news

News October 27, 2024

தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்தது!

image

இன்று அரசியல் காலத்தில் பேசு பொருளாகியுள்ள பிறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் பிஹார் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில், குறைவான பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும் பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3ஆவது இடங்களிலும் இருக்கின்றன. தமிழகத்தில் 1992-93ஆம் ஆண்டு வாக்கில் குழந்தை பிறப்பு விகிதம் 2.5% ஆக இருந்தது. அது 2019-21ஆம் ஆண்டுகளில் 1.8% ஆக குறைந்துள்ளது.

News October 27, 2024

Beauty Tips: தேமல் மறைய… இதை செய்யுங்கள்!

image

➤அருகம்புல், கஸ்தூரி மஞ்சள், மருதாணி வைத்து அரைத்துப் பூச தேமல் விரைவாகக் குணமாகும். ➤நாயுருவி இலை சாறை எடுத்து தடவி வந்தால் தேமல், படை குணமாகும். ➤கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்துவர தேமல் மறையும். ➤ 5 gm நன்னாரி வேரை 100 ml நீரில் நசுக்கி போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் தேமல் குறையும்.

News October 27, 2024

சர்கார் பாணியில அதிர வைத்த விஜய்

image

விஜய்யின் இன்றய பேச்சில் அனல்பறந்தது. “என்கிட்ட இருக்கிறது எல்லாம் உண்மை, நேர்மை, உழைப்பு அவ்வளவு தான். இப்போ அரசியல் களத்துக்கு அழைச்சிட்டு வந்துட்டீங்க, இங்க எப்பவும் போல உழைப்பேன், ஓய்வில்லாம, அலட்டிக்காம, அசராம உழைப்பேன். அதற்கான ரிசல்ட் எல்லாமே உங்கள் விரலில் இருக்கும் போது எனக்கென்ன கவலை” என்றார் நம்பிக்கையுடன். நீங்க என்ன நினைக்கிறீர்கள்? கைத்தட்டல்கள் வாக்குகளாக மாறுமா?

News October 27, 2024

தல சொன்ன குட் நியூஸ்.. CSK ஹேப்பி..!

image

2025 IPL-ல் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய தோனி, கிரிக்கெட்டில் தனது கடைசி ஆண்டுகளை மகிழ்ச்சியாக விளையாட நினைப்பதாக கூறியிருந்தார். இது பற்றி பேசிய CSK CEO காசி விஸ்வநாதன், இதை விட தங்களுக்கு வேறு என்ன வேண்டும் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நாளை (அ) வரும் 29ஆம் தேதி தோனியை சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 27, 2024

எல்லோர்க்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும்

image

விஜய்யின் முதல் அரசியல் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. மொத்தத்தில் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பதே தவெகவின் நோக்கம் என்றார் விஜய். அவரின் பேச்சும், கட்சியின் செயல்திட்டமும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், நடைமுறையில் இதையெல்லாம் எப்படி சாதிக்கப் போகிறார்? இதற்கான சமூக, பொருளாதார சிந்தனைகள், திட்டங்கள் எங்கே? என்பதையெல்லாம் தவெக தெளிவுப்படுத்த வேண்டும்.

News October 27, 2024

விஜய்க்கு ஆதரவாக DMK கூட்டணியில் இருந்து முதல் குரல்

image

‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்களில் குரல் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்று விஜய்யின் பேச்சுக்கு விசிகவின் ஆதவ் அர்ஜுனா வரவேற்றுள்ளார். அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் அதை நோக்கிப் பயணப்படும் என்றார்.

News October 27, 2024

விஜய் எம்ஜிஆர் ஆக முடியாது: ஹெச்.ராஜா

image

விஜய் ஒரு காலத்திலும் எம்ஜிஆர் ஆக முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். விஜய் மாநாட்டில் பேசிய பேச்சுக்களை பார்த்தால் அவர் தேசியவாதியா இல்லை பிரிவினைவாதியா என்ற சந்தேகம் எழுவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் தன்னை எம்ஜிஆராகவும், என்டிஆராகவும் நினைத்து கொண்டிருப்பதாகவும், தேர்தல் முடிவில் அவர் யார் என்பதை மக்கள் அடையாளம் காட்டுவார்கள் எனவும் சாடியுள்ளார்.

News October 27, 2024

மீன் பிடித்துக் கொடுத்து உதவுவோம்

image

மக்களுக்கு உதவுவது எப்படி என்பதை தவெக தலைவர் விஜய் விளக்கியுள்ளார். அதாவது, மீன்பிடித்து தருவதைவிட மீன்பிடிக்க கற்றுத்தா என்ற தத்துவ மொழியை சுட்டிக்காட்டிய அவர், முடிஞ்சவங்க மீன்பிடிக்க கத்துகிட்டு வாழட்டும், முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சி கொடுத்து வாழவைப்போம் என்றார். விக்கிரவாண்டி தவெக மாநாடு விஜய்க்கு திருப்புமுனையாக அமையுமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 27, 2024

திமுகவுக்கு உருவான புதிய தலைவலி

image

சமீபத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என விசிக, காங்., பேசியதால் திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 2026இல் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என விஜய் கூறியுள்ளார். இதனால், பழைய பாணியில் கூட்டணி கட்சிகளிடம் திமுக சீட் பேரம் பேச முடியாது. ஆட்சியில் பங்கு வழங்க வேண்டிய சூழலும் உருவாகலாம். விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுகவுக்கு புதிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

News October 27, 2024

மதுரையில் தலைமை செயலக கிளை: TVK

image

தவெக ஆட்சிக்கு வந்தால், மதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அரசை மக்கள் எளிதில் அணுகும் வகையில், மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போல், தலைமை செயலகத்தின் கிளை அங்கு அமைக்கப்படும் என இன்று நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டில் அறிவித்துள்ளது. இதுபோக, இன்னும் பல செயல்திட்டங்களையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!