India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘தண்டகாரண்யம்’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ பட இயக்குநர் அதியன் ஆதிரை இயக்குகிறார். ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டுகளால் மட்டுமே முடியாது என்ற வாசகத்தை குறிப்பிட்டு, இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. திருவள்ளூர், விருதுநகர், திருப்பத்தூர், வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2025 IPL சீசனில் 74 போட்டிகளை நடத்த BCCI முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2023-27 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை கடந்த 2022ல் BCCI விற்றது. அதில் 2025-ல் 84 போட்டிகள் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. அதில் இருந்து 10 போட்டிகளை தற்போது குறைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 ஜூனில் நடைபெற உள்ளதால், வீரர்களின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கையடக்கக் கணினி (TAB) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு TAB வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 79,723 பேருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 55,478 பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மஹிந்திரா, ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் வணிக ரீதியான இணைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் ஸ்கோடா தனது 50% உரிமப் பங்குகளை மஹிந்திராவுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. மேலும், மஹிந்திரா சுமார் ₹5,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை குறைவதுடன், மஹிந்திரா கார்களின் உற்பத்தி திறனும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
துபாயில் நடைபெற உள்ள யூரோப்பியன் ரேஸிங் தொடரில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் குமார் தயாராகி வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்களை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், ஒரு புதிய ஹெல்மெட்டையும் அவர் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. வெள்ளை சிவப்பு நிறத்தில் உள்ள இந்த ஹெல்மெட் டிரெண்ட் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிறகு தனது வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என மனு பாக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான X பதிவில், “நான் மனு பாக்கர் தான், எனது இடைவேளையை அனுபவிக்கிறேன். நவம்பரில் மீண்டும் பயிற்சியை தொடங்குவேன். உங்கள் அன்பு, கவனத்திற்கு நன்றி” எனக் கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்றதால், வாழ்க்கை மாறிவிட்டதா என கேட்டு சிலர் அவரை நச்சரித்ததாக தெரிகிறது.
கேரளாவில் 2ஆவது குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எந்த வைரஸின் திரிபு என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. முன்னதாக, கடந்த 18ஆம் தேதி மலப்புரத்தில் ஒருவருக்கு MPOX பாதிப்பு இருப்பது தெரியவந்தது. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
‘Big Billion Days’-ஐ முன்னிட்டு, கணவர்களுக்கு தெரியாமல் ஹேண்ட்பேக் வாங்குவது எப்படி என Flipkart புரோமோஷன் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. இதில் ஆண்களை சோம்பேறி, முட்டாளாக காட்சிப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதை பலரும் கண்டித்திருந்தனர். இந்நிலையில், தவறு என தெரிந்ததும் உடனே வீடியோவை நீக்கிவிட்டதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது எனவும் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்தார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக 471 நாள்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை நேரில் சந்தித்து வரவேற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.