India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பங்குச்சந்தையில் லாபகரமான வர்த்தகராக இருக்க விரும்புபவர்கள் தங்களுக்கான சந்தையைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். டே டிரேடிங், ஸ்விங் டிரேடிங், கமாடிட்டி, மியூச்சுவல் ஃபண்ட் என ஒவ்வொரு வர்த்தகத்திற்கும் அதன் நன்மை & தீமைகள் உள்ளன. அதனை ஆராய்ந்து, எங்கே, எதில், எப்படி, எவ்வளவு முதலீடு செய்வது என அறிந்து செய்ய வேண்டும். இந்த முதல் படியை சரியாக எடுத்து வைத்தால் லாபத்தை நிச்சயம் பெறலாம்.
இன்று 10 மணிக்கு <<14206790>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) டார்டிகிரேட் & நீல திமிங்கலம் 2) ஜெருசலேம் 3) Fibre to the Home 4) வார்க் கிரிஃபித் 5) செஞ்சிக்கோட்டை (தமிழ்நாடு), 6) லிம்ப்போசைட்ஸ் 7) Pb இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தமிழர்களின் பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது மஞ்சள். சுவை & நிறத்திற்காக மட்டுமின்றி உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும் அதில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. உண்மையான மஞ்சள் என்பதை கண்டறிய ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நேரத்தில் அனைத்தும், கீழே தங்கிவிட்டால் அது நல்ல மஞ்சள். சில துகள்கள் மேலே மிதந்தாலும் அதில் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது.
குழந்தை பிறந்த 12 மாதங்களுக்குள் பிறப்பு சான்றிதழில் பெயரை பெற்றோர் (அ) காப்பாளர் பதிவு செய்யலாம். பிறகு 12 மாதங்களில் இருந்து 15 வயது வரை ₹200 கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்யலாம். அதன்பிறகு கூடுதல் அவகாசம் எப்போதாவதே அளிக்கப்படும். அதுபோன்ற அவகாசத்தை வரும் டிச. 31 வரை தமிழக அரசு அளித்துள்ளது. அதன்பிறகு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. SHARE IT.
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் EX தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது கனிமொழி, டி.ஆர்.பாலு உடனிருந்தனர். முன்னதாக, பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் நலத்திட்ட பணிகளுக்கான நிதியை தடையின்றி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார். டெல்லியில் இருந்து முதல்வர் இன்று மாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய நினைவுகளைத் தொட்டு, அதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடும் கதையாக மனதில் நிற்கிறான் மெய்யழகன். ஊர்த் திரும்புவோரின் தடுமாற்றம், அத்தான் என்ற வார்த்தையின் நெகிழும் அன்பு என படத்தில் அரவிந்த் சாமியும், கார்த்தியும் வாழ்ந்திருக்கிறார்கள். நிலம், உறவு, நினைவென நகரும் பிரேம் குமார் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையும், நேத்தா எழுதிய ‘யாரோ’ கமலின் குரலும் கைகொடுத்திருக்கிறது. (W2N:3/5)
மோடியுடன் 45 நிமிடங்கள் வரை பேச்சுவார்த்தை நடத்தியதாக <<14208543>>ஸ்டாலின்<<>> தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், வழக்கமாக 15 நிமிடங்கள் மட்டுமே பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என்றும், ஆனால் தனக்கு 45 நிமிடங்கள் அளிக்கப்பட்டது என்றும் கூறினார். தமிழகத்தின் காேரிக்கைகளை முன்வைக்கும் நேரத்தில் திமுகவின் கொள்கைகள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
PM மோடியுடனான சந்திப்பு இனிதே அமைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மோடியை சந்தித்து பேசிய விவரங்கள் குறித்து, டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மீனவர் பிரச்னை குறித்து இலங்கை புதிய அதிபரிடம் எடுத்துரைக்கும்படி தாம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தனது 3 கோரிக்கைகளை கேட்ட பிரதமர். அதை பரிசீலித்து முடிவெடுப்பதாக உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார்.
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணித்துள்ளது. நாளை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கு ஆதாரமாக திருமணத்தின்போது, அபிஷேக் அணிவித்த மோதிரத்தை ஐஸ்வர்யா கழற்றி விட்டார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், துபாயில் நடந்த நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா கையில் திருமண மோதிரம் அணிந்து இருந்தார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.