news

News October 29, 2024

17 மாவட்டங்களில் கனமழை

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவள்ளூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News October 29, 2024

எனக்கு டஃப் கொடுத்த பவுலர் இவர் தான்

image

ஆஸி., ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், தான் எதிர்கொண்ட பவுலர்களிலேயே ஜஸ்ப்ரித் பும்ரா தான் கடினமானவர் என புகழ்ந்துள்ளார். ஸ்லோ பாலோ, யார்க்கரோ பும்ராவின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கும். கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா இருப்பார் எனவும் அவர் பாராட்டியுள்ளார். இதுவரை ஐபிஎல்லில் நேருக்கு நேர் மோதிய 15 இன்னிங்ஸ்களில், 7-ல் மேக்ஸ்வெல் விக்கெட்டை பும்ரா வீழ்த்தியுள்ளார்.

News October 29, 2024

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள்

image

இந்தியாவின் டாப் இளம் கோடீஸ்வர்கள் (நிறுவனம் & சொத்துமதிப்பு) பட்டியல்: நிதின் காமத் (Zerodha -ரூ.22,526 கோடி), பவேஷ் அகர்வால் (Ola -ரூ.21 ஆயிரம் கோடி), ரிதேஷ் அகர்வால் (Oyo- ரூ.16 ஆயிரம் கோடி), குணால் ஷா (CRED -ரூ.15 ஆயிரம் கோடி), தீபேந்தர் கோயல் (Zomato -ரூ.8,300 கோடி), அபிந்தர் தின்ஸா (Blinkit -ரூ.2,400 கோடி), அமன் குப்தா (boAt -ரூ.720 கோடி), பியூஷ் பன்சால் (Lenskart -ரூ.600 கோடி).

News October 29, 2024

அதிமுக இணைந்தால் யார் முதல்வர்? சசிகலா பதில்

image

அதிமுக ஒன்றிணைந்தால் யார் முதல்வர் என்ற கேள்விக்கு சசிகலா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், யார் முதல்வர் என்ற கேள்விக்கு இப்போது பதில் அளிப்பது சிறப்பாக இருக்காது என்றும், அதற்கான கால அவகாசம் நிறைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் முதல்வராக இருப்பதே சிறப்பாக இருக்கும் எனவும், அதை நோக்கியே அதிமுக பயணிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 29, 2024

நாளை முழுநாள் விடுமுறை அளிக்கப்படுமா?

image

தீபாவளியை முன்னிட்டு, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியூரில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக நாள் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி லீவ் விட்டால், இன்றே சொந்த ஊருக்கு செல்லலாம் என்பது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News October 29, 2024

தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள்

image

தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் 3,07,90,791, பெண்கள் 3,19,30,833 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,964 பேரும் உள்ளனர். மாநிலத்திலேயே அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் (6,76,133) உள்ளது. குறைவான வாக்காளர் கொண்ட தொகுதியாக கீழ்வேளுர் (1,73,230) உள்ளது.

News October 29, 2024

வாஷிங்டன் சுந்தருக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

image

இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தரை ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்க CSK, MI, GT ஆகிய அணிகள் ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்லில் SRH அணிக்காக விளையாடும் அவரை அணி நிர்வாகம் தக்கவைக்கவில்லை என்றாலும், மெகா ஏலத்தில் அவரை RTM மூலம், மீண்டும் SRH அணி எடுக்கும் எனவும் கூறப்படுகிறது. ஏலத்திற்கு வந்தால் எந்த அணி அவரை எடுக்கும் என நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 29, 2024

மூலிகை: GOUT நோயை போக்கும் முடக்கறுத்தான்

image

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உண்டாகும் GOUT நோய்க்கான சிறந்த தீர்வை முடக்கறுத்தான் வழங்குவதாக அகத்தியர் பாடல் போற்றுகிறது. கலிகோசின், குவெர்செடின், அபிஜெனின். ப்ரோடோகேட்ஸுயிக் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலைகளோடு சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து ரசத்தை வாரம் இருமுறை பருகிவந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News October 29, 2024

தீபாவளி பண்டிகை: நாளை அரை நாள் லீவு!

image

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை மட்டும் கல்வி நிலையங்கள் செயல்படும். ஏற்கனவே தீபாவளிக்கு மறு நாள் (நவ.1) அரசு விடுமுறை அறிவித்ததால், தற்போது தொடர்ச்சியாக நான்கரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 29, 2024

Finance Tips: தவறுகளை ஒத்துக்கொள்ளுங்கள்!

image

வர்த்தக உலகில் லாபகரமான தொழில்முனைவோராக இருக்க விரும்புபவர்கள் வெறுமனே அறிவுத் தேடலில் மட்டும் இறங்க மாட்டார்கள். எப்போதுமே தங்களது தவறை கண்டறிவதில் குறியாக இருப்பர். தவறில் இருந்து பாடம் கற்கும் மனப்பக்குவம் கொண்டு இருப்பார்கள். அவற்றைத் திருத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ‘0 Error, 100 Success’ என்பதே அவர்களது வாழ்நாள் உத்வேக மந்திரமாக இருக்கும். அலட்சியம் ஒருபோதும் வெற்றிக்கு வழிவகுக்காது.

error: Content is protected !!