news

News October 29, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11 மணிக்கு <<14479999>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) கிரீன்லாந்து 2) லிபரான் கமிஷன் 3) Bharatiya Nyaya Sanhita 4) ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 5) கேள்வி நேரம் 6) ஆர்க்டிக் டெர்ன் 7) பிரான்ஸ் 8) பூரிக்கோ. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 29, 2024

சற்றுமுன்: தீபாவளி போனஸ் வழங்கியது தமிழக அரசு

image

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நேற்றிரவு வங்கிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு இன்று காலை முதல் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. C&D பிரிவு தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இன்றுடன் 20 நாளாகியும் வழங்கப்படவில்லை. இதனால், இன்றைக்குள் அவர்களுக்கு போனஸ் வழங்குமாறு EPS, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

News October 29, 2024

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் ‘வேட்டுவம்’

image

பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. பிர்சா முண்டா (ஹிந்தி), சர்பட்டா பரம்பரை 2 (தமிழ்) இயக்கவுள்ளார் என பலரும் கூறிவந்தனர். ஆனால், இந்த 2 படங்களையுமே அவர் இயக்கவில்லை. அடுத்ததாக ‘வேட்டுவம்’ என்ற படத்தினை அவர் இயக்கவுள்ளார். இதில் ‘அட்டகத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்க இருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

News October 29, 2024

ஆங்கிலம் அறிவோம்: Immemorial Vs Immemorable

image

Immemorial என்பதற்கும் immemorable என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? Immemorial என்றால் மிகப் பழமையான (லத்தின் மொழி: நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பழங்காலம்) என்று பொருள். Immemorable என்பது நினைவில்கொள்ள முடியாத (சிறப்பான காரணமில்லாத எளிதில் நினைவு கொள்ள முடியாத) ஒன்றை குறிக்கும். Immemorable என்ற சொல்லை மொழி அறிஞர்கள் பலரும் ஏற்பதில்லை. Unmemorable என்றே அழைக்கின்றனர்.

News October 29, 2024

3வது திருமணத்திற்கு அழைப்பு விடுத்த பெண் சாமியார்

image

தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி சர்ச்சையில் சிக்கியவர் அன்னபூரணி. தற்போது தி.மலையில் ஆன்மிக சொற்பொழிவாற்றி வரும் அவர், பேஸ்புக்கில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தானும் அரசுவும் (2வது கணவர்) திருமணம் செய்து கொண்ட அதே NOV.28ல், ரோகித் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 29, 2024

நடிகரைப் பார்க்க கூட்டம் வரும், வாக்கு கிடைக்குமா? சீமான்

image

விஜய்யின் வருகையால் தனது வாக்குகள் குறையாது எனவும் விஜய் ரசிகர்கள் சிலரும் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் சீமான் கூறியுள்ளார். MGR, கமல், விஜய் உள்ளிட்டோர் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த தானும், மக்களை சந்தித்து அரசியலுக்கு வந்ததாக பெருமிதம் தெரிவித்தார். நடிகரைப் பார்க்க கூட்டம் வரும். ஆனால், வாக்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றார்.

News October 29, 2024

ALERT: தீபாவளிக்கு ஸ்வீட் வாங்க போறீங்களா?

image

தீபாவளி என்றாலே இனிப்பு, பட்டாசு, புத்தாடைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அப்படி நாம் வாங்கும் ஸ்வீட்டுகளில் பேராபத்து ஒளிந்திருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. கலர் கலராக வைக்கப்பட்டுள்ள ஸ்வீட்டுகளில், நிறமூட்டுவதற்காக Colour Dye பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறமூட்டிகள்தான் கேன்சரை உருவாக்கும் ஏஜெண்ட்டுகள். எனவே, இதுபோன்ற கலர் ஸ்வீட்டுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

News October 29, 2024

Motor News: பன்ச் வேரியன்ட்ஸ் விற்பனையை நிறுத்திய TATA

image

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் SUV கார்களில் ஒன்றாக டாடா பன்ச் இருந்து வருகிறது. இந்நிலையில், அட்வென்சர், அட்வென்சர் ரிதம் & அட்வென்சர்+ ஆகிய 3 வேரியன்ட்களின் (டாடாவின் அதிகாரப்பூர்வப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன) விற்பனை சத்தமில்லாமல் நிறுத்தப்பட்டிருக்கிறது. பன்ச் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட Facelift வெர்ஷனை டாடா அடுத்தாண்டு வெளியிட உள்ளதால் இம்முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

News October 29, 2024

வீட்டில் நகை சேர வேண்டுமா?

image

வீட்டில் தங்கம் சேர சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென ஜோதிடர்கள் கூறுகின்றனர். புதன், சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைக்கக் கூடாது. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி ஆகிய நட்சத்திர நாள்களில் நகையை இரவல் கொடுக்கக் கூடாது. வீட்டில் வில்வக் கனி வைத்து வழிபாடுவதால் நகை சேரும். நகைப்பெட்டியில் துளசி இலைகள், சிறிது கிராம்பு, கற்பூரம் போன்றவற்றை போட்டு வைக்கலாம் என்கிறார்கள்.

News October 29, 2024

ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு!

image

தீபாவளிக்கு ஒருநாளே எஞ்சியுள்ள நிலையில், தனியார் ஆம்னி பஸ் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பேருந்து நிலையம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை செல்ல சாதாரண நாள்களில் ₹800 வரை வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது ₹1,900- ₹2,800 வரையும், நெல்லைக்கு ₹2,000- ₹3,500 வரையும் வசூலிக்கப்படுகிறது.

error: Content is protected !!