India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை வானில் 2 நிலவுகள் தோன்றும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ‘மினி நிலவு’ என அழைக்கப்படும் ‘2024 PT5’ என்ற சிறிய விண்கல் பூமிக்கு சுமார் 14 லட்சம் கி.மீ. தொலைவில் வரவுள்ளது. இதனை தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும். இதன் மீது சூரிய ஒளிப்படும்போது, நிலவைப் போல காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிலவைப் போல சுற்றிவரவுள்ளது.
ஐ.நா சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய அவர், “ஐ.நாவின் அனைத்து அமைப்புகளும் சீர்திருத்தப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பாதுகாப்பு அவை முடக்கப்படக்கூடாது. பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் முக மலர்ச்சியுடன் உற்சாகமாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுறுசுறுப்பு, அறிவுக்கூர்மை, கலா ரசனை, நகைச்சுவை உணர்வு, கற்பதில் ஆர்வம், கொள்கையை விட்டுக் கொடுக்காத மனநிலை கொண்ட நீங்கள், அனைத்துத் தரப்பினரிடமும் எந்தப் பேதமும் இல்லாமல் பழகுவீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில், அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்துள்ளது. அத்துடன், நஸ்ரல்லாவின் மகள் ஜைனப் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நஸ்ரல்லா நிலை குறித்து இதுவரை ஹிஸ்புல்லா அமைப்பு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றி குறித்து பேசிய அவர், “ஒரு நல்ல வெற்றிப் படத்துக்காக ரொம்ப நாட்கள் காத்து இருந்தேன். அது இப்போது நடந்து இருக்கிறது. படத்தை ரசிகர்கள் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றியை இதயத்தில் வைத்து இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
திமுகவுடன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் என்ற தேவை விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமா தெரிவித்துள்ளார். கருணாநிதியைவிட கொள்கை பகைவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தும், ஆபத்தான பேராளுமை மிக்க தலைவராக ஸ்டாலின் இருப்பதுவே திமுக கூட்டணியில் விசிக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் எனத் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இன்று 10 மணிக்கு <<14214859>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) நைல் நதி 2) Bharat Sanchar Nigam Limited 3) ஜென்ஞ்சி மோனோகடாரி (Tale of Genji) & முராசாகி ஷிகிபு 4) நர்த்தகி நடராஜ் 5) CH₄ 6) நுரையீரல் தமனி 7) 90. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காலியாக இருக்கும் 250 இடங்களுக்கு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். NTPCஇல் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் துணை மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு 3-10 ஆண்டு வரை முன் அனுபவம், BE, B-TECH தேர்ச்சி அவசியம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை NTPCஇன் www.careers.ntpc.co.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தீவிரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர செய்ய வேண்டியவற்றைக் குறித்து இங்கே பார்க்கலாம். ➤டையூரிடிக் பண்பை அதிகரிக்கும் மதுவை அருந்தக் கூடாது. ➤குளிர்பானங்களை பருக கூடாது. ➤காலணி அணியாமல் இருக்கக் கூடாது. ➤உடலை வருத்தி நடை & உடற்பயிற்சி செய்யக் கூடாது. ➤தலைவலி, மயக்கம் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
Sorry, no posts matched your criteria.