India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தபால் துறை பேமண்ட் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. எக்ஸ்கியூட்டிவ் நிலையிலான 344 காலி பணியிடங்களுக்கு தபால் துறை பேமண்ட் வங்கி விண்ணப்பம் கோரியிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு, www.ippbonline.com இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அவகாசம் நாளையுடன் (அக்.31) நிறைவடையவுள்ளது. இந்தத் தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அதிமுகவின் வாக்குகளை யாரும் ஈர்க்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொன்விழா கண்ட கட்சி என்றும், தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சிகள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அப்போதுதான் தமிழகம் வளர்ச்சி கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிலர் காலையில் நீண்ட நேரம் பல் துலக்குவதை பார்த்து இருப்போம். இது பற்களுக்கு நல்லதா, கெட்டதா என பல் மருத்துவர்கள் தெரிவிக்கும் ஆலோசனையை தெரிந்து கொள்வோம். பிரஸ்ஸை வைத்து அதிக நேரம் பல் துலக்கக் கூடாதென்றும், இது பற்களுக்கும், ஈறுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். குறிப்பாக எனாமலை பாதிக்கும், பற்கள் தேய வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். SHARE IT
பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்.31) தீபாவளி ஆகும். இந்நாளைக் கொண்டாட நாடு முழுவதும் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாட மக்கள் சாெந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், அதற்கு வசதியாக இன்று முற்பகலில் மட்டும் கல்வி நிறுவனங்கள் செயல்படும், மதியம் விடுமுறை என்று TN அரசு அறிவித்துள்ளது. இந்தத் தகவலைப் பகிருங்கள்.
தீபாவளி பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டுமென மத்திய பாஜக இணையமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்து பண்டிகைகள் தவிர்த்து மற்ற பண்டிகைகளுக்கு மட்டும் ஸ்டாலின் வாழ்த்து சொல்வதாக சாடினார். இந்தாண்டு தீபாவளிக்கும் அவர் வாழ்த்து கூற வேண்டுமென்றும் எல். முருகன் வலியுறுத்தினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, BSNL ₹349 கட்டணத்தில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில், 90 நாள்கள் வேலிடிட்டியை BSNL வழங்குகிறது. மேலும், 90 நாள்களும் அன்லிமிடெட் அழைப்பு வசதி, 30 ஜிபி டேட்டா அளிக்கிறது. 30 ஜிபி டேட்டா தீர்ந்த போதிலும் 40 கேபிபிஎஸ் வேகத்துடன் தடையில்லா இணையதள வசதி வழங்குகிறது. ஆனால் இது அக் 28 – நவ.28. வரை ரீசார்ஜ் செய்வோருக்கே பொருந்தும் எனக் கூறியுள்ளது.
யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்? என்று தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி 2022 நவம்பர் வரை ஓய்வு பெற்றவர்கள் 10,000 என்றும், அவர்களுக்கான ஓய்வுக்கால பயன்களின் மதிப்பு ரூ.3,000 கோடி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், 8ல் 1 பங்கு அளவுக்கு ரூ.372.06 கோடியே தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் 300 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை நாக்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாள்களாக தொடர்ந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து விசாரித்து, மகாராஷ்டிராவின் கோண்டா பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் உய்க்கி என்பவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் 13 நாள்களில் 300 விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.
விமானத்தில், துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்ட சில பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில், சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காயும் ஒன்று என்றால் வினோதமாக உள்ளது அல்லவா? வாருங்கள் இதற்கான காரணத்தை அறிவோம். தேங்காயில் எண்ணெய் சத்து இருப்பதால், நடுவானில் திடீரென அழுத்தம் காரணமாக தீப்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக சாெல்லப்படுகிறது. இதன்காரணமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக முடியும். இதற்கு விதி விலக்காக ஒருவர் 4 முறை அதிபர் தேர்தலில் வென்றுள்ளார். அவர் யாரென தெரிந்து கொள்வோம். 1932இல் முதலில் வென்று அதிபரான பிராங்ளின் ரூஸ்வெல்ட், 1944 வரை 4 தேர்தல்களில் வென்றார். அவரின் பதவிக்காலத்தில் பொருளாதார மந்தநிலை, 2ஆம் உலகப் போரை அமெரிக்கா எதிர்கொண்டது. இதனாலேயே சிறந்த 3 அதிபர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.
Sorry, no posts matched your criteria.