India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தவறு நடந்தால் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டீர்கள். அதே நேரம் பிறர் மனம் புண்படும்படிப் பேச மாட்டீர்கள். சொந்த வேலையில் மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ATM கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் கொள்ளை நடந்தவுடன் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக திருச்சூர் எஸ்பி இளங்கோ கூறினார். நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானாவின் <<14207793>>மேவாட் கொள்ளைக் கும்பல்<<>>, தென்னிந்தியாவில் 6 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட ATMகளில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 98 பேர் (13%) மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவர்களில் 80% பேர் கேரளா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 62 நீதிபதிகளில், 5 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை அறிவித்துள்ளனர். தங்கள் சொத்து விவரங்கள் பொதுநலனுக்கு உதவாது என சில நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா-வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. U.P. கான்பூரில் டாஸ் வென்ற IND முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆடிய BAN அணி 35 ஓவர்களில் 107/3 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. மேலும், மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தீபாவளி, சாத்பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,975 சிறப்பு ரயில்கள் விடப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். 108 ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 12,500 பெட்டிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ரயில்கள் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மின்மாற்றி கொள்முதலில் தமிழக அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 2022இல் 500 KVA திறன் உடைய 800 மின்மாற்றிகள் தலா ரூ.12,49,800க்கு வாங்கப்பட்டதாகவும், அவை வெளிச்சந்தையில் ரூ.7,87,311 விலையில் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
கான்பூர் டெஸ்டில் வங்கதேச ரசிகர்கள் மீது இந்திய ரசிகர்கள் தாக்குல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலி வேடமணிந்து வந்த வங்கதேச ரசிகர்களுக்கும், இந்திய ரசிகர்களுக்கும் இடையே முதலில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்புக்கும் தொடர்ந்து வாக்குவாதம் நீடித்த நிலையில், திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் BAN அணி ஆதரவாளர்கள் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.
கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அதனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களின் நலன் கருதி, தமிழக அரசு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி வசதியை அளிக்கிறது. இதற்கு நீங்கள் “1962” எண்ணை அழைத்து விவரம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால், கால்நடை மருத்துவ ஊர்தி குறிப்பிட்ட இடத்துக்கே வந்து சிகிச்சை அளிக்கும். SHARE IT.
ஒரு பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாக பலாத்காரமாக (அ) மிரட்டி (அ) அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி (அ) குற்றத்திற்கு துணைப் புரிந்து துன்புறுத்தி, திருமணம் செய்ய (அ) பாலியல் வன்கொடுமை செய்ய தெரிந்தே கவர்ந்து செல்வது (அ) கடத்திச் செல்வது BNS சட்டப்பிரிவு 87இன் படி குற்றமாகும். இதற்கு 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைக் காவல் (அ) அபராதம் (அ) இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
விருதுநகர் அருகே மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியான 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ₹50 ஆயிரமும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.