India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (செப். 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
*மேஷம் – நிம்மதி கிடைக்கும் *ரிஷபம் – எதிர்ப்பு வலுவாக இருக்கும் *மிதுனம் – வரவு கிடைக்கும் *கடகம் – ஏமாற்றம் ஏற்படும் *சிம்மம் – புகழ் தேடி வரும் *கன்னி – ஊக்கம் பெறுவீர் *துலாம் – உதவி தேடி வரும் *விருச்சிகம் – மறதியால் தொல்லை இருக்கும் *தனுசு – பெருமை வந்து சேரும் *மகரம் – ஆக்கமான நாளாக அமையும் *கும்பம் – சோர்வாக உணர்வீர் *மீனம் – போட்டி அதிகரிக்கும்.
சபாநாயகர் பதவிக்கான மாண்பை அப்பாவு குலைத்து விட்டார் என்று அதிமுக EX சபாநாயகர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சபாநாயகர் அரசியல் பேசக்கூடாது என்றும், ஆனால் அதை அப்பாவு காற்றில் பறக்கவிட்டு விட்டார் என்றும் அவர் சாடியுள்ளார். அரசியல் பேசி இன்று நீதிமன்ற படிகளில் அவர் ஏறுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். அப்பாவு குறித்த ஜெயக்குமாரின் விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்கள்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் (109) உடல்நலக்குறைவால் காலமானார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியைச் சேர்ந்த அவர், விவசாயத்திற்கு அளித்த பங்களிப்பை பாராட்டி 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவர், தான் விவசாயம் கற்ற வேளாண் பல்கலை. விவாதக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அண்மையில் திமுக முப்பெரும் விழாவில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. செப்.20 கணக்கின்படி, $2.8 பில்லியன் டாலர் அதிகரித்து $692.3 பில்லியனாக உள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தில் $223 மில்லியன் அதிகரித்து $689.46 பில்லியனாக இருந்தது. தங்கத்தின் கையிருப்பை பொறுத்தமட்டில், $726 மில்லியன் அதிகரித்து $63.6 பில்லியனாக அதிகரித்துள்ளது. SDR $121 மில்லியன் உயர்ந்து, $18.54 பில்லியனாக உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் CM ஸ்டாலினை சந்தித்து பேசிய பின் செந்தில் பாலாஜி, தனது x பக்கத்தில் சிறைவாசம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், 471 நாள்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில் உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும், நிமிடமும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே என்றும் குறிப்பிட்டுள்ளார். தாயுமானவராய் தாங்கினீர்கள், என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் என்றும் நெகிழ்ந்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், ஆஸ்கர் விருது வென்றவருமான மேகி ஸ்மித் (89) உடல்நலக் குறைவால் காலமானார். ஹாரி பாட்டர், டவுண்டன் அபே, சிஸ்டர் ஆக்ட் போன்ற பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் மேகி. வயது மூப்பு காரணமாக சில நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளவர்கள் திருமலைக்கு வரலாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தான் திருமலைக்கு செல்வதை ஆந்திர அரசு தடுப்பதாக ஜெகன் மோகன் குற்றஞ்சாட்டிய நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்த சந்திரபாபு நாயுடு, அவரை யாரும் தடுக்கவில்லை என்றார். மேலும், இந்து மத உணர்வு புண்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
இரண்டு தமிழக கிராமங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2024-க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 8 பிரிவுகளின் கீழ் 36 கிராமங்கள் வெற்றி பெற்றுள்ளன. பாரம்பரியம் பிரிவில் கீழடி, ஆன்மிக மற்றும் ஆரோக்யம் பிரிவில் மேல் கலிங்கப்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.