news

News January 9, 2026

BREAKING: ஜனநாயகனுக்கு U/A சான்று வழங்க உத்தரவு

image

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக U/A <<18789661>>தணிக்கை சான்றிதழ்<<>> வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் நீதிபதி ஆஷா ரத்து செய்துள்ளார். முன்னதாக, தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் ரிலீஸை ஜன.9-ல் (இன்று) இருந்து ஒத்திவைப்பதாக தெரிவித்த படக்குழு, புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது.

News January 9, 2026

கனமழை வெளுக்கும்.. எப்போது கரையை கடக்கும்?

image

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இலங்கையின் யாழ்ப்பாண – திரிகோணமலை இடையே கரைக்கும் கடக்கும் என்றும், தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

News January 9, 2026

தமிழக பிரபலம் காலமானார்

image

திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறந்த காந்தியவாதி மா.வன்னிக்காளை (92) உடல்நலக் குறைவால் காலமானார். சுதந்திர போராட்ட தியாகியான இவர், காந்தி சேவா சங்கத்துடன் இணைந்து ஆதரவற்றோர் இல்லங்களையும் நடத்திவந்து நன்மதிப்பை பெற்றுவந்தார். 1991-ல் ஜனாதிபதியின் தேசிய விருது, 2024-ல் தமிழக கவர்னரின் சிறந்த காந்தியவாதி விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

News January 9, 2026

ஈரான் சுப்ரீம் தலைவரை டிரம்ப் கொல்வார்: USA செனட்டர்

image

ஈரானில் போராடுபவர்களை ஒடுக்க, அரசு வன்முறையை கையாண்டால், அதன் உச்ச தலைவரைக் கொல்லவும் டிரம்ப் தயங்கமாட்டார் என USA செனட்டர் லிண்ட்சே எச்சரித்துள்ளார். தன் சொந்த மக்களையே கொன்று உலகை அச்சுறுத்தும் காமேனி அயதுல்லா ஒரு மதவாத நாஜி என குற்றஞ்சாட்டிய அவர், உங்கள் நாட்டை அவரிடம் இருந்து மீட்டெடுங்கள் என்று ஈரான் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக டிரம்பும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

News January 9, 2026

அரசியல் ட்விஸ்ட்.. KAS-க்கு TTV வாழ்த்து

image

TTV தினகரன் குறித்த கேள்விக்கு, மேலும் சில கட்சிகள் இணையும் என்று EPS கூறியதால் அமமுக மீண்டும் NDA-வில் இணையும் என கூறப்பட்டது. இந்நிலையில், ‘சகோதரர் செங்கோட்டையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என TTV பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் ட்விஸ்ட் ஆகியுள்ளது. ஏற்கெனவே, TTV, OPS ஆகியோர் கூட்டணியில் இடம்பெறுவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்ததால், இந்த வாழ்த்து செய்தி அரசியலாக மாறியுள்ளது.

News January 9, 2026

‘தளபதி’ கிளைமேக்ஸ்.. பாக்யராஜை புகழ்ந்த ரஜினி

image

‘தளபதி’ படத்திற்கு தான் கூறிய மாற்று கிளைமேக்ஸை கேட்டு ரஜினி பூரித்துப்போனதாக பாக்யராஜ் கூறியுள்ளார். அவர் சொன்ன கிளைமேக்ஸ் : மம்மூட்டியின் கட்டளையை ஏற்று தம்பியை கொலை செய்ய செல்கிறார் ரஜினி. சிறிதுநேரத்தில் உண்மை அறிந்து ரஜினியை தடுக்க சென்ற மம்மூட்டியின் பாதையில் குறுக்கே வந்து சண்டையிடும் வில்லன். இதனால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் என்றார். இந்த கிளைமாக்ஸ் எப்படி இருக்கு?

News January 9, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.9) கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹12,800-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹1,02,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த தங்க விலை, நேற்று குறைந்ததால் நகைப் பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், அடுத்த நாளே மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2026

6, 4, 6, 4, 6, 4.. சர்பராஸ் கான் சரவெடி!

image

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்து சர்பராஸ் கான் சாதனை படைத்துள்ளார். பஞ்சாப்புக்கு எதிரான VHT போட்டியில் மும்பை வீரர் சர்பராஸ் கான் 15 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, 20 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். குறிப்பாக அபிஷேக் சர்மா வீசிய 10-வது ஓவரில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். சூப்பர் ஃபார்மில் உள்ள அவரை CSK அணி சரியாக பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.

News January 9, 2026

விஜய் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம்

image

சென்சார் பிரச்னையால் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது. திரைத்துறையினரும், அரசியல் கட்சியினரும் படக்குழுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதேநேரம், ரிலீஸ் பிரச்னைகள் எல்லாம் விஜய் படங்களுக்கு புதிதல்ல, வாடிக்கை தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட விஜய் படங்களை மேலே swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்து என்ன?

News January 9, 2026

₹21,000 சம்பளம்.. 549 காலிப்பணியிடங்கள்: APPLY

image

எல்லைப் பாதுகாப்பு படையில்(BSF) உள்ள 549 காலிப்பணியிடங்கள் விளையாட்டு கோட்டாவின் கீழ் நிரப்பப்படுகின்றன. 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் 23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விளையாட்டு துறையில் செய்த சாதனைகள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளமாக ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும். ஜன.15-ற்குள் <>rectt.bsf.gov.in<<>> தளத்தில் விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!