news

News October 29, 2024

இன்று வெளியாகிறது RL25 அப்டேட்..

image

நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10.30 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கும் இந்த படத்தை நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “கில்” படத்தின் தமிழ் ரீமேக் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

News October 29, 2024

பாசிசம், பாயாசம் என்பதெல்லாம் சினிமா வசனம்

image

சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ள முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். விஜய்யின் உரை குறித்து கருத்துக் கூறிய அவர், பாசிசம், பாயாசம் என பேசியது சினிமா வசனம் போல்தான் தெரிகிறது என்றார். விஜய் பேசியதில் சில கருத்துகள் மகிழ்ச்சி தருவதாகவும், ஆனால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

News October 29, 2024

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

image

சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் வியாழன் காலை 5 மணிக்கு திறக்கப்படும். இந்நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜை நவ. 16ஆம் தேதி தொடங்குகிறது.

News October 29, 2024

விளையாட்டு துளிகள்

image

➤ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணிக்கு சலிமா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ➤ரஞ்சி கிரிக்கெட்: சத்தீஷ்கருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ➤ஜப்பான் பாரா பேட்மிண்டன் தொடரில் இந்திய குழு 6 தங்கம் உட்பட 24 பதக்கங்களை வென்றது. ➤U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆடவருக்கான பிரீ ஸ்டைல் 57 kg பிரிவில் சிராக் சிக்காரா தங்கப் பதக்கம் வென்றார்.

News October 29, 2024

GOOD NEWS: எப்போதும் வாழாதவர்களாக இருக்காதீர்!

image

‘மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது என தலாய்லாமாவிடம் கேட்க, “பணம் சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து, உடல்நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். சம்பாதித்தபின் உடல்நலனுக்கு செலவிடுகின்றனர். அதேபோல எதிர்காலம் பற்றிய பதற்றத்தில், நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள். இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர்களாகவே இருந்து இறந்து போகிறார்கள்” என்றார்.

News October 29, 2024

மன அமைதி தரும் மயிலம் முருகன்

image

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் என்ற புகழைக் கொண்டது விழுப்புரம் மயிலம் முருகன் திருக்கோயில். சூரபத்மன் தான் செய்த தவறை உணர்ந்து, இங்கே தவம் செய்து முருகனின் அருளைப் பெற்று மயில் வடிவத்தை அடைந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. விரதமிருந்து 7 வாரம் (செவ்வாய்) இங்கு சென்று முருகருக்கு நொச்சி இலை மாலை சாற்றி, நெய் விளக்கிட்டு வணங்கினால், சங்கடங்கள் விலகி, மன அமைதி கிட்டும் என்பது ஐதீகம்.

News October 29, 2024

ALERT: 41,500 ரயில்வே வேலைக்கு தேர்வு தேதி மாற்றம்

image

ரயில்வே தேர்வு வாரியத்தால் (RRB) லோகோ பைலட், எஸ்ஐ, டெக்னிசியன், ஜெ.இ. பதவிகளில் காலியாக இருந்த 41,500 பதவிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதியை RRB மாற்றியுள்ளது. அதன்படி, லோகோ பைலட்டுக்கான தேர்வு நவ.25- நவ.29, எஸ்ஐ. தேர்வு டிச.2-டிச.12, டெக்னிசியன் தேர்வு டிச.18 – டிச.29, ஜெ.இ. தேர்வு டிச.13-டிச.17 வரை நடைபெறவுள்ளது. SHARE IT.

News October 29, 2024

HEALTH TIPS: முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூங்கில் சாறு

image

கூந்தல் வலுவாக இல்லை, முடி உதிர்கிறது என பெண்கள் கவலைப்படுவதுண்டு. அவர்களுக்கே இந்த ஆலோசனை. மூங்கில் பார்த்திருப்பீர்கள். அதிலிருந்து எடுக்கப்படும் சாறைக் கொண்டு, கூந்தலை வலுப்படுத்த முடியும். அந்த சாறை தேய்த்து வந்தால், கூந்தல் வலுப்படுவதுடன் பட்டுப்போன்று மிருதுவாக இருக்கும். முடி சேதமடைவதை கட்டுக்குள் காெண்டு வந்து உதிர்வுக்கும் முடிவு கட்டும். இத்தகவலைப் பகிருங்கள்.

News October 29, 2024

ALERT: TNPSC தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி

image

அரசுப் பணி போட்டித் தேர்வு எழுதுவோருக்கு கல்வி டிவியில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்தும் தேர்வில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நவ.1 வரை தினமும் காலை 7- 9 மணிவரை நேரலையும், மறு ஒளிபரப்பு இரவு 7- 9 மணி வரையும் காணலாம். SHARE IT.

News October 29, 2024

கிட்னி பெயிலியரா? இதுதான் அந்த அறிகுறிகள்

image

கிட்னி பெயிலியரை காலையில் தோன்றும் சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்து கொள்ளலாம். * காலையில் எழுகையில் மிகவும் பலவீனமாக உணர்வீர்கள் * சிறுநீர் நிறம் வெள்ளையாக இல்லாமல் மஞ்சள், இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் *காலையில் எழுந்திருக்கையில் வயிறு வீக்கத்துடன் காணப்படும் *கட்டுப்படுத்த முடியாத தாகம் இருக்கும் *தோளில் அரிப்பு *

error: Content is protected !!