news

News October 30, 2024

4 முறை அமெரிக்க தேர்தலில் வென்றவர்

image

அமெரிக்காவில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக முடியும். இதற்கு விதி விலக்காக ஒருவர் 4 முறை அதிபர் தேர்தலில் வென்றுள்ளார். அவர் யாரென தெரிந்து கொள்வோம். 1932இல் முதலில் வென்று அதிபரான பிராங்ளின் ரூஸ்வெல்ட், 1944 வரை 4 தேர்தல்களில் வென்றார். அவரின் பதவிக்காலத்தில் பொருளாதார மந்தநிலை, 2ஆம் உலகப் போரை அமெரிக்கா எதிர்கொண்டது. இதனாலேயே சிறந்த 3 அதிபர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

News October 30, 2024

RAIN ALERT: 2 நாள்கள் கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நவ.1, 2ஆம் தேதிகளில் IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை இங்கு தெரிந்து கொள்வோம்.
* நவ.1: ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர்
* நவ.2: தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி.

News October 30, 2024

மோட்டோ ரோலாவுக்கு தடை விதித்தது ஈரான்

image

மோட்டோ ரோலா போன்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் ஈரான் தடை விதித்துள்ளது. லெபனானில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு மோட்டோ ரோலா பேஜர்கள், இஸ்ரேல் உளவுத் துறையால் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து ஈரான், அந்த பேஜர்களை பயன்படுத்த முதலில் தடை விதித்தது. இதையடுத்து தற்போது முன்னெச்சரிக்கையாக மோட்டோ ரோலா போன்களுக்கும் ஈரான் தடை விதித்துள்ளது.

News October 30, 2024

காலை 7 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை

image

இன்று (அக்.30) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.

News October 30, 2024

உடற்பயிற்சியின்றி சிக்ஸ் பேக்.. ரகசியம் உடைத்த சூர்யா

image

வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யா சிக்ஸ் பேக்ஸ் வைத்திருப்பார். இதையடுத்து, இயல்பு நிலைக்கு மாறிய சூர்யா, தற்போது கங்குவா படத்துக்காக மீண்டும் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள சூர்யா, கிளைமேக்ஸ் காட்சி சண்டைக்காக 100 நாள்கள் திட்டமிட்டு டயட்டை பின்பற்றி சிக்ஸ் பேக் வைத்ததாக தெரிவித்துள்ளார். இந்த டயட்டை கடைபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

News October 30, 2024

அக்.30: வரலாற்றில் இன்று….

image

* 1883 – ஆரிய சமாஜ் நிறுவனர் சுவாமி தயானந்த் சரஸ்வதி மறைந்தநாள்
*1908 – முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள்.
*1909 – இந்திய அணுசக்தி தந்தை ஹோமி ஜஹாங்கீர் பிறந்தநாள்
*1945 – ஐ.நா சபையில் உறுப்பு நாடாக இந்தியா இணைந்தது.
*1964 – சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
*2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.

News October 30, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: விருந்தோம்பல்
▶குறள் எண்: 85
▶ குறள்: வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்
▶ விளக்க உரை: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
SHARE IT.

News October 30, 2024

உலகில் அழியும் நிலையில் 3இல் 1 பங்கு மரங்கள்?

image

உலக நாடுகளில் 3இல் 1 பங்கு மரங்கள் அழியும் தருவாயில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியாவின் காலி நகரில் நடந்த ஐ.நா. பல்லுயிர் மாநாட்டில், பல்லுயிர் நெருக்கடி பற்றிய அளவீடுகள் சுட்டி காட்டப்பட்டன. இதில், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் சிவப்பு பட்டியலில், உலகில் 3-ல் ஒரு பங்கு மரங்களை அழியும் நிலையில் இருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

News October 30, 2024

ஹிட்லரின் பொன்மொழிகள்

image

* இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே
* எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்
* வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்
* நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை. SHARE IT.

News October 30, 2024

UPI மூலம் பணம் செலுத்திய ஸ்பெயின் பிரதமர்

image

இந்தியா அறிமுகம் செய்த UPI வசதி மிகப்பெரிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஜ், மும்பையில் விநாயகர் சிலையை விலைக்கு வாங்கினார். அப்போது அவர், அந்த சிலைக்கு பணத்தை ரொக்கமாக கொடுக்காமல் UPI மூலம் அளித்தார். இதை வைத்து பார்க்கையில், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளிலும் UPIக்கு பெரும் வரவேற்பு இருப்பது தெரிவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!