India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025 ஐபிஎல் சீசனில் KKR ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டுவைன் பிராவோவை, CSK நிர்வாகம் வாழ்த்தியுள்ளது. களத்தில் சாம்பியனாக இருந்து தங்களது இதயங்களில் லெஜண்ட்டாக நிலைநின்ற பிராவோக்கு ‘விசில்போடு’ என CSK சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது. முன்னதாக, அனைத்து வித ஃபார்மேட்களில் இருந்தும் பிராவோ ஓய்வு அறிவித்தார். CPL, MLC உள்ளிட்ட KKR லேபிலின் அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் அவர் ஆலோசகராக செயல்பட உள்ளார்.
‘வேட்டையன்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் அக். 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. யாரெல்லாம் இப்படத்தை பார்க்க வெயிட்டிங்? கமெண்ட்ல சொல்லுங்க.
வாடிக்கையாளர்கள் வெறும் ₹1,111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் Grand Runway Fest saleஐ இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது. இச்சலுகையில் BOB, Fedaral வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இச்சலுகை செப். 30ஆம் தேதி வரை மட்டுமே. ஜன. 1 முதல் மார்ச் 31ஆம் வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாள்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
திருப்பதி செல்ல இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்திற்கு மாநிலம் முழுவதும் உள்ள கோயிலில் பரிகார பூஜை செய்ய ஜெகனின் YSR Cong கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, அவர் திருப்பதி பயணம் மேற்கொள்ள இருந்தார்.
சினிமாவில் Rashomon Effect என்ற ஒரு கதை சொல்லும் டெக்னிக் உள்ளது. ஒரே சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் 2 கதாபாத்திரங்கள் விவரிப்பதாகும். கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். ‘நாயகன்’, ‘திருட்டுப்பயலே’, ‘யுத்தம் செய்’ ஆகிய படங்களில் இந்த உத்தியின் சில கூறுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜப்பான் இயக்குநர் அகிரா குரோசவாவின் ‘Rashomon’ படத்தில் இந்த டெக்னிக்கை உருவாக்கினார்.
ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிடும் பல்வேறு இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. கசிந்த தகவல்களால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், உரிய புகார் அளித்து இழப்பீடு பெறலாம் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அதிகாரிகள் 3.1 கோடி வாடிக்கையாளர்களின் டேட்டாவை விற்றுள்ளதாக ஹேக்கர் ஒருவர் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தும் அவலம் தொடர்வதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த அறிக்கையில், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். மேலும், போதைப் பொருட்களின் ஆணிவேரைக் கண்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை, அஸ்வின் படைத்துள்ளார். இந்தியா-வங்கதேசம் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இன்று ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், அனில் கும்ளேவின் (419 W) முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஆசிய அளவில், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முரளிதரன் (612 W), அஸ்வின் (420 W), கும்ளே (419 W) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக CM சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது. தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அவர் பதவி விலக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், சித்தராமையா ஆட்சிக்காலத்தில் ₹4,000 கோடி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேர்மையான, துணிச்சலான அரசியல்வாதி ராகுல் என நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார். எதிர்மறை விமர்சனங்களை கடின உழைப்பால் சுவாரஸ்யமாக மாற்றியவர் ராகுல் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் எதிர்காலம் அவர்தான் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக டிவி நிகழ்ச்சியில், மோடி, ராகுல், கெஜ்ரிவாலில் துணிச்சலான அரசியல்வாதி யார் என சைஃப்பிடம் கேட்கப்பட்டது. நீங்க யாரை நினைக்கிறீங்க? Cmd Here.
Sorry, no posts matched your criteria.