news

News October 1, 2024

ஐ-போனுக்காக நடந்த கொடூரம்

image

உ.பியில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹு என்பவர் ஆன்லைனில் ₹1.5 லட்சம் மதிப்புள்ள iphone-ஐ கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரி செய்ய வந்த ஊழியரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். டெலிவரி ஊழியர் 2 நாள்களாக வீடு திரும்பாததால், அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவே, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

News October 1, 2024

நடிகை வனிதா விஜயகுமாருக்கு திருமணம்?

image

நடிகை வனிதா விஜயகுமார் தனது நீண்ட கால நண்பரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், வெள்ளித்திரை, சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 2020ல் பீட்டர் என்பவருடன் 3ஆவதாக திருமணம் நடந்தது. ஆனால், சில நாள்களிலேயே இருவரும் பிரிந்ததுடன் பீட்டரும் மரணமடைந்தார். இந்நிலையில் அக்.5ல் அடுத்த திருமணம் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

News October 1, 2024

Power Shake செய்வது எப்படி?

image

உடல் புத்துணர்வு & ஆரோக்கியத்துடன் இருக்க தினசரி 30 – 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்வோர், அதற்கான எனர்ஜியை பெற வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கும் பவர் ஷேக் குடித்தால் நல்ல பலன் கிடைக்குமென உடற் பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். வாழைப்பழம், பால், உலர் பழங்கள், பேரீச்சம் பழம், பிளாக் சாக்லேட், பீனட் பட்டர் இவற்றை சேர்த்து அரைத்தால் சுவையான பவர் ஷேக் ரெடி.

News October 1, 2024

ஆக்கிரமிப்பு நிலத்தில் வழிபாட்டுத் தலம்: SC வார்னிங்

image

பொது இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களை புல்டோசர் மூலம் இடிக்க உத்தரவிட நேரிடும் என SC எச்சரித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. சாலை, நதிகள், ரயில்வே பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வழிபாட்டுத் தலங்கள் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம். ஆதலால் அந்த தலங்களை இடிக்க உத்தரவிடுவோம் என்றனர்.

News October 1, 2024

இதனால்தான் அதிமுக வாக்கு வங்கி குறைந்தது: இபிஎஸ்

image

முதிய தொண்டர்களின் மறைவால் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஐடி விங் நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், அதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிந்துள்ளதாகக் கூறினார். மேலும், அதிமுகவினர் உடனடியாக இளைஞர்கள் வாக்கை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2026 தேர்தலில் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

News October 1, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14238979>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) வங்கதேசம் 2) Read Only Memory 3) பதிற்றுப்பத்து 4) ராவணா–1 5) பென்சிலின் 6) அரிஸ்டாட்டில் 7) பாஸ்டில் சிறைச்சாலை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 1, 2024

JUST NOW: வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா

image

கான்பூரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் வென்று <<14240879>>வங்கதேசத்தை<<>> இந்தியா ஒயிட் வாஷ் செய்துள்ளது. 95 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. ரோஹித் ஷர்மா 8, கில் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். எனினும் ஜெய்ஸ்வால் அதிரடியாக 51 ரன்கள் விளாச, இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என்றக் கணக்கில் கைப்பற்றியது.

News October 1, 2024

நீலகிரி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு

image

நீலகிரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு செல்ல விரும்பும் வெளி மாவட்ட, மாநில சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மறுஉத்தரவு வரும் வரை இந்த நடைமுறை நீட்டிக்கப்படுவதாக இரு மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர். சுற்றுலாவாசிகள், www.epass.tnega.org என்ற இணையதளம் சென்று இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

News October 1, 2024

இஸ்ரேல் ராணுவத்தை புகழ்ந்த இந்திய ராணுவ தளபதி

image

பேஜர் வெடிப்பு சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவத்தை இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி புகழ்ந்துள்ளார். இதுபோன்ற துல்லிய தாக்குதலுக்கு இஸ்ரேல் பல ஆண்டுகளாக தயாராகி வருவதாகவும், வெடிக்கும் பேஜர்களை தயாரிக்க இஸ்ரேலின் உளவு அமைப்பு பொய் நிறுவனத்தை உருவாக்கியது அசத்தல் நடவடிக்கை என்றும் அவர் பாராட்டியுள்ளார். பேஜர்கள், வாக்கி டாக்கி வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர்.

News October 1, 2024

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை

image

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பல சாதனைகளை படைத்து வருவதாகவும், அவர்களை கெளரவிக்கும் வகையில் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு கோரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!