India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தார் என்று திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், செந்தில் பாலாஜியை பாஜகவில் சேர்த்து திமுகவுக்கு எதிராக அவரை களமாட வைக்க சிலர் நினைத்ததாக குற்றம்சாட்டினார். ஆனால், பாஜகவுக்கு அஞ்சாமல் இருந்த மன உறுதிதான் அவரின் தியாகம் என்றும் அவர் கூறினார்.
வார்த்தைகள் தடுமாறினாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள். அனுபவங்களின் அமுதசுரபியான அவர்களின் நலன் & சமூக பாதுகாப்பை உறுதிசெய்ய சர்வதேச மூத்தோர் தினம் (அக்.,1) இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முதியோர்களுக்கும் இன்று வாழ்த்துகள் கூறி அவர்களிடம் ஆசி பெறுவோம். அத்துடன் ‘முதியோர் இல்லங்கள்’ என்பதை அடுத்த தலைமுறைக்கு காட்ட முடியாத சூழலை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்.
‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து TTF வாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். TTF வாசனுடன் இணைந்து பயணிக்க விரும்பியதாகவும், ஆனால் சூழ்நிலை ஒத்துவரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், புதிய கதாநாயகன் அக்.15ஆம் தேதி அறிவிக்கப்படுவார் எனவும், படத்தில் இல்லை என்றாலும் தம்பி TTF உடனான உறவு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநில நதிநீர் விவகாரத்தில் மக்களை குழப்பும் முயற்சியில் அதிமுக ஈடுபடுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகள், போராட்டங்களை அதிமுக அறிவிப்பதாகவும், எதிர்க்கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கவில்லை என அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு RMC கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் RMC கூறியுள்ளது. நாளை தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், 3ஆம் தேதி 18 மாவட்டங்களிலும், 4, 5 ஆகிய தேதிகளில் 16 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. SHARE IT
தமிழகத்தில் 52 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதியளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தத் தகவலை காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, 4ஆம் தேதி அணிவகுப்பு நடத்த காவல்துறையிடம் RSS அனுமதி கோரியிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் RSS வழக்குத் தொடுத்திருந்தது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் அரசு, தனியார் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை ஆகும். நாளை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. இதேபோல், அக்டோபர் 10 மஹா சப்தமி அரசு விடுமுறை. இது தவிர, அக்டோபர் 12 மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை, அக்டோபர் 26 நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை ஆகும். மேலும் மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை ஆகும். இந்த நாள்களில் வழக்கமான வங்கி அலுவல்கள் இருக்காது. SHARE IT
பெருங்குடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் துத்திக்கு இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அபுடிலின் ஏ, அடினைன், ஸ்கோபோலெடின், ஸ்கோபரோன் போன்ற தாவர வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் இலை & பூக்களை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டால் மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு, ஆசனவாய் எரிச்சல், வலி, மலச்சிக்கல் குணமாகுமென சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு, வங்கதேசம் 95 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தொடர்ந்து இன்று 2ஆவது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களில் சுருண்டது. 2ஆவது இன்னிங்சில் அதிகபட்சமாக அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன்மூலம் 95 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி 2ஆவது இன்னிங்சை விளையாடவுள்ளது.
மலேசியாவில் வெல்டர், பைப் ஃபிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. பணியைப் பொறுத்து ₹29,120 முதல் ₹80,000 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணிகளுக்கான நேர்காணல் வருகிற 4, 5ஆம் தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலதிக தகவல்களை 044-22505886/22502267 (Phone) , 9566239685 (WhatsApp) வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.