news

News October 29, 2024

அக்.29: வரலாற்றில் இன்று…

image

*1863 – ஜெனீவாவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
*1911 – அங்கேரியப் பதிப்பாளர் ஜோசேப் புலிட்சர் மறைந்தநாள்.
*1931 – தமிழ்க்கவிஞர் வாலி பிறந்தநாள்.
*1971- ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் பிறந்தநாள்
*1976- நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த நாள்
*1986- நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பிறந்தநாள்
*2015 – ஒரு குழந்தைக் கொள்கையை சீனா அதிகாரப்பூர்வமாக கைவிட்டது.

News October 29, 2024

அரிசி உற்பத்தி.. அசத்தும் சீனா, இந்தியா

image

உலகில் அரிசி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்வோம். ஆசிய நாடான சீனாவே உலகில் அரிசியை அதிகம் உற்பத்தி செய்கிறது. உலக தேவையில் 28% அந்நாடே பூர்த்தி செய்கிறது. சீனா ஒரு ஆண்டில் 144.62 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. 2வது இடத்தில் உள்ள இந்தியா, உலக அரிசி தேவையில் 26% பூர்த்தி செய்கிறது. 137.83 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது.

News October 29, 2024

இதுதான் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம்

image

ஹாலிவுட்டில் சுமார் 60 ஆண்டாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளி வருகின்றன. அதில் முதல் படம், கடந்த 1962இல் வெளியான டாக்டர் நோ ஆகும். அப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் சியன் கானரி நடித்திருந்தார். படத்தை டெரன்ஸ் யங் இயக்கியிருந்தார். 1.1 மில்லியன் டாலர் பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட படம், 59 மில்லியன் டாலர் வசூலித்தது. இந்தப் படத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா? உங்கள் பதிலை கீழே பதிவிடுங்கள்.

News October 29, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 29, 2024

கண்டுகொள்ளப்படாத மதுரை

image

கடந்த ஆண்டு பருவமழையில் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல உதவிகள் அளிக்கப்பட்டன. அதே அளவுக்கு இந்த முறை, மதுரை பாதிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் நுழைந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அறிவித்தது போல நிவாரணம் ஏதும் அரசு அறிவிக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். செவி சாய்க்குமா அரசு?

News October 29, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: விருந்தோம்பல்
▶குறள் எண்: 84
▶ குறள்: அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்
▶பொருள்: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
SHARE IT.

News October 29, 2024

விஜய் பேச்சு: அதிமுக தலைமை மௌனம்

image

தவெக மாநாடு பற்றி, திமுக தலைமை உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து வெளியிட்டுவிட்டனர். ஆனால் அதிமுக தலைமை, செய்தி தொடர்பாளர்கள் கருத்து வெளியிடவில்லை. விஜய்யின் அடுத்த மூவ் பார்த்தபிறகு கருத்து தெரிவிக்கலாம். அதுவரை மௌனமாக இருக்குமாறு உத்தரவு போடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் இந்த மூவ் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க. உங்க கருத்தை கீழே பதிவிடுங்கள்.

News October 29, 2024

கடைசி படத்திற்கு விஜய் வாங்கும் சம்பளம் தெரியுமா?

image

நடிகர் விஜய், தவெக கட்சியை ஆரம்பித்து அரசியல் பிரவேசம் செய்துள்ளார். ஆனால், கடைசியாக ஏற்கனவே தாம் ஒப்புக்கொண்ட ‘தளபதி- 69’ என்ற பெயரிடப்படாத படத்தில் அவர் நடிக்கிறார். அதில் பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வெங்கட் கே நாராயணா தயாரிக்கும் அந்த படத்தில் நடிக்க விஜய் ₹275 கோடி வாங்குவதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு அக்டோபரில் அப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.

News October 29, 2024

இந்தியாவின் முதலை நதி தெரியுமா?

image

நதிகள் அதன் அழகு, செழிப்பை வைத்து அடையாளம் காணப்படுவதுண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு நதி மட்டும், அதன் ஆபத்தை வைத்து அடையாளம் கூறப்படுகிறது. யமுனையின் கிளையான சம்பல் நதிதான், அந்த நதியாகும். இந்தியாவிலேயே இந்த நதியில்தான் அதிக முதலைகள் உள்ளன. அதுவும் 20 அடி நீளம் கொண்ட காரியல்ஸ் இன முதலைகள் இங்குதான் அதிகம் உள்ளன. அதனாலேயே சம்பல் நதிக்கு, முதலை நதி என்ற இன்னொரு பெயரும் உண்டு.

News October 29, 2024

பூமியை விட 5 மடங்கு பெரிய கிரகம்.. இந்தியா கண்டுபிடிப்பு

image

பூமியை விட 5 மடங்கு பெரிய கிரகத்தை இந்திய சயின்டிஸ்ட்கள் கண்டுபிடித்து உள்ளனர். Physical Research லேபரட்டரி சயின்டிஸ்ட்கள், PARAS-2 ஸ்பெக்ட்டரோகிராப் மூலம் TOI-6651b கிரகத்தை கண்டுபிடித்து உள்ளனர். அது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதையும், அந்த கிரகத்தில் பாறைகள், இரும்பு தாதுக்கள், ஹைட்ரஜன், ஹீலியம் வாயு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!