news

News October 28, 2024

தவெக மாநாட்டிற்கு சென்ற 4 பேர் பலி!

image

விக்கிரவாண்டியில் நேற்று நடந்த தவெக மாநில மாநாட்டில் கலந்துக்கொள்ள சென்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே நிர்வாகிகள் சென்ற கார் கவிழ்ந்ததில் திருச்சி இளைஞரணி மாவட்டத் தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் கலை ஆகியோர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து மாநாட்டிற்கு பைக்கில் சென்ற இளைஞர் வசந்த் விபத்தில் பலியானார். சென்னையைச் சேர்ந்த சார்லஸ் மாநாட்டு திடலில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

News October 28, 2024

இதுவும் பழைய டெம்பிளேட்தான் தளபதி..!

image

“அவர்களே… இவர்களே…” என பழைய டெம்பிளேட்களை பயன்படுத்த விரும்பவில்லை என விஜய் கூறியுள்ளார். துண்டு, மாலை அணிவிப்பது குறித்தும் அவர் விமர்சித்திருந்தார். ஆனால், நிகழ்ச்சியில் அவருக்கு வெள்ளியாலான வீரவாள் வழங்கப்பட்டது. இதுவும் பழைய டெம்பிளேட்தான் எனக் கூறும் அரசியல் விமர்சகர்கள், கட்சிக்காக உழைப்பவர்களின் பெயரை தலைவன் மேடையில் உச்சரிப்பது அவனுக்கான அங்கீகாரம் என்கின்றனர்.

News October 28, 2024

மக்களை ஈர்த்ததா விஜய்யின் மாஸ் ஸ்பீச்?

image

தவெக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய்யின் பேச்சு வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக மக்களின் பல்ஸை விஜய் உணர்ந்து இருப்பது அவரது உரையில் வெளிப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கடவுள் மறுப்பு தவிர்த்து பெரியாரின் மற்ற கொள்கைகளை ஏற்பதாக அறிவித்திருப்பது மக்களின் மனநிலையை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது. எனினும், தவெகவின் வெற்றி ஒருவிரல் புரட்சியில்தான் உள்ளது.

News October 28, 2024

நமத்துபோன பட்டாசு விற்பனை… வியாபாரிகள் கவலை

image

சிவகாசியில் கடந்தாண்டை விட பட்டாசு விற்பனை 20% சரிந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை சில்லறை விற்பனை அதிகமாக இருக்கும் ஆனால், இம்முறை பெரிதாக கூட்டம் இல்லை என்று வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 28, 2024

சுற்றுலா பஸ், லாரி மோதிய விபத்தில் 24 பேர் பலி

image

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 28, 2024

உலகத்தரத்தில் கட்டமைப்புகள்: ராகுல்

image

மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ’ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் பெரும் பாலங்கள், சிலைகள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டாலும் அதன் ஆயுள் காலம் சில மாதங்களாகவே இருக்கிறது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் எழுப்பப்பட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

News October 28, 2024

விஜய் பேச்சு; கிருஷ்ணசாமி ஆதரவு

image

கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்ற தவெக தலைவர் விஜயின் அறிவிப்புக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார். அறிக்கையில், ’தமிழ்நாட்டில் 75 வருடத்தில் எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் தம்பி விஜய், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அந்த முழக்கத்தை முன் வைத்துள்ளார்’ என்றார்.

News October 28, 2024

வரலாற்றில் இன்று(28.10.2024)

image

1891 – ஜப்பானின் நோபி சமவெளியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7,000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1942 – கனடா முதல் அலாஸ்கா வரையில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1949 – ஏர் பிரான்சு விமானம் போர்ச்சுகலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 48 பேரும் உயிரிழந்தனர்.
1988 – நடிகை வாணி போஜன் பிறந்தநாள்.
2009 – பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டனர்.

News October 28, 2024

நட்ஸை எப்படி சாப்பிடலாம்? ஊறவைத்தா… வறுத்தா…

image

பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸை ஊறவைத்து சாப்பிட்டால் மிகுந்த பலனளிக்கும். வறுத்தும் சாப்பிடலாம். ஆனால், நெய்யில் வறுப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக Micro ovenஇல் வறுத்து சாப்பிடலாம். கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட காரம், உப்பு சேர்த்த நட்ஸ்களை அதிகம் உண்ணும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதை தவிர்க்க வேண்டும். தினமும் 30gm அளவு நட்ஸ் சாப்பிடலாம்.

News October 28, 2024

மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள்

image

* நீங்கள் உங்கள் சிறகுகளை விரிக்கும் வரை, உங்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்று உங்களுக்கே தெரியாது. * இந்த உலகம் மிகவும் பாதிக்கப்படுவது கெட்டவர்களின் வன்முறையால் அல்ல. நல்லவர்களின் மௌனத்தால். * நீங்கள் ஒரு விடயத்தை நன்றாகச் செய்ய விரும்பினால், அதை நீங்களே செய்யுங்கள்.

error: Content is protected !!