news

News October 28, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 28, 2024

புஜாராவை மிஸ் செய்கிறோம்: ஆகாஷ் சோப்ரா

image

விக்கெட் விழுந்தாலும் இந்திய வீரர்கள் அதிரடியாகவே விளையாடுவது கவலை தருவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார். புஜாரா போன்ற வீரரை இந்தியா மிஸ் செய்வதாகவும், அவர் அடிக்கும் ரன்களை மற்ற வீரர்கள் எடுத்தாலும் அணியை தோல்வியில் இருந்து காக்கும் வல்லமை அவரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தோல்வியை தவிர்க்க டிராவுக்காக விளையாட வேண்டும் என்று தற்போது IND வீரர்கள் நினைப்பதில்லை என்றார்.

News October 28, 2024

ராசி பலன்கள் (28-10-2024)

image

➤மேஷம் – நிறைவு
➤ரிஷபம் – மேன்மை
➤மிதுனம் – அமைதி
➤கடகம் – அசதி
➤சிம்மம் – நற்செயல்
➤கன்னி – உயர்வு
➤துலாம் – வரவு
➤விருச்சிகம் – ஆக்கம்
➤தனுசு – அனுகூலம் ➤மகரம்- நட்பு
➤கும்பம் – நஷ்டம் ➤மீனம் – ஜெயம்

News October 27, 2024

SBI வங்கிக்கு சர்வதேச விருது

image

2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக SBI-ஐ, அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களை ஒட்டி நடைபெற்ற 31ஆவது ஆண்டு வங்கி விருது வழங்கும் விழாவில், SBI இந்த விருதைப் பெற்றது. உலகளவில் சிறப்பாக செயல்படும் நிதி நிறுவனங்களுக்கு பல ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

News October 27, 2024

‘புஷ்பா’ ஸ்டைலில் வார்னருக்கு வாழ்த்து

image

38ஆவது பிறந்தநாளை கொண்டாடும் டேவிட் வார்னருக்கு, நடிகர் அல்லு அர்ஜுன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வார்னர் ‘புஷ்பா’ ஸ்டைலில் தாடையில் கைவைத்த புகைப்படத்தை பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது சகோதரருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள் என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ‘புஷ்பா’ படத்தால் கவரப்பட்ட வார்னர், அப்படத்தில் வரும் காட்சிகள், பாடல்களை ரீல்ஸ் செய்து வெளியிட்டது வைரலானது.

News October 27, 2024

விஜய் அரசியலுக்கு மத்தியில் திமுகவில் ஐக்கியம்

image

விஜய்யின் அரசியல் பேச்சு ஒருபுறம் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், மற்றொரு புறம் திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்து வருகின்றனர். செந்தில் பாலாஜி வருகைக்கு பின், கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒருபகுதியாக, பாஜக, அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் செந்தில் பாலாஜி முன்னிலையில், திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.

News October 27, 2024

வலுவான நிலையில் சத்தீஸ்கர் அணி

image

தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சத்தீஸ்கர் அணி 500 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ஆயுஷ் பாண்டே 124, அனுஜ் திவாரி 84, சஞ்ஜீத் தேஷி 82, அஜய் மண்டல் 64 ரன்கள் குவித்தனர். தமிழக அணி சார்பில் அஜித் ராம் 4, சித்தார்த் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி இரண்டாம் நாள் முடிவில் 23/1 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 6, அஜித் ராம் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

News October 27, 2024

All The Best செல்லம்

image

தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X தளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘உங்களது புதிய பயணத்திற்கு All The Best செல்லம்’ என குறிப்பிட்டு விஜய் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

News October 27, 2024

அவமானங்களை வென்ற விஜய்

image

சினிமாவில் நுழைந்தபோது எப்படியெல்லாம் எதிர்ப்பு வந்தது என்பதை விஜய் தன் பேச்சில் ஆவேசமாக குறிப்பிட்டார். ஆரம்பத்துல இந்த ஃபீல்டுக்கு வந்தபோது, மூஞ்சி சரியில்ல, ஆளு சரியில்ல, அழகு சரியில்ல, முடி சரியில்ல, உடை சரியில்லனு சொல்லி அசிங்கப்படுத்தினாங்க, அவமானப்படுத்தினாங்க. ஆனா, கொஞ்சம் கூட கலங்காம, ஒவ்வொரு வாய்ப்புக்காகவும், ஒவ்வொரு சூழலுக்காகவும் காத்திருந்து, உழைத்து மேல வந்தேன் என்றார்.

News October 27, 2024

மூலிகை: கொழுப்பைக் குறைக்கும் செம்பருத்திப் பூ

image

ரத்தத்தில் அதிகரித்திருக்கும் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைக்கும் ஆற்றல் செம்பருத்திப் பூவுக்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது. கேம்பெரால்-3, ஸ்டெர்கூலிக், குவர்செடின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் பூவின் பொடியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடித்துவந்தால், உடற்சோர்வு உடனடியாக விலகும். உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு, மேனியின் பளபளப்பும் கூடும் என்றும் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.

error: Content is protected !!