news

News September 27, 2024

இவர்கள்தான் அதிக உடல் தகுதி உடையவர்கள்: ஹர்திக்

image

கிரிக்கெட் வீரர்களை விட ஹாக்கி வீரர்கள் அதிக உடற்தகுதியுடன் இருப்பதாக இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் தெரிவித்துள்ளார். யோயோ டெஸ்டில், கிரிக்கெட் வீரர்கள் 19-20 மதிப்பெண் பெற்றால் தகுதியானவர்கள் எனக் கூறப்படுகிறது. முன்னாள் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், 8 ஸ்பிரிண்ட்கள் அடங்கிய இந்த தேர்வில் 23.8 புள்ளிகள் எடுத்துள்ளார். பெண்களில் பலர் 17-18 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்றார்.

News September 27, 2024

உ.பி.யில் கொடூரம்: பள்ளி விடுதியில் மாணவன் நரபலி

image

உ.பி.யில் பள்ளி விடுதியில் 2ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் அருகே ரஸ்காவனில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பள்ளிக்கு வெற்றி தேடித்தர சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி இயக்குனர், அவரின் தந்தை, 3 ஆசிரியர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 27, 2024

மோடிக்கு தடம் பெட்டகத்தை பரிசளித்த முதல்வர்

image

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடையையும் அவர் பரிசளித்தார். தடம் பெட்டகத்தில் பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்பிராய்டரி சால்வை, பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

News September 27, 2024

கண்டெய்னர் லாரியில் வந்தது ராஜஸ்தான் கொள்ளையர்கள்?

image

<<14207693>>குமாரபாளையம்<<>> அருகே போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையர்கள் எனத் தெரிய வந்துள்ளது. வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை சினிமா பாணியில் போலீசார் துரத்தி சுட்டுப் பிடித்தனர். அப்போது லாரிக்குள் கார், பணம் இருந்துள்ளது. விசாரணையில், கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு பணத்தை எடுத்து வந்ததாக அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

News September 27, 2024

மூலிகை: உடல் சோர்வு நீக்கும் சிந்துவாரம் குளியல்

image

வாத பித்த கபத்தை உடலிலிருந்து முழுமையாக வெளியேற்றாமல், சம அளவில் நிலை நிறுத்தும் ஆற்றல் சிந்துவாரத்திற்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது. லுடியோலின், யுர்சோலிக், நிஷிடைன், இரிடாய்ட் கிளைக்கோசைடு போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் இலைகளை கசக்கி, சுடுநீரில் கலந்து குளித்தால் உடல் வலி & சோர்வு நீங்குவதோடு, குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News September 27, 2024

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வடமாநில கொள்ளையன் பலி

image

குமாரபாளையம் அருகே <<14207693>>கண்டெய்னரில்<<>> பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னரை போலீஸ் மடக்கியபோது, 6 கொள்ளையர்கள் தாக்க முயன்றுள்ளனர். தற்காப்புக்கு போலீசார் சுட்டதில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர். கண்டெய்னரில் இருந்தது, கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எனத் தெரிய வந்துள்ளது.

News September 27, 2024

கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம்

image

நாமக்கல்லில், சாலையில் தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். முதல் கட்ட விசாரணையில் லாரியில் லட்சக்கணக்கில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலை கேரளாவில் 3 ஏடிஎம் நிலையத்தில் கொள்ளை முயற்சி நடந்த நிலையில், லாரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News September 27, 2024

E.D. அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

image

சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக EX அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். வழக்கில் அவருக்கு ஜாமின் அளித்த சுப்ரீம் கோர்ட் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் வாரந்தோறும் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாள்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்றாகும். அதன்படி, இன்று நேரில் ஆஜரானார்.

News September 27, 2024

KKR அணியின் ஆலோசகரானார் பிராவோ

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், KKR அணியை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக CSK அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் செயல்பட்டார்.

News September 27, 2024

வெள்ளி விலை ₹1,000 அதிகரிப்பு

image

<<14206716>>வெள்ளி விலை<<>> கிலோவுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. கடந்த 24ஆம் தேதி 1 கிராம் ₹98க்கும், 1 கிலோ ₹98,000க்கும் விற்கப்பட்டது. 25ம் தேதி 1 கிராம் ₹3 உயர்ந்து ₹101, கிலோ ₹3,000 அதிகரித்து ₹1.01 லட்சமாக விற்பனை செய்யப்பட்டது. நேற்று எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹1 உயர்ந்து ₹102க்கும், 1 கிலோ ₹1,000 அதிகரித்து ₹1.02 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது.

error: Content is protected !!