India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்னும் சில தினங்களில் எல்லா சலசலப்புகளும் சரியாகிவிடும் என பாமக மூத்த நிர்வாகிகளிடம் ராமதாஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைலாபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாமக தொண்டர்கள் யாரும் சோர்ந்து போக வேண்டாம் எனவும், சித்ரா பௌர்ணமி மாநாட்டை அனைவரும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளையில், சென்னை இல்லத்தில் அன்புமணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உளவாளி, ஜமீன் கோட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், 2000-ல் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரான பிறகு சினிமாவில் விநியோகஸ்தர்களின் குரலை ஓங்கச் செய்தவர். ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ம.பி.யில் தனது மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததால், தந்தை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப மானத்தை வாங்கிய மகளையும், அவரது கணவனையும் கொல்ல வேண்டும், ஆனால் என் மகளை எப்படி கொல்வேன் என தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக தந்தை எழுதி வைத்த கடிதம் சிக்கியுள்ளது. மேலும், கோர்ட்டில் வாதாடி வென்ற வக்கீலுக்கு குடும்பம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெய்லி ரோட்டில் பார்க்கிறோம். ஆனால், ஏன் ஆட்டோக்கு மட்டும் 3 சக்கரங்கள் இருக்கின்றன என யோசித்ததுண்டா? இதுக்கு பல காரணங்கள் உள்ளன. 4 சக்கரங்களை விட 3 சக்கர வாகனத்தை Balance செய்வது ரொம்ப ஈஸி. அதே போல, சின்ன சின்ன இடங்களில், 3 சக்கர வாகனத்தை ஓட்டுவது வசதியானது. இதற்கான உற்பத்தி செலவும் குறைவு, எரிபொருள் நுகர்வும் குறைவு. அதனால்தான் ஆட்டோ இன்னும் 3 சக்கரத்துடனேயே இருக்கிறது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கையோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். ‘விசுவாவசு’ ஆண்டில் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், புன்னகையும் பூக்கட்டும் என மனதார வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில பிரபலங்களின் போட்டோ, வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அதனை பயன்படுத்தி சில கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுபோல் மோசடியில் தொடர்புடைய 18 பேஸ்புக் ஐடி, அதனோடு தொடர்புடைய 15 வலைத்தளங்களை அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமில்லா உதவி எண் 1930 (அ) www.cybercrimegov.in இணையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளது.
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை சட்டப்பூர்வமாக நீக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். அதற்காக தைலாபுரம் தோட்டத்திலேயே பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, அக்கட்சி மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி விதிப்படி பொதுக்குழுதான் தன்னை தேர்வு செய்ததாகவும், தேர்தல் ஆணையமும் அதை அங்கீகரித்ததாகவும் அன்புமணி கூறியிருந்த நிலையில், ராமதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தனது கடினமான காலங்களில் யுவராஜ் சிங்கும், சூர்யகுமார் யாதவ்வும் உடன் இருந்ததாக அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார். தன்னை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என அவர்கள் இருவரும் தொடர்ந்து நம்பிக்கை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். நாமே நம் மீது நம்பிக்கையை இழக்கும் நேரத்தில், மற்றவர்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கை, நமக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக–பாஜக கூட்டணியால் திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணில் மரண பயம் தெரிகிறது என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் அரசியல் ரீதியிலான முதல் பதிவை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், திமுகவுக்கு பொருந்தாத இந்த கூட்டணிதான், அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது என குறிப்பிட்டுள்ளார். 2026-ல் மக்கள் தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவுக்கு அருகே உள்ள பப்புவா நியூ கினியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலை <<16082738>>மியான்மரில்<<>> 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில விநாடிகள் அதிர்வுகள் நீடித்ததால் மக்கள் பீதியடைந்தனர். இதைத் தொடர்ந்து மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆசிய கண்டத்துக்கு கண்டம் ஏற்பட்டுள்ளதா என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.