India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூகுளில் சத்தமே இல்லாமல் விஜய்யின் TVK கட்சி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடியவைகளில் அக்கட்சி 5ஆவது இடத்தை பெற்றுள்ளது. மாநாடு இடம், விஜய் பேச்சு, மாநாட்டுக்கான பேருந்து மற்றும் ரயில் வசதி, எவ்வளவு பேர் வருவார்கள் என மாநாடு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை பொதுமக்கள் தேடியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் விமர்சனங்களால் எங்களது கவனம் சிதறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திமுகவின் தேவையை 75 ஆண்டுகளாக மக்கள் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சி அடைந்து என்றார். முன்னதாக விக்கிரவாண்டி மாநாட்டில், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றி வருவதாக விஜய் விமர்சித்திருந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் காற்று மாசு அதிகரிக்க பாகிஸ்தானே காரணம் என, அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் குப்தா கூறியுள்ளார். நொய்டா, காசியாபாத், டெல்லி போன்ற இடங்களில் மாசு ஏற்பட பாகிஸ்தானையே குற்றம் சொல்ல வேண்டும் எனப் பேசியுள்ள அவர், அந்நாட்டு விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதாலேயே காற்றில் மாசு கலக்கிறது என்றார். உ.பி., PAK இடையேயான தொலைவு 800 KM என்பது குறிப்பிடத்தக்கது.
2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என CM ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே திமுகவின் இலக்கு என்றும், அதை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் போது, சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 6 கழகத் தோழர்கள் நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் கூறியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க பல சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், இதற்கென தனியே பசு பாதுகாவலர்களும் உள்ளனர். இந்நிலையில், சாலைகளில் அலையும் பசுக்களை, தெரு மாடுகள் என யாரும் சொல்லக் கூடாது என ராஜஸ்தான் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு சொல்வது, பசுக்களை அவமானப்படுத்துவதற்கு சமம் எனக் கூறியுள்ள அரசு, ‘ஆதரவற்ற’ மாடுகள் என்று அழைக்க அறிவுறுத்தியுள்ளது.
CSK அணியில் தோனியின் இடத்தை ரிஷப் பண்டால் மட்டுமே நிரப்ப முடியும் என நியூசி. EX வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார். தோனியை போன்றே ரிஷப் பண்டும் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய மேட்ச் வின்னராக செயல்படுவார் என்பதால், சென்னை அணி அவரை பெரிய விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லி அணியில் விளையாடும் பண்ட், அந்த அணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மரபணுக்களில் மாற்றங்கள் செய்வதன் மூலம் மனித உடலில் விரும்பிய அம்சங்களை சேர்ப்பது (அ) விரும்பத்தகாத அம்சங்களை நீக்குவதே மரபணு திருத்தம் ஆகும். இதனால் பரம்பரை நோய்கள் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவது தடுக்கப்படும். நோயில்லா குழந்தைகள் பிறக்க வழியேற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால், மரபணுக்களில் கைவைப்பது இருமுனை கத்திப் போன்றது. எதிர்பாராத பின்விளைவுகள் நேரிடலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல் வழங்க, பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. குடிநீர் பந்தல் அமைக்கவும் பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டில் பகவத் கீதையை விஜய் பெற்றுக் கொண்டதை விசிகவின் வன்னியரசு விமர்சித்துள்ளார். “வருணாசிரம கோட்பாட்டை எதிர்ப்பதாக விஜய் கூறுகிறார். ஆனால், அவர் பகவத் கீதையை பெற்றுக் கொண்டது முரண்பாடாக உள்ளது. 4 வர்ணங்களையும் நானே படைத்தேன் என்பதுதான் கீதையின் சாரம். அப்படிப்பட்ட பகவத் கீதையை பெற்றுக் கொண்ட பிறகு, அவரால் எப்படி வருணத்தை எதிர்க்க முடியும்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.