news

News October 28, 2024

என் தாடி நரைச்சிடுச்சுனு… CSK வீரரை வெளுத்த தோனி

image

IPL 2019 தொடரில் தனக்கும் சாஹருக்கும் இடையே நடந்த சுவாரஸ்ய நிகழ்வை, தோனி நினைவு கூர்ந்தார். பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் 19-வது ஓவர் வீசிய சாஹருக்கு தோனி ஆலோசனை வழங்கியும், அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து 2 நோ பால்களை வீசினார். அதனால் தோனி சாஹரை கடிந்து கொண்டார். இதை குறிப்பிட்ட தோனி, நான் ஆலோசனை கூறியபோது, என் தாடி நரைத்திருந்தால் வயசாகிடுச்சுனு சாஹர் நினைத்து விட்டார் போலும் என்றார் ஜாலியாக.

News October 28, 2024

உன் கூட அரசியலா..? விஜய்யை சீண்டிய பிரபல நடிகர்!

image

தவெக மாநாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயத்தில், அதிக விமர்சனங்களையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில், விஜய்யின் பேச்சை, நடிகர் போஸ் வெங்கட் கிண்டல் செய்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி. வியப்பு. எழுதிக்கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு.. பார்ப்போம்” எனக் கூறினார்.

News October 28, 2024

கூட்டணி கட்சிகளை திமுக ஏமாற்றிவிட்டது: அதிமுக

image

பாஜக தமிழகத்திற்குள் காலூன்றிவிடும் என்று கூறி, தமிழக மக்களிடம் இனியும் திமுக பூச்சாண்டி காட்ட முடியாது என அதிமுக சாடியுள்ளது. EX எம்.பி. ஜெயவர்த்தன் அளித்த பேட்டியில், மத்திய பாஜக அரசுடன் திமுக நெருக்கம் காட்டுவதுடன், கூட்டணி கட்சிகளின் குரல்வளையை நெரித்து வருவதாக சாடியுள்ளார். போலி வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது போல், கூட்டணி கட்சிகளையும் திமுக ஏமாற்றி விட்டதாக விமர்சித்துள்ளார்.

News October 28, 2024

என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகள்

image

தவெக கொள்கை விளக்கப் பாடலை உருவாக்க வாய்ப்பளித்த விஜய்க்கு தெருக்குரல் அறிவு நன்றி கூறியுள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, உன்னால் மட்டுமே முடியும் என விஜய் கூறியதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய்யின் குரலை பதிவு செய்த தருணம் தனது வாழ்நாளின் சிறந்த நினைவாக இருக்கும் எனவும், அவரது அரசியல் வருகையை வாழ்த்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.

News October 28, 2024

விஜய்யின் நிலைப்பாட்டுக்கு அதிமுக வரவேற்பு

image

விஜய்யின் கொள்கை நிலைப்பாட்டை வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுகதான் தங்கள் முதல் எதிரி என்று விஜய் பேசியிருப்பதை வரவேற்பதாகக் கூறினார். கொள்கை நிலைப்பாட்டை வெளிப்படுத்திய முதல் பேச்சிலேயே போலி திராவிட மாடலை எதிர்த்து குரல் கொடுத்தது மிக முக்கியம் என்று நினைப்பதாகத் தெரிவித்தார்.

News October 28, 2024

உஷார்: நாட்டுக் கோழி இறைச்சி பிரியர்களிடம் நூதன மோசடி

image

கோழி இறைச்சி சாப்பிட விரும்புவோர், சில நேரம் இறைச்சி கடையில் விற்கும் நாட்டுக் கோழியை வாங்கி சமைப்பதுண்டு. இவர்களிடம், நாட்டுக் கோழி எனக் கூறி, அதேபோல் இருக்கும் பண்ணை கோழியை விற்று சில கும்பல் மாேசடி செய்து வருகிறது. இவை, நாட்டுக் கோழிகள் போல் தோற்றத்தில் இருந்தாலும், அக்கோழியில் இருக்கும் சத்தாே, சுவையோ இருக்காது. ஆதலால் தரம் பார்த்து வாங்கவில்லையெனில் ஏமாறுவது நிச்சயம்.

News October 28, 2024

சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தோனி விருப்பம்

image

அடுத்த சில ஆண்டுகளுக்கு விளையாட்டை அனுபவிக்க விரும்புவதாக தோனி மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஜடேஜா, துபேவுக்கு அதிக வாய்ப்பு இருந்ததால், கடந்த ஐபிஎல் சீசனில் அவர்களுக்கு CSK-வில் முன்வரிசையில் வாய்ப்பு தரப்பட்டதாகக் கூறினார். தான் பின் வரிசையில் ஆடினாலும் அணியினர் மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

விஜய்யின் பேச்சு படம் பார்ப்பது போல் இருந்தது.. பாஜக கிண்டல்

image

விஜய்யின் பேச்சு, படம் பார்ப்பது போல் இருந்ததாக பாஜக கிண்டல் அடித்துள்ளது. அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், வெற்றிக்கழக தலைவர் விஜய், வெட்டிக் கழகத் தலைவராக மாறக்கூடாது என விமர்சித்துள்ளார். அதிகார அரசியலுக்காக திமுக வழியிலும், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையிலும் செயல்பட முடிவு செய்திருப்பது மக்களை ஏமாற்றுவதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 28, 2024

யார் அந்த மன்னர்? தேடும் நெட்டிசன்கள்

image

தந்தையின் மறைவுக்குப் பின் சிறு வயதில் முடிசூடி போருக்கு சென்று வாகை சூடிய மன்னன் குறித்து விஜய் தனது குட்டிக்கதையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அந்த மன்னனின் பெயரைக் குறிப்பிடாமல் படித்துத் தெரிந்துக் கொள்ளும்படி கூறிவிட்டார். இந்நிலையில், அந்த மன்னன் யார் என ஏராளமானவர்கள் இணையத்தில் தேடியுள்ளனர். அந்த மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவார்.

News October 28, 2024

சற்றுமுன்: TNPSC முக்கிய அறிவிப்பு

image

பெரிதும் எதிர்பார்க்கப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாள்களில் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. VAO, பில் கலெக்டர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வு ஜூன் 9ல் நடைபெற்றது. 20 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்த நிலையில், 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர். தொடர்ந்து, தற்போது கூடுதலாக 2,688 இடங்கள் சேர்க்கப்பட்டு காலிப்பணியிடம் 8,932 ஆக அதிகரித்துள்ளது.

error: Content is protected !!