news

News September 29, 2024

புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

image

செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்கிறார்கள். ஆளுநர் மாளிகையில் மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள். முன்னதாக, அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், மஸ்தான், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வராக உதயநிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

News September 29, 2024

உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கா?

image

இந்தியாவில் சூரிய ஒளிக்கு பஞ்சமில்லை என்றாலும், சுமார் 70 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. காளான்கள், தயிர், பால் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் குறைந்த சூரிய வெளிச்சம் இருப்பதும், மக்கள் வெளியே செல்வதை தவிர்ப்பதும் இந்த குறைபாட்டுக்கு காரணமாக உள்ளது.

News September 29, 2024

கோலியின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்

image

டெஸ்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் நியூசி. கேன் வில்லியம்சன், கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். SL-க்கு எதிரான 2ஆவது டெஸ்டில் அவர் 46 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,881 ரன்களைச் சேர்த்து, கோலியின் (8,871) சாதனையை முறியடித்துள்ளார். தற்போது விளையாடும் வீரர்களில் 12,402 ரன்களுடன் ஜோ ரூட் முதலிடத்திலும், 9,685 ரன்களுடன் ஸ்மித் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.

News September 29, 2024

செப்டம்பர் 28: வரலாற்றில் இன்று

image

▶1970 – பிரபல தமிழ் நடிகை குஷ்பு பிறந்த தினம்
▶1998 – இலங்கையில் 56 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் காணாமல் போனது.
▶1990 – நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிறந்த தினம்
▶1957 – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த தினம்
▶2006 – பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.
▶2011 – வாச்சாத்தி பாலியல் வழக்கில் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு.

News September 29, 2024

இளைஞரணி தலைவர் டூ துணை முதல்வர்…

image

2019 நாடாளுமன்ற தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த உதயநிதிக்கு 2019 ஜூலை 7இல் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2021இல் சேப்பாக்கத்தில் போட்டியிட்டு வென்ற அவர், 2023 டிசம்பர் 14இல் அமைச்சராக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு தற்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

News September 29, 2024

3 முறை எம்எல்ஏ… முதல் முறையாக அமைச்சர்

image

தமிழக அமைச்சரவையில் திருவிடைமருதூர் (தனி) தொகுதி எம்எல்ஏ கோவி.செழியன் இணைகிறார். கடந்த 2011, 2016 மற்றும் 2021 என 3 முறை ஒரே தொகுதியில் வென்ற அவருக்கு தற்போது அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடியிடம் இதுவரை இருந்து வந்த உயர் கல்வித்துறை அவருக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. திமுக ஆட்சியில் தலித் ஒருவர் உயர் கல்வித்துறைக்கு அமைச்சராவது இதுவே முதல் முறையாகும்.

News September 29, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: மக்கட்பேறு
▶குறள் எண்: 67
▶குறள்:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
▶பொருள்: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும் படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

News September 29, 2024

தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமனம்

image

தமிழக அரசின் தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பில் ஏற்கெனவே இருந்த திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் புதிய அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை இவருக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News September 29, 2024

மின்சார துறை அமைச்சராகும் செந்தில் பாலாஜி?

image

தமிழக அமைச்சரவையில் மீண்டும் செந்தில் பாலாஜி இணையவுள்ளார். சிறை செல்வதற்கு முன்பு மதுவிலக்கு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளை அவர் கவனித்து வந்தார். அவர் சிறை சென்ற நிலையில், மதுவிலக்கு முத்துசாமியிடமும், மின்சாரம் தங்கம் தென்னரசுவிடமும் வழங்கப்பட்டது. அமைச்சரவை மாற்ற பட்டியலில் தங்கம் தென்னரசுவிடம் இருந்த மின்சார துறை திரும்ப பெறப்பட்டுள்ளதால் SB-யிடம் அந்த துறை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

News September 29, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ செப்டம்பர் – 29 ▶புரட்டாசி – 13
▶கிழமை: ஞாயிறு
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 03:15 – 04:15
▶கெளரி நேரம்: 10:45AM – 11:45AM & 1:30PM – 2:30PM
▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM
▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM
▶குளிகை: 03:00 AM – 04:30 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶ சந்திராஷ்டமம்: பூராடம்

error: Content is protected !!