India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X தளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘உங்களது புதிய பயணத்திற்கு All The Best செல்லம்’ என குறிப்பிட்டு விஜய் படத்தையும் பதிவிட்டுள்ளார்.
சினிமாவில் நுழைந்தபோது எப்படியெல்லாம் எதிர்ப்பு வந்தது என்பதை விஜய் தன் பேச்சில் ஆவேசமாக குறிப்பிட்டார். ஆரம்பத்துல இந்த ஃபீல்டுக்கு வந்தபோது, மூஞ்சி சரியில்ல, ஆளு சரியில்ல, அழகு சரியில்ல, முடி சரியில்ல, உடை சரியில்லனு சொல்லி அசிங்கப்படுத்தினாங்க, அவமானப்படுத்தினாங்க. ஆனா, கொஞ்சம் கூட கலங்காம, ஒவ்வொரு வாய்ப்புக்காகவும், ஒவ்வொரு சூழலுக்காகவும் காத்திருந்து, உழைத்து மேல வந்தேன் என்றார்.
ரத்தத்தில் அதிகரித்திருக்கும் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைக்கும் ஆற்றல் செம்பருத்திப் பூவுக்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது. கேம்பெரால்-3, ஸ்டெர்கூலிக், குவர்செடின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் பூவின் பொடியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடித்துவந்தால், உடற்சோர்வு உடனடியாக விலகும். உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு, மேனியின் பளபளப்பும் கூடும் என்றும் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி, தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். மேலும், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு மற்றும் சாதி, மத, வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இன்றைய பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. எம்ஜிஆர், விஜயகாந்த் இருவரின் மேடைப் பேச்சுகளும் கூட அலங்காரங்கள் இன்றி, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் எளிமையான பேச்சுகளாக இருந்ததால் தான் மக்களை ஈர்த்தது. அதேபோல் விஜய்யின் பேச்சும் எளிமையாக இருப்பதாக பலரும் சோஷியல் மீடியாவில் குறிப்பிடுகின்றனர்.
நியூசி., அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசி., அணி 259 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இந்தியா 47.1 ஓவரில் ஆல் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசி., அணியில் கேப்டன் சோஃபி டெவின் 79, சுசி பேட்ஸ் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர்.
விஜய்யின் பேச்சு மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் பல மாற்றங்கள் நிகழலாம். குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக என இருந்த இருமுனை அரசியலுக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது. ஆம்!, 2026 இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி, இபிஎஸ் தலைமையில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, விஜய் தலைமையில் தவெக கூட்டணி, சீமானின் நாதக என்று ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளது.
எப்போதும் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை கடைசி பந்து முடியும் முன் போட்டி முடிந்துவிட்டதாக நினைப்பது தவறு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார். “T20 இறுதிப்போட்டியை நண்பர்களுடன் பார்ததுக்கொண்டிருந்தேன். இரண்டாவது பேட்டிங் நடக்கும்போதே போட்டி முடிந்துவிட்டதாக எனது நண்பர்கள் கூறினார்கள். ஆனால், நான் முழு போட்டியையும் பார்த்தேன். எனது கணிப்பே சரியாக இருந்தது” என கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் வந்திருந்தார். அவருக்கு வெயில் தாங்காமல் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்று அரசியல் காலத்தில் பேசு பொருளாகியுள்ள பிறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் பிஹார் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில், குறைவான பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும் பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3ஆவது இடங்களிலும் இருக்கின்றன. தமிழகத்தில் 1992-93ஆம் ஆண்டு வாக்கில் குழந்தை பிறப்பு விகிதம் 2.5% ஆக இருந்தது. அது 2019-21ஆம் ஆண்டுகளில் 1.8% ஆக குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.