news

News April 13, 2025

அபிஷேக் ஷர்மாவிற்கு துணை நின்ற 2 ஸ்டார்கள்

image

தனது கடினமான காலங்களில் யுவராஜ் சிங்கும், சூர்யகுமார் யாதவ்வும் உடன் இருந்ததாக அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார். தன்னை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என அவர்கள் இருவரும் தொடர்ந்து நம்பிக்கை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். நாமே நம் மீது நம்பிக்கையை இழக்கும் நேரத்தில், மற்றவர்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கை, நமக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

அதிமுக கூட்டணியால் அஞ்சும் திமுக: நயினார் விமர்சனம்!

image

அதிமுக–பாஜக கூட்டணியால் திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணில் மரண பயம் தெரிகிறது என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் அரசியல் ரீதியிலான முதல் பதிவை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், திமுகவுக்கு பொருந்தாத இந்த கூட்டணிதான், அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது என குறிப்பிட்டுள்ளார். 2026-ல் மக்கள் தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

ஆசிய கண்டத்துக்கு கண்டமா?

image

தென்கிழக்கு ஆசியாவுக்கு அருகே உள்ள பப்புவா நியூ கினியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலை <<16082738>>மியான்மரில்<<>> 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில விநாடிகள் அதிர்வுகள் நீடித்ததால் மக்கள் பீதியடைந்தனர். இதைத் தொடர்ந்து மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆசிய கண்டத்துக்கு கண்டம் ஏற்பட்டுள்ளதா என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News April 13, 2025

NIA-விடம் ராணா கேட்ட 3 பொருட்கள்

image

NIA கஸ்டடியில் இருக்கும் தீவிரவாதி ராணா, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், ஒரு பேனா மற்றும் சில பேப்பர்களை கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. ராணா கோரிய 3 பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை தவிர்த்து வேறு எந்த பொருளையும் அவர் கேட்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ராணா 5 முறை தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

News April 13, 2025

வாங்க மரம் நடலாம்! CSK-யை கலாய்க்கும் KKR!!

image

CSK அணியை இப்போது KKR அணியும் கலாய்த்துள்ளது. KKR-க்கு எதிரான மேட்ச்சில் CSK அணி, மொத்தம் 61 Dot ball-கள் ஆடிய நிலையில், தங்கள் அணி வீரர்கள் மரம் நடுவது போல ஒரு போட்டோவை ரிலீஸ் செய்துள்ளது KKR. அதில், ‘Eco-friendly Knights’ எனவும் கேப்ஷன் இட்டுள்ளது. CSK ரசிகர்கள் எதுவும் செய்யமுடியாமல், வாயை மூடி அழுது வருகின்றனர். CSK இந்த தொடரில் சொதப்ப காரணம் என்ன?

News April 13, 2025

கவர்னர்களுக்கு எதிரான தீர்ப்பு.. மத்திய அரசின் அடுத்த மூவ்

image

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக SC வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மாநில அரசு இயற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்து SC சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இத்தீர்ப்பை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில அரசுகள் வரவேற்ற நிலையில், மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

News April 13, 2025

அசுர வளர்ச்சியில் செமி கண்டக்டர் துறை: UBS

image

இந்தியாவில் செமிகண்டக்டர் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. 2030க்குள் அதன் சந்தை இரட்டிப்பு வளர்ச்சியை எட்டக்கூடும் என நிதி சேவைகள் நிறுவனமான UBS கணித்துள்ளது. 2025 – 2030 வரையிலான அதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி (CAGR) 15% ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ₹4 லட்சம் கோடியாக இருக்கும் செமி கண்டக்டர் சந்தையின் வருவாய் 2030ல் ₹8 லட்சம் கோடிக்கு அதிகமாக உயருமாம்.

News April 13, 2025

செல்வப்பெருந்தகை Dy CM? திமுக கூட்டணியில் சலசலப்பு

image

‘2026-ன் துணை முதல்வர் செல்வப்பெருந்தகை’ என காங்., சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ADMK-BJP கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இதனை செய்து வருவதாக பலரும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?

News April 13, 2025

அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா?

image

அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை மமிதா பைஜுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ‘பிரேமலு’ வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடித்து வருவதாலும், மேலும், ஒப்புக்கொண்ட படங்கள் லைன்அப்பில் இருப்பதாலும், அர்ஜுன் தாஸுக்கு மமிதா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு குறைவே எனக் கூறப்படுகிறது.

News April 13, 2025

அடுத்த 10 நாள்கள் முக்கியம்.. ஒதுங்கியே இருங்க: நிதின்

image

அடுத்த 10 நாள்களுக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என Zerodha நிறுவன CEO நிதின் காமத் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த 10 நாள்களில் அரசு விடுமுறைகளை தவிர்த்து 4 நாள்கள் தான் வர்த்தக நாள் எனவும், சந்தையின் ஏற்ற இறக்கமான சூழலில் இருந்து ஒதுங்கி இருக்கவும் அவர் கூறியுள்ளார். வெற்றிகரமான வர்த்தகத்திற்கு, சந்தை நிலையை கவனத்தில் கொண்டு நிதானமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!