India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனித்துவமான ஆப்பிரிக்க பென்குயின் இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக IUCN (இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்) தெரிவித்துள்ளது. உலகில் உள்ள 18 வகை பென்குயின்களில், இந்த ஆப்பிரிக்க வகை முதலில் அழிவை சந்திக்கும் என கூறியுள்ளது. உணவுப் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் ஆகியவை பென்குயின் உயிர்வாழ்வதற்கான பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இவற்றை பாதுகாக்க தென்னாப்பிரிக்க அரசை IUCN வலியுறுத்தியுள்ளது.
‘அமரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உயிரே’ பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று ‘அமரன்’ வெளியாக உள்ளது.
➤மேஷம் – லாபம்
➤ரிஷபம் – பிரீதி
➤மிதுனம் – நலம்
➤கடகம் – வெற்றி
➤சிம்மம் – உயர்வு
➤கன்னி – ஆர்வம்
➤துலாம் – களிப்பு
➤விருச்சிகம் – சிக்கல்
➤தனுசு -பகை ➤மகரம்- சிந்தனை
➤கும்பம் – மேன்மை ➤மீனம் – ஓய்வு
ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷவர்மா, மோமோஸ், பானிபூரி போன்ற சாலையோர உணவுகளை சாப்பிடுவது உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சுத்தமில்லாத ஷவர்மாவால் ஃபுட் பாய்சன் ஏற்படும். மோமோஸ் ஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தும். சுத்தமற்ற பானிபூரி வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஆகவே, சுத்தமான, ஃப்ரெஷ் உணவுகளையே சாப்பிடுங்கள்.
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் நிறுவனத்தில் காலியாக உள்ள Finance Manager, HR, Media Communication உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.30) கடைசி நாளாகும். ஊதியம்: ₹40,000 – ₹1,60,000. விண்ணப்ப கட்டணம்: ₹500. விருப்பமுள்ளவர்கள் https://www.hal-india.co.in/home என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது, கல்வித்தகுதி போன்ற கூடுதல் தகவல்களுக்கு <
TVK மாநாட்டில் சூட்டிங்கில் பேசுவதை போல விஜய் பேசியதாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார். அரசியல் என்பது 3 மணி நேர படப்பிடிப்பு அல்ல என்பதை விஜய் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், பாசிசம் குறித்து அவர் பேசிய தொனியும், கருத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல்வாதியாக மாற, தனக்குள் இருக்கும் சினிமா நடிகனை அவர் விட்டுவிட வேண்டும் என்றார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான டப்பிங் பணிகள் ஆரம்பமான நிலையில், நேற்று நடிகர் ஆரவ் டப்பிங் பணியில் ஈடுபட்டார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்க் டீலர் கமிஷனை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன. இதன்காரணமாக பெட்ரோல், டீசல் விலை ₹2 முதல் ₹4 வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒடிசாவில் பெட்ரோல் லிட்டருக்கு ₹4.69 காசுகள் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிவிட்டுள்ளார்.
பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நசருல்லா, அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை அடுத்து தலைவராக வரக்கூடிய நபர்களையும் இஸ்ரேல் அடுத்தடுத்து கொலை செய்தது. இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவராக நயிம் காஸிம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லாவின் லட்சியத்தை இவர் முன்னெடுத்துச் செல்வார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்களின் நலன் என்பது உடற்பயிற்சியும் சத்தான உணவும் மட்டுமல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்படும் உணவும் சேர்த்துதான். வேலை, குழந்தை பராமரிப்பு, இல்லக் கடமைகள் என்று இருப்பதால், பெண்களால் சரியான நேரங்களில் உணவு எடுக்க முடிவதில்லை. தாமதமாக உண்பதும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரியான அளவில், சத்தான உணவு பெண்கள் உடல்நலம் காக்க அவசியமாகும்.
Sorry, no posts matched your criteria.