India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<16092028>>மெஹூல்<<>> சோக்சியின் கைதை சுட்டிக்காட்டி, PM மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருவதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் அதை திருப்பி தர வேண்டும் என PM முன்பு சொன்னதாகவும், அதை நிறைவேற்றும் வகையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற சோக்சி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பெல்ஜியத்தில் வைத்து சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய, USA நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவத்தை சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் Reddit-ல் போஸ்ட் போட, அது பேசுபொருளாகியுள்ளது. USA நிறுவனர்கள் ஊழியர்களை நம்பி, திறன், தரத்திற்கு மதிப்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய நிறுவனர்களிடம் இந்த மனப்பான்மை இல்லை எனவும், ஊழியர்களை அலட்சியப்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய், தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எக்ஸ் தளத்தில், ‘அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்’ என அவர் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து, தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிபிஎம் மூத்தத் தலைவர் கா.சின்னையா (75) உடல்நலக்குறைவால் காலமானார். 1973-ல் கட்சியில் சேர்ந்த இவர் DYFI சங்கத்தை வளர்த்தெடுத்ததில் முக்கியமானவர். தென்சென்னை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். சின்னையா உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சின்னையாவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RIP
புனித நகரமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் காசியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்தால் அவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. ஆனால், அங்கு எல்லோரையும் தகனம் செய்ய அனுமதி கிடையாது. சாதுக்கள், 12 வயதுக்குட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாம்புக் கடியால் இறந்தவர்கள், தோல் நோய் இருந்தவர்களின் உடல்களை காசியில் தகனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லையாம்.
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என CM ஸ்டாலினுக்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர், தமிழ்நாட்டில்தான் ஆணவக் கொலைகள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சமூக நீதி இருக்கும் வரை நம்மை யாராலும் பிரித்தாள முடியாது என்றும் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.
சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதைவிட செத்தொழிவதே மேலானது என போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பெரும் புகழ் போற்றுவோம் என சீமான் பதிவிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தனது X பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்கம்மிங் தேவைக்கு மட்டும் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு BSNL அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. ₹397-க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு அளவில்லாத கால்களும் அதன் பின்னர் 120 நாள்களுக்கு இன்கம்மிங் கால்கள் வந்து கொண்டிருக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வோருக்கு 30 நாள்களுக்கு நாளொன்றுக்கு 2 GB இண்டர்நெட் வசதியும் கிடைக்கும். இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
USA-வின் பரஸ்பர வரிக்கு பதிலடி தர சீனா புதிய உத்தியை கையாண்டு வருகிறது. கார்கள் முதல் ஏவுகணைகள் வரை, செமி கண்டக்டர்கள் முதல் விமானங்கள் வரை தயாரிக்க உதவும் அரிய வகை உலோகங்கள், காந்தம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில்லை என முடிவெடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ராணுவ ஒப்பந்த நிறுவனங்களுக்கு அனுப்பப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது. இதனால், இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை அணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தல தோனி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து புத்தாண்டை கொண்டாடுவது போன்ற ஃபோட்டோவையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சவால்களை முறியடித்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ புத்தாண்டு வழிவகுக்கட்டும் என X பதிவில் சிஎஸ்கே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.