news

News September 29, 2024

திருமண வரம் அருளும் வேதபுரீஸ்வரர்

image

திருவையாறு சப்தஸ்தானத்தில் வேத தலமான திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில் அப்பரால் பாடப் பெற்ற தலமாகும். வேத நாயகரான பிரம்மன் ஈசனை பூஜித்து சாபம் நீங்கிய தலமாதலால் வேதிகுடி எனப் பெயர் பெற்ற இந்த திருத்தலத்திற்கு முதலாம் ஆதித்த சோழன் திருப்பணி செய்துள்ளார். இங்குள்ள வாழைமடுநாதர் – மங்கையர்க்கரசியை விரதமிருந்து அபிஷேகம் செய்து, விளக்கேற்றி வணங்கினால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

News September 29, 2024

யாரை வேண்டுமானாலும் சுட்ருவீங்களா? எல். முருகன்

image

தமிழகத்தில் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் போலீசாரின் என்கவுன்ட்டர் நடவடிக்கை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் எல். முருகன், “யாரை வேண்டுமானாலும் போலீசார் சுடலாம் என்ற சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துவதுதான் போலீசாரின் வேலை. அவர்களை சுட்டுத் தள்ளுவது அல்ல. துப்பாக்கியால் சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது” எனக் கூறினார்.

News September 29, 2024

நிலச்சரிவில் சிக்கி 66 பேர் பலி

image

நேபாள நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழையை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News September 29, 2024

ஒரே ஓவரில் 28 ரன்களை வாரி வழங்கிய மிட்செல் ஸ்டார்க்

image

இங்கிலாந்துக்கு எதிரான ODI போட்டியில், ஆஸி. வீரர் மிட்செல் ஸ்டார்க் படுமோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது போட்டியில் கடைசி ஓவரை (50 ஆவது ஓவர்) வீசிய அவர் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதிரடியாக பேட்டிங் செய்த ENG அணியின் லிவிங்ஸ்டன் 6,0,6,6,6,4 என ஸ்டார்க் ஓவரை வெளுத்தார். இதன் மூலம் ODI-யில் ஒரே ஓவரில் அதிக ரன் கொடுத்த ஆஸி.வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

News September 29, 2024

தமிழகத்தில் துணை முதல்வர்களின் வரலாறு…

image

வட மாநிலங்களில் பல ஆண்டுகளாக துணை முதல்வர் பதவி இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முதலாக 2009இல் தற்போதையை முதல்வர் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மேலும், அதிமுக ஒன்றிணைந்த பிறகு 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ் துணை முதல்வரானார். அதனை தொடர்ந்து தற்போது உதயநிதி அந்த பொறுப்புக்கு வந்துள்ளார். திமுகவில் இருவரும், அதிமுகவில் ஒருவரும் இதுவரை துணை முதல்வராக இருந்துள்ளனர்.

News September 29, 2024

டார்க் சாக்லேட்டால் கிடைக்கும் நன்மைகள்

image

பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு சர்க்கரை சேர்க்காத சாக்லேட்டை சாப்பிடலாம். இது அவர்கள் உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் எப்போதும் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் சாக்லேட்டுகளை கையில் வைத்திருப்பது நல்லது.

News September 29, 2024

‘போட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

அக்.1இல் ‘போட்’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சிம்பு தேவன் இயக்கிய அந்த படத்தில் யோகி பாபு நாயகனாகவும், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கவுரி ஜி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். “போட்” படம் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஒரு படகில் பயணிக்கும் 10 வித்தியாசமான குணாம்சம் கொண்ட மனிதர்களைப் பற்றியது ஆகும். இந்த படம் ஆக.2இல் தியேட்டரில் வெளியானது.

News September 29, 2024

புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

image

செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்கிறார்கள். ஆளுநர் மாளிகையில் மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள். முன்னதாக, அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், மஸ்தான், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வராக உதயநிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

News September 29, 2024

உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கா?

image

இந்தியாவில் சூரிய ஒளிக்கு பஞ்சமில்லை என்றாலும், சுமார் 70 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. காளான்கள், தயிர், பால் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் குறைந்த சூரிய வெளிச்சம் இருப்பதும், மக்கள் வெளியே செல்வதை தவிர்ப்பதும் இந்த குறைபாட்டுக்கு காரணமாக உள்ளது.

News September 29, 2024

கோலியின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்

image

டெஸ்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் நியூசி. கேன் வில்லியம்சன், கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். SL-க்கு எதிரான 2ஆவது டெஸ்டில் அவர் 46 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,881 ரன்களைச் சேர்த்து, கோலியின் (8,871) சாதனையை முறியடித்துள்ளார். தற்போது விளையாடும் வீரர்களில் 12,402 ரன்களுடன் ஜோ ரூட் முதலிடத்திலும், 9,685 ரன்களுடன் ஸ்மித் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.

error: Content is protected !!