news

News October 1, 2024

இந்தோ திபெத் படையில் 819 வேலை.. இன்றே கடைசி

image

இந்தோ திபெத் படையில் காலியாக உள்ள 819 காவலர் நிலையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதில் ஆண்களுக்கு 697 இடங்களும், பெண்களுக்கு 122 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. வேலையில் சேர விரும்புவோர் itbpolice. nic. in இணையதளத்தில் இன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ₹21,700 – ₹ 69,100 வரை சம்பளம் அளிக்கப்படும். SHARE பண்ணுங்க

News October 1, 2024

BIG BREAKING: வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரிப்பு

image

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ₹48 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அதன் விலை ₹1903ஆக விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ₹7.50 உயர்த்தப்பட்டு ₹1,817க்கு விற்பனை ஆனது. அதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி ₹38 உயர்த்தப்பட்டு, ₹1,855க்கு விற்கப்பட்டது. தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை SHARE பண்ணுங்கள்.

News October 1, 2024

சிவாஜி வெறும் பெயரல்ல… தமிழ் சினிமாவின் வரலாறு

image

தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. அவரது முதல் படமான ‘பராசக்தி’ 1952இல் வெளியானது. நீதிமன்ற கூண்டில் நின்று சிவாஜி பேசும் வசனங்கள் 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கிறது. ‘பாசமலர்’, ‘கர்ணன்’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மனோகரா’ போன்ற பல படங்கள் இவரது நடிப்புத் திறனுக்கான சான்றாக இன்றளவும் உள்ளது.

News October 1, 2024

ராசி பலன்கள் (01.10.2024)

image

*மேஷம் – வீண் பகை வரும் *ரிஷபம் – பன வரவு இருக்கும் *மிதுனம் – பயம் உண்டாகும் *கடகம் – நன்மை தேடி வரும் *சிம்மம் – ஆதாயம் கிடைக்கும் *கன்னி – சிந்தனையுடன் செயல்படுங்கள் *துலாம் – தாமதம் வேண்டாம் *விருச்சிகம் – சுகமான நாளாக அமையும் *தனுசு – லாபம் கிடைக்கும் *மகரம் – அச்சத்துடன் இருப்பீர் *கும்பம் – ஆர்வமுடன் செயல்படுவீர் *மீனம் – நல்ல நாளாக அமையும்.

News October 1, 2024

சர்ச்சை காட்சிகளை நீக்க கங்கனா சம்மதம்

image

‘எமர்ஜென்சி’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா ரணாவத் சம்மதம் தெரிவித்துள்ளார். அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், இந்திரா காந்தியாக கங்கனா நடித்துள்ளார். சீக்கிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட வெளியீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் சர்ச்சை காட்சிகளை நீக்க கங்கனா தரப்பு கால அவகாசம் கோரியுள்ளது.

News October 1, 2024

அதானி சொன்னால் மோடி செய்வார்: ராகுல்

image

மோடியின் கடவுள் அதானி என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானாவில் பரப்புரை செய்த அவர், அதானி என்ன கூறினாலும், அதனை மறுப்பேதும் சொல்லாமல் மோடி செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மும்பை விமான நிலையம் முதல் காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் வரை, அதானி விரும்புவதை மோடி சிறப்பாக செய்து தருவதாகவும் சாடினார். ஹரியானாவில் அக்.5இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

News October 1, 2024

ஹெலன் சூறாவளி: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

image

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் வீசிய ஹெலன் சூறாவளி தாக்குதலில் சிக்கி இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர் புளோரிடா மாகாணத்தை மையமாக கொண்டு மணிக்கு 225 கிமீ வேகத்தில் வீசிய இந்த புயலால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார வசதியின்றி தவித்து வருகிறார்கள். இந்த சூறாவளி காரணமாக அமெரிக்காவுக்கு ரூ.9,21,687 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News October 1, 2024

பாவங்களைப் போக்கும் மல்லிகார்ஜுனேஸ்வரர்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வத மலை மிகவும் தொன்மையானது. கயிலாயத்திற்கு சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார்ஜுனரும், அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். சிவபெருமான் கயிலாயத்திலிருந்து இங்கு வந்தபோது முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகக் கூறுவர்.

News October 1, 2024

சரும நோய்கள் குணமாக்கும் புங்கம்

image

புங்க மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இவை சரும நோய்களைப் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகும். புங்கம் வேர்பட்டைச் சாறு நோய்களை நீக்கி உடலைத் தேற்றவும், தாதுக்களை பலப்படுத்தவும் பயன்படுகிறது. புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்து பொடி செய்து 3 மண்டலம் தேனில் கலந்து சாப்பிட்டு வர 20 வகையான சரும நோய்கள் குணமாகும்.

News October 1, 2024

உயர் நீதிமன்ற நீதிபதியாக ஷமீம் அகமது பொறுப்பேற்பு

image

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஷமீம் அகமது பொறுப்பேற்றுக்கொண்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த அவரை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில், குடியரசு தலைவர் முர்மு அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார். ஷமீம் அகமதுவுக்கு சென்னை HC தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் HC நீதிபதிகளின் எண்ணிக்கை 67 உயர்ந்துள்ளது.

error: Content is protected !!