India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய்யின் முதல் அரசியல் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. மொத்தத்தில் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பதே தவெகவின் நோக்கம் என்றார் விஜய். அவரின் பேச்சும், கட்சியின் செயல்திட்டமும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், நடைமுறையில் இதையெல்லாம் எப்படி சாதிக்கப் போகிறார்? இதற்கான சமூக, பொருளாதார சிந்தனைகள், திட்டங்கள் எங்கே? என்பதையெல்லாம் தவெக தெளிவுப்படுத்த வேண்டும்.
‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்களில் குரல் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்று விஜய்யின் பேச்சுக்கு விசிகவின் ஆதவ் அர்ஜுனா வரவேற்றுள்ளார். அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் அதை நோக்கிப் பயணப்படும் என்றார்.
விஜய் ஒரு காலத்திலும் எம்ஜிஆர் ஆக முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். விஜய் மாநாட்டில் பேசிய பேச்சுக்களை பார்த்தால் அவர் தேசியவாதியா இல்லை பிரிவினைவாதியா என்ற சந்தேகம் எழுவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் தன்னை எம்ஜிஆராகவும், என்டிஆராகவும் நினைத்து கொண்டிருப்பதாகவும், தேர்தல் முடிவில் அவர் யார் என்பதை மக்கள் அடையாளம் காட்டுவார்கள் எனவும் சாடியுள்ளார்.
மக்களுக்கு உதவுவது எப்படி என்பதை தவெக தலைவர் விஜய் விளக்கியுள்ளார். அதாவது, மீன்பிடித்து தருவதைவிட மீன்பிடிக்க கற்றுத்தா என்ற தத்துவ மொழியை சுட்டிக்காட்டிய அவர், முடிஞ்சவங்க மீன்பிடிக்க கத்துகிட்டு வாழட்டும், முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சி கொடுத்து வாழவைப்போம் என்றார். விக்கிரவாண்டி தவெக மாநாடு விஜய்க்கு திருப்புமுனையாக அமையுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
சமீபத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என விசிக, காங்., பேசியதால் திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 2026இல் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என விஜய் கூறியுள்ளார். இதனால், பழைய பாணியில் கூட்டணி கட்சிகளிடம் திமுக சீட் பேரம் பேச முடியாது. ஆட்சியில் பங்கு வழங்க வேண்டிய சூழலும் உருவாகலாம். விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுகவுக்கு புதிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.
தவெக ஆட்சிக்கு வந்தால், மதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அரசை மக்கள் எளிதில் அணுகும் வகையில், மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போல், தலைமை செயலகத்தின் கிளை அங்கு அமைக்கப்படும் என இன்று நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டில் அறிவித்துள்ளது. இதுபோக, இன்னும் பல செயல்திட்டங்களையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
விஜய்யின் 45 நிமிட பேச்சு தமிழக அரசியல் களத்தின் பல அம்சங்களை தொட்டுச் சென்றது. குறிப்பாக நீட் தேர்வு குறித்து அவர் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது. தகுதி இருந்தும் நீட் தேர்வு காரணமாக சகோதரி அனிதாவை இழக்க நேர்ந்தது என்ற அவர், எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை, சகோதரி அனிதா உயிரிழந்த போதும் நான் பெற்றேன் என்றார். ஆக, நீட் எதிர்ப்பிலும் தவெக தீவிரமாக ஈடுபடும் எனத் தெரிகிறது.
தவெக மாநாட்டில் பேசிய விஜய், 2026 தேர்தலில் தவெக பெறும் வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும் என்று கர்ஜித்தார். திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்னதான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும், அது எடுபடாது என்ற விஜய், பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி என்றார்.
*ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் மீட்கப்படும். *ஆவினில் கருப்பட்டி பால் வழங்கப்படும். *அரசு ஊழியர்கள் வாரம் இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவிடப்படும். *காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும். *தகவல் தொழில்நுட்ப துறைக்கு தனி பல்கலை. உருவாக்கப்படும். *MLA, அமைச்சர்களுக்கு நடத்தை விதிகள் வகுக்கப்படும். *பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் பாதுகாப்பிற்கு தனித்துறை உருவாக்கம்.
திராவிட மாடல்னு சொல்லிட்டு, தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற சுயநல கூட்டம் தான் நமது எதிரி என திமுகவை விஜய் விமர்சித்தார். இதற்கு திமுகவில் இருந்து முதல் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன். Good flim. 100 நாள் திரையரங்குகளிலும்! OTT யில் கொஞ்சநாளும் ஓடும்! என்று விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.