news

News October 29, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 29 (ஐப்பசி 12) ▶ செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM▶ராகு காலம்:3:00 PM – 4:30 PM▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை:12:00 PM – 1:30 PM▶ திதி: த்ரயோதசி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு ▶ பரிகாரம்: பால்▶ நட்சத்திரம்: உத்திரம் ▶சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

News October 29, 2024

பாம்பு கடிச்சா என்ன பண்ணுவ? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

image

அரசியல் என்ற பாம்பை கையில் பிடித்து விளையாடும் குழந்தை என விஜய் தன்னைப் பற்றி சொன்னார். அரசியலுக்கு நாம் குழந்தை தான் என்கின்றனர், ஆனால் பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய கான்ஃபிடண்ட் என்றும் அதிரடியாக பேசினார் விஜய். குழந்தைக்கு பயமில்லாமல் இருக்கலாம், ஆனால் குழந்தையை பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்வது என்று எதிர்ப்பாளர்கள் கலாய்க்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News October 29, 2024

ரொனால்டோவை சந்திக்க 13,000 K.M. தூர சைக்கிள் பயணம்

image

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை ரசிகர் ஒருவர் 13,000 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணித்து சந்தித்துள்ளார். சீனாவில் பிப்ரவரி மாதம் மேற்காெள்ள இருந்த பயணத்தை காயம் காரணமாக ரொனால்டோ ரத்து செய்தார். இதனால் ஏமாற்றமடைந்த சீன ரசிகர் காங், சவூதி அரேபியாவில் ரொனால்டோ இருப்பதை அறிந்து, மார்ச் 18 முதல் சுமார் 7 மாதம் கஜகஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகள் வழியே சைக்கிளில் பயணித்து நேரில் சந்தித்தார்.

News October 29, 2024

HAIR TIPS: முடி உதிர்வை தவிர்க்க

image

* புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி, மீன், பீன்ஸ், குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள், முட்டை ஆகியவற்றுடன் காய்கறிகள், பழங்களையும் தினசரி உணவில் சேர்க்கவும்.
*தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தவும்.
*உங்களுடையது வறண்ட முடியா, எண்ணெய்ப் பசை கொண்ட முடியா என்பதை பொறுத்து, பொருத்தமான ஷாம்பு & கண்டிஷனரை, சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
*எல்லாவற்றுக்கும் மேலாக மன அழுத்தத்தை தவிருங்கள்.

News October 29, 2024

நடிகருக்கு பாலியல் கொடுமை.. இயக்குநர் மீது வழக்குப்பதிவு

image

நடிகருக்கு பாலியல் கொடுமை அளித்ததாக மலையாள இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நடிகைகள், நடிகர் அல்லது இயக்குநர் மீது பாலியல் புகார் கூறுவதுண்டு. ஆனால் இதற்கு வித்தியாசமாக நடிகர் ஒருவர், ஆடிஷன் வரச் சாெல்லி உடைகளை களைந்து கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடிகை ஒருவர் அளித்த புகாரிலும் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News October 29, 2024

இந்த மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பெயரை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 1 மணி வரை இடி-மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 29, 2024

டேன்டீ தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குக: EPS

image

டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸை உடனடியாக வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அரசுத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், குன்னூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டேன்டீ தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் வரவில்லை என்றும் குறை கூறினார். நீங்க அரசு ஊழியரா? உங்களுக்கு போனஸ் வந்துடுச்சா? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 29, 2024

முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரியா? நயன்தாரா மறுப்பு

image

அழகிற்காக முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக வெளியாகும் தகவலை நயன்தாரா மறுத்துள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் அண்மையில் நயன்தாரா வெளியிட்ட படத்தை பார்த்த சிலர், அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக பதிவிட்டு வருகின்றனர். இதனை மறுத்துள்ள நயன்தாரா, தன்னுடைய உடல் எடையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், தன்னுடைய கன்னங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

News October 29, 2024

MI தக்கவைக்கும் வீரர்கள் இவர்கள்தான்: ஹர்பஜன்

image

18வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியனை தக்கவைக்கும் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் கூறியுள்ளார். மேலும், ரோஹித், SKY, பும்ரா, திலக் வர்மா ஆகிய 5 பேரை தக்கவைக்கும் என கூறியுள்ளார்.

News October 29, 2024

புதிய வாசலை திறந்துள்ள விஜய்யின் ‘வாக்கு’

image

தேர்தலில் கூட்டணி, தனித்து ஆட்சி என்பதே DMK, ADMK கட்சிகளின் நிலைப்பாடு. இந்நிலையில், தாங்கள் பெரும்பான்மை பெற்றாலும், தோழமை கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிப்போம் என விஜய் கூறியுள்ளது, கூட்டணி அரசியலில் புதிய வாசலை திறந்துள்ளது. ஆட்சியில் பங்கு என்ற குரல் இன்றே கேட்கத் தொடங்கிவிட்டது. ‘அரசியல் அழுக்குகளை அடித்து துவைக்கும் எங்கள் வாக்கும் போக்கும்’ என்ற விஜய்யின் வாக்கு பலிக்க தொடங்கி விட்டதா?

error: Content is protected !!