்பளம் வரம்பு: ₹48,480 – ₹85,920. வயது: 21-45. விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.4. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு. கூடுதல் தகவல்களுக்கு <>SBI<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News September 27, 2024

ஆம்னி பஸ்களில் ஆபாசம்?

image

தொலைதூரம் செல்லும் ஆம்னி பஸ்களில் ஆபாசம் அரங்கேறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. படுக்கை வசதி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, விபசார அழகிகளுடன் சென்று சிலர் உல்லாசமாக இருப்பதாகவும், காதலர்கள் சந்தோஷமாக இருப்பதாகவும் அத்தகவல் கூறுகிறது. லாட்ஜ்களில் போலீஸ் சோதனை அபாயம் இருப்பதால் இந்த வழியை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்கள்.

News September 27, 2024

சென்னை HC தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் பதவியேற்பு

image

சென்னை HC தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, ரகுபதி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து காெண்டனர்.

News September 27, 2024

2ஆவது டெஸ்ட்: இந்தியா பந்துவீச்சு தேர்வு

image

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முன்னதாக, போட்டி நடைபெறும் கான்பூரில் இன்று காலை மழை பெய்ததால் டாஸ் போடுவது சிறிது தாமதம் ஆனது. பிறகு டாஸ் வீசப்பட்டது. டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களே ஆடுகின்றனர்.

News September 27, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகில் உள்ள மிகச்சிறிய & மிகப்பெரிய விலங்கினம் எவை? 2) புனித நகரம் என அழைக்கப்படும் நகரம் எது? 3) FTTH என்பதன் விரிவாக்கம் என்ன? 4) நவீன சினிமா உலகின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 5) கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்படும் கோட்டை எங்குள்ளது? 6) ஆன்டிபாடிஸை உற்பத்தி செய்யும் வெள்ளையணு எது? 7) ஈயத்தின் வேதியியல் குறியீடு என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 27, 2024

மீண்டும் நாயகனாகும் லெஜண்ட் சரவணன்

image

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார். ஏற்கெனவே அவர் ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். நாயகியாக பாயல் மற்றும் முக்கிய வேடங்களில் ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

error: Content is protected !!