India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1907 – இந்திய விடுதலைப் போராட் வீரர் பகத் சிங் பிறந்த நாள்.
1919 – அமெரிக்காவின் ஒமாகா நகரில் கறுப்பினத்தவருக்கு எதிராக நடைபெற்ற இனக்கலவரத்தில் மூவர் இறந்தனர்.
1929 – பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்.
1960 – மாலி, செனிகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1994 – பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்
லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால் லெபனான் மக்கள் சிரியாவை நோக்கி தஞ்சமடைய தொடங்கியுள்ளனர். கடந்த 5 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிரியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் லெபனானில் கடந்த திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது.
3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை மதிப்பிடு செய்யும் தேசிய சாதனை கணக்கெடுப்பு (என்ஏஎஸ்) நாடு முழுவதும் வரும் டிச.,4ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கள ஆய்வாளர்களாக ஆசிரியர் பட்டய படிப்பு, பி.எட்., முடித்தவர்கள், 11ம் வகுப்பு மாணவர்களை செப்., 30க்குள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 792 மாவட்டங்களில் தமிழ் உள்ளிட்ட 26 மொழிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அறிக்கையில், இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவு காரணமாக, காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
*அசாத்தியம் என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும் வார்த்தை. புத்திசாலிகள் தங்களுக்கான வாய்ப்புகளை தாங்களே உருவாக்கி எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறார்கள்.
*வெற்றி என்பது எப்போதும் போரில் வெல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி. *அனைவரையும் ஏழைகளாக்குவதற்கான சிறந்த வழி, செல்வத்தின் சமத்துவத்தை வலியுறுத்துவதுதான்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி தர்மபுரி, நாமக்கல். திருச்சி, பெரம்பலூர். அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 66 ▶ குறள்: குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். ▶ பொருள்: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
அரைத்த மாவையே அரைக்க வேண்டாம் என்று ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அதிமுக Ex அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்தார். சி. பா. ஆதித்தனாரின் 120 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் சிலைக்கு அதிமுக சார்பில் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டி அளித்த அவர், அதிமுகவிற்கு துரோகம் செய்த ஓபிஎஸ் முகத்திலேயே முழிக்கக்கூடாது என தெரிவித்தார்.
▶ செப்.28 (புரட்டாசி 12) ▶சனி ▶நல்ல நேரம்: 7:45 – 8:45 AM & 4:45 – 5:45 PM ▶ கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: ஏகாதசி▶ பிறை: தேய்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ சந்திராஷ்டமம்: பூராடம் ▶ நட்சத்திரம் : பூசம் அ.கா 5.29 வரை ▶ யோகம் : மரண யோகம்.
இன்று (செப். 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.