news

News October 28, 2024

Revenge Porn-ஐ தடுக்க உதவும்

image

நெருக்கமாக இருக்கும் அந்தரங்க தருணங்களை, ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர் பதிவுச் செய்வதை, பகிர்வதை தடுக்க comdom app உதவுகிறது. குறிப்பாக உறவு கசந்தபின் பலரும் பழிவாங்க பயன்படுத்தும் ரிவெஞ்ச் போர்ன் வீடியோக்கள் எடுப்பதை, பகிர்வதை தடுக்கிறது. இதனால் தேவையற்ற மனச்சோர்வு, பதற்றம் உள்ளிட்ட மனப் பாதிப்புகளை தடுக்கலாம். நன்றாக பழகிய பின்னர், பழிவாங்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் தடுக்க முடியும்.

News October 28, 2024

சலுகை விலையில் பசுமை பட்டாசுகள்!

image

கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலையில் பசுமை பட்டாசுகள் விற்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு அங்காடிகளில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுவதாகவும், அதிரசம், முறுக்கு தயாரிக்க தேவையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு ₹190க்கு விற்கப்படுவதாகவும் கூறினார். மேலும், குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை மகளிர் வரவேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

News October 28, 2024

BREAKING: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

image

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். VAO, பில் கலெக்டர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. 20 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.

News October 28, 2024

விஜய்யை களம் இறக்கியதா பாஜக?

image

ரஜினி அரசியலுக்கு வராததால், பாஜகதான் விஜய்யை களம் இறக்கியிருக்கிறதோ என சபாநாயகர் அப்பாவு சந்தேகம் எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், வருமான வரி சோதனையில் சிக்கியபோது விஜய்க்கு திமுகதான் ஆதரவு குரல் கொடுத்ததாகக் கூறினார். மேலும், மற்றவர்களை குறை சொல்லும் விஜய் உண்மையானவராக இருக்க வேண்டும் என்றார். திமுகவை அரசியல் எதிரி என விஜய் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News October 28, 2024

தீபாவளிக்கு ₹4.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா முழுவதும் ₹4.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என சிஏஐடி கணித்துள்ளது. டெல்லியில் மட்டும் ₹75,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள், ஆபரணங்கள், பட்டாசு, இனிப்பு என வர்த்தகம் களைகட்டியுள்ளது. பண்டிகை காலங்களில் சீனப் பொருட்களின் விற்பனைக்கு தடை இருப்பதால், அந்நாடு ₹1 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

ஹனிமூன் கொண்டாடும் வரலக்‌ஷ்மி: க்யூட் போட்டோ!

image

வரலக்‌ஷ்மி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் தம்பதியினர் தற்போது சீஷெல்ஸின் மாஹே தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்கள். இதுபற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வரலக்‌ஷ்மி, “மனைவியின் க்யூட் போட்டோக்களுக்கு பின்னணியில் அவரின் கணவர் இருக்கிறார். மனைவி ஒரு க்யூட் போட்டோ போட, கணவன் 100 முறை போட்டோக்களை எடுக்க வேண்டும்” என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார். வரலக்‌ஷ்மி சொல்றது சரிதானே?

News October 28, 2024

மாநாட்டுக்கு சென்று உயிரிழந்த அஜித் ரசிகர்!

image

தவெக மாநாட்டுக்கு சென்று மாரடைப்பால் பலியானவர் சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் (25) என்பது தெரியவந்துள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான அவர், விஜய்யின் அரசியலால் ஈர்க்கப்பட்டார். இதனால் தவெக நண்பர்களோடு விஜய் மாநாட்டுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது வெயில் கொடுமையால் மாரடைப்பு ஏற்பட்டு சார்லஸ் பலியானார். சார்லஸின் இறுதிச்சடங்குக்கு கூட பணம் இல்லாமல் அவரது தாயார் புலம்பி வருகிறார்.

News October 28, 2024

இந்திய அணியின் கோச் லக்‌ஷ்மன்; அப்போ கம்பீர்?

image

SA அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கோச் ஆக வி.வி.எஸ்.லக்‌ஷ்மன் நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து டெஸ்ட் தோல்வியால் கம்பீர் நீக்கப்பட்டாரா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இத்தொடர் நடைபெறும் போது, ஆஸ்திரேலியாவில் BGT தொடர் நடைபெற உள்ளதால், கம்பீருக்கு பதிலாக லக்‌ஷ்மன் கோச்சாக இருப்பார் எனத் தெரிகிறது. டி20 format-க்கு லக்‌ஷ்மன் சரிபடுவாரா.. கமெண்ட் செய்யுங்க.

News October 28, 2024

ஆயுத ஏற்றுமதியில் ஏற்றம் பெறும் இந்தியா

image

பாதுகாப்புத் துறையில், ‘மேக்-இன் இந்தியா’ பலன் கொடுக்க தொடங்கியுள்ளது. தற்போது ரூ.1.2 லட்சம் கோடியாக இருக்கும் உற்பத்தியை, 2028-29இல் ரூ.3 லட்சம் கோடியாக உயர்த்தவும், ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்தவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் 16 பொதுத்துறை, 430 தனியார் நிறுவனங்கள், 16000 SMEகள் ஈடுபட்டுள்ளன. மொத்தத்தில் தனியார் பங்களிப்பு 21% ஆக உயர்ந்துள்ளது. ஆயுத ஏற்றுமதி பற்றி உங்கள் கருத்து?

News October 28, 2024

கெட்டப்பையன் சார் அந்த சின்னப்பையன்!

image

TVK மாநாட்டில் பேசிய விஜய் <<14472026>>குட்டி கதை<<>> ஒன்று சொன்னார். ஒரு நாட்டுல பெரிய போர் வந்துச்சாம். அப்போ அங்க பவுர்புல்லான தலைமை இல்லாததால ஒரு பச்சைப்புள்ள கையில அந்த பொறுப்பு இருந்துச்சாம். அங்க இருந்த பெருந்தலைகள், சின்னப்பையன் நீ எப்படி சமாளிப்பன்னு கேட்டாங்களாம்.. ஆனா போருக்கு தனியா தன் படையோட போன பாண்டிய வம்சத்த சேர்ந்த அந்த பையன், என்ன செஞ்சான்னு சங்க இலக்கியத்துல தெளிவா சொல்லியிருக்காங்க என்றார்.

error: Content is protected !!