news

News October 30, 2024

UPI மூலம் பணம் செலுத்திய ஸ்பெயின் பிரதமர்

image

இந்தியா அறிமுகம் செய்த UPI வசதி மிகப்பெரிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஜ், மும்பையில் விநாயகர் சிலையை விலைக்கு வாங்கினார். அப்போது அவர், அந்த சிலைக்கு பணத்தை ரொக்கமாக கொடுக்காமல் UPI மூலம் அளித்தார். இதை வைத்து பார்க்கையில், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளிலும் UPIக்கு பெரும் வரவேற்பு இருப்பது தெரிவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

News October 30, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 30 (ஐப்பசி 13) ▶ புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்:12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்:7:30 AM – 9:00 AM ▶குளிகை:10:30 AM – 12:00 PM ▶ திதி: அதிதி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு ▶ பரிகாரம்: பால்▶ நட்சத்திரம்: ஹஸ்தம் ▶சந்திராஷ்டமம்: சதயம், அவிட்டம்.

News October 30, 2024

உலகிலேயே அதிக மாசடைந்த நகரம் எது தெரியுமா?

image

பாகிஸ்தானின் லாகூர் நகரமே உலகின் மிகவும் மாசடைந்த நகரம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் டான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், லாகூரில் காற்றின் தரம் 708 குறியீடாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட மிக மோசமாகி இருப்பதாகவும், இதனால் லாகூர் மக்களின் வாழ்க்கை கேள்விக்கு ஆளாகி இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2024

எந்த நட்சத்திரத்திற்கு எந்தக் கல்? (2/2)

image

➤ஆயில்யம் – செவ்வந்திக்கல் ➤பூரம் – வெள்ளை பவழம் ➤சித்திரை – மூங்கா பவளம் ➤சுவாதி – பச்சை மரகதம் ➤விசாகம் – மஞ்சள் சபையர் ➤அனுஷம் – நீலக்கல் ➤கேட்டை – ஜிர்கான் கல் ➤மூலம் – லஹசுனியா ➤பூராடம் – வெள்ளை சபையர் ➤உத்திராடம் – நீலமணி ➤திருவோணம் – வெள்ளை புஷ்பராகம் ➤அவிட்டம் – சிவப்பு கார்னெட் ➤சதயம் – நீலவண்ண முத்து ➤பூரட்டாதி – நீல வைரம் ➤உத்திரட்டாதி – கனக புஷ்பராகம் ➤ரேவதி – மஞ்சள் குவார்ட்ஸ்.

News October 30, 2024

எந்த நட்சத்திரத்திற்கு எந்தக் கல்? (1/2)

image

ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய ரத்தினக் கல்லை ஜாதக ரீதியாக ஆராய்ந்து அணிந்து கொண்டால் நன்மைகள் ஏற்படும் என ரத்ன சாஸ்திரம் கூறுகிறது. அதன் விவரம் இதோ: ➤அஸ்வினி – வைடூரியம் ➤பரணி- வைரம் ➤கார்த்திகை – பவழம் ➤ரோகிணி – முத்து ➤மிருகசீரிடம் – அமுதக்கல் ➤பூசம் – நீலமணி ➤திருவாதிரை – கோமேதகம் ➤புனர்பூசம் – புஷ்பராகம் ➤மகம் – பூனையின் கண் ரத்தினம் ➤உத்திரம் – மாணிக்கம் ➤அஸ்தம் – முத்து.

News October 30, 2024

உங்களுக்கு இந்த Keyboard Shortcuts தெரியுமா?

image

கீபோர்டில் Cut, Copy, Paste shortcuts உங்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் சில முக்கிய shortcuts:
*Screenshots எடுக்க -Windows key+Shift+S,
*tab’கள் மறைக்கப்பட்டு Desktop தெரிய -Windows key+D
*சிஸ்டம் Hang ஆகி விட்டால் -Ctrl+Shift+Esc. இதனால் Task Manager ஓப்பனாகும்
*ஓப்பனில் இருக்கும் Tab’களை மாற்ற -Ctrl+Shift+Tab
*ஓபனில் இருக்கும் விண்டோஸ்களை அறிய -Windows key+Tab. SHARE IT

News October 30, 2024

எல்லையில் இந்தியா, சீனா படைகள் முழுவதும் வாபஸ்

image

லடாக் எல்லையில் இந்தியா, சீனா படைகள் முழுவதும் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கால்வன் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, தேப்சாங், தெம்சாக் பகுதிகளில் 2 படைகளும் எதிரெதிரே 4 ஆண்டுகளாக முகாமிட்டிருந்தன. அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில், படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படைகள் முழுவதும் வாபஸ் பெறப்பட்டதை இந்தியா, சீனா உறுதி செய்துள்ளன.

News October 30, 2024

மீனவர்களுக்கு சிறப்பு நிவாரண தொகை.. அதிமுக வலியுறுத்தல்

image

மீனவர்களுக்கு உடனடியாக சிறப்பு நிவாரணத் தொகை வழங்க அதிமுக வலியுறுத்தியுள்ளது. X பக்க பதிவில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், முன்பு தாம் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, தீபாவளிக்கு முன்னர் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார். இன்னும் 2 நாட்களில் தீபாவளி வரவுள்ள நிலையில், நிவாரண தொகை வழங்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.

News October 30, 2024

இந்த மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை

image

இரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பெயரை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்றும், இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 30, 2024

அழிவின் விளிம்பில் இருக்கும் ஆப்பிரிக்க பென்குயின்

image

தனித்துவமான ஆப்பிரிக்க பென்குயின் இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக IUCN (இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்) தெரிவித்துள்ளது. உலகில் உள்ள 18 வகை பென்குயின்களில், இந்த ஆப்பிரிக்க வகை முதலில் அழிவை சந்திக்கும் என கூறியுள்ளது. உணவுப் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் ஆகியவை பென்குயின் உயிர்வாழ்வதற்கான பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இவற்றை பாதுகாக்க தென்னாப்பிரிக்க அரசை IUCN வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!