India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குடும்பத்தோடு சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 288 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், நவம்பர் 20இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கூட்டணியில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாளாகும்.
மாதவன்-ஷாலினி நடித்த ‘அலைபாயுதே’ மூவி, 2000ல் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை பார்த்த அந்தக்கால இளசுகள் பலர், வீட்டிற்கே தெரியாமல் திருமணம் செய்த நிகழ்வும் அரங்கேறியது. இந்த நிலையில், படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆனதை நினைவுகூறும் வகையில் புகைப்படம் ஒன்றை ஷாலினி பகிர்ந்துள்ளார். அலைபாயுதே படம் பாத்துருக்கீங்களா? கமெண்ட் பண்ணுங்க.
மனிதர்களில் உடல் மரபணுக்களில் (somatic genome) திருத்தம் செய்யும் ஆராய்ச்சிக்கு, உலகின் முதல் நாடாக தென்னாப்ரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் நீரிழிவு, புற்றுநோய் மட்டுமல்லாமல் பரம்பரை நோய்களுக்கு காரணமான மரபணுக்களை நீக்குவது, நல்ல மரபணுக்களை சேர்ப்பது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டாலும், இயற்கையோடு விளையாடுவது சரிதானா என்ற கேள்வியும் எழுகிறது.
நீண்ட நாள்களாக தயாராகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மகிழ்திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில், நடிகர் ஆரவ் டப்பிங் பணியில் இருக்கும் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை. இந்த இயக்கம் இது போன்ற பலரைப் பார்த்துள்ளது” என்று திமுகவை விமர்சித்த விஜய்யை CM ஸ்டாலின் அட்டாக் செய்துள்ளார். கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை; அதை நான் பார்த்துக் கொள்வேன். நமது கூட்டணி வலுவாக உள்ளதால், வரும் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என தொகுதி பொறுப்பாளர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
நீட் தேர்வு தேவையில்லை என பேசிய தவெக தலைவர் விஜய்க்கு அனிதாவின் அண்ணன் மணிரத்னம் நன்றி கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வோம், எதிர்த்து போராடுவோம் என விஜய் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளதாக கூறிய அவர், அதை நோக்கி அவர் பயணம் சிறக்க வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பிரவேசம் வெற்றியை தரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவெக மாநாடு குறித்து பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “Mr. விஜய், உங்கள் மாநில மாநாடு வெற்றி தான். ஆனால் உங்கள் அரசியல் வெற்றி பெறாது. ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது. வசனகர்த்தா எழுதிக் கொடுத்த சினிமா பாணி வசனங்களை சிறப்பாக பேசி நடித்திருக்கிறீர்கள்” எனக் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1.31 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து 2,910 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் பேருந்துகள் மூலம் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
KFC, Burger King போன்ற நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் உணவுகளில் வெங்காயம் சேர்ப்பதை அடியோடு நிறுத்தியுள்ளன. இதற்கான காரணம் திடுக்கிட வைக்கிறது. அதாவது, நீண்டநேரம் முன்பே slice செய்துவைத்த வெங்காயத்தில் E.Coli என்ற பாக்டீரியா உருவாகி விடுமாம். இது, குடல் சார்ந்த பிரச்னைகளையும், சில சமயங்களில் கிட்னி ஃபெயிலியர் வரை கொண்டு சென்றுவிடுமாம். ஆகவே vegetables-ஐ அரிந்தால் உடனே பயன்படுத்தி விடுங்கள்.
ஜப்பானில் அலுவலக பார்க்கிங் தொடர்பான ஒரு விதி, அவர்கள் ஏன் முன்னேறி இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. அலுவலகத்துக்கு பணியாளர்கள், வேலை நேரத்துக்கு முன்பே வந்தால், அவர்கள் தங்கள் வாகனத்தை பார்க்கிங் இடத்தில் தொலைவில் நிறுத்த வேண்டும். ஏன் தெரியுமா? தாமதமாக வரும் பணியாளர்கள், பார்க்கிங்கில் முன்புறம் காலியாக உள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நேரத்துக்கு பணிக்கு வர இந்த ஏற்பாடாம்.
Sorry, no posts matched your criteria.