India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர், ‘வேள்பாரி’ நாவலை மையமாக வைத்து சரித்திர படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், சூர்யா ஆகியோரை நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறியமுடிகிறது. குலசேகர பாண்டியனாக விக்ரமும், வேள்பாரியாக சூர்யாவும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்முவில், பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், குல்காமில் தீவிரவாதிகள்-பாதுகாப்புப் படையினரிடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டுள்ளது. அவந்திபுராவிலும் JEM தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 6 பேரை, போலீசார் கைது செய்ததுடன், ஆயுதங்கள், வெடிபொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இத்தகைய பதற்றமான சூழல் ஒரு புறமிருக்க, பிரதமர் மோடி இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
நாய்கள் வளர்ப்பு, இனப்பெருக்கத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், *நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெற வேண்டும் *இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் *வாலை நறுக்குதல், காதுகளை வெட்டுதல், நகங்களை அகற்றுதல் போன்றவற்றை செய்யக்கூடாது * நாயின் தோற்றத்தை செயற்கையாக மாற்றக்கூடாது என ஆணையிட்டுள்ளது.
1) உலகின் மிக நீளமான நதி எது? 2) BSNL என்பதன் விரிவாக்கம் என்ன? 3) உலகின் முதல் நாவல் எது & அதன் ஆசிரியரின் பெயர் என்ன? 4) பத்ம ஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்? 5) மீத்தேனின் வேதியியல் குறியீடு என்ன? 6) அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய் 7) தமிழில் மொத்தம் எத்தனை உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் உள்ளன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
IPL 2025 தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 84ஆக உயர்த்தப்படாது என்று BCCI செயலாளர் ஜெய்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். 10 அணிகள் இடையிலான IPL கிரிக்கெட்டில் கடந்த சீசனில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடந்தன. இது 2025இல் 84ஆக மேலும் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த ஜெய்ஷா, “இந்திய வீரர்களின் பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. 84 ஆட்டங்கள் என்பது ஒப்பந்தத்தில் உள்ளது தான்” என்றார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறி வைத்து கடந்த 6 நாள்களாக போர் விமானங்கள் மூலம் நடந்து வரும் வான்வழி தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் என 3,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு-2 நேரடி நியமன பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. Accounts Officer – III, Assistant Manager (Projects) பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் இன்றே விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: MBA, BE, CA. வயது வரம்பு: 25-57. தேர்வு நடைபெறும் நாள்: நவ.18, 2024. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
இயற்கை விவசாயி பாப்பம்மாள் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்ததாகவும், குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். பாப்பம்மாளுடன் உரையாடிய ஒவ்வொரு தருணமும் தன் நெஞ்சில் நீங்காமல் பசுமையாக இருக்கும் என நினைவுகூர்ந்ததோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
➤Macau Super 300 Badminton: மகளிர் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் திரிஷா-காயத்ரி ஜோடி 2-0 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் ஹூய்- யுன் இணையை வீழ்த்தியது. ➤ஆசிய கோப்பை (U 20) கால்பந்து தகுதிச்சுற்றின் 2ஆவது போட்டியில் கடைசி வரை போராடிய இந்திய அணி 0-1 என்ற கணக்கில் ஈரானிடம் தோற்றது. ➤ஷகிப் அல்-ஹசனுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என BCB தலைவர் பரூக் அகமது தெளிவுப்படுத்தியுள்ளார்.
➤அஜர்பைஜான் பாகிஸ்தானிடம் இருந்து JF-17 Block III போர் விமானங்களை ($1.6 Billion) வாங்கியுள்ளது. ➤இந்தோனேசியாவின் சோலோக்கில் உள்ள தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர். ➤அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ➤வடக்கு வியட்நாமில் யாகி புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆசிய வளர்ச்சி வங்கி ₹16 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.