news

News October 30, 2024

ரேஷன் அட்டைதாரர்கள் இனி அலைய வேண்டாம்

image

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர்களை, நாமே சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு ‘MERA RATION 2.0’ செயலியை (APP) ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்திடுங்கள். பின்னர், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பரை பயன்படுத்தி உள்நுழைந்து, Family Details என்பதை க்ளிக் செய்யுங்கள். அதில், Add New Member-ஐ தேர்வு செய்து புதிய நபரை இணைக்கலாம். இதை தவிர, ரேஷன் புதுப்பிப்பு, ரேஷன் ரசீது தகவல்களையும் பார்க்கலாம்.

News October 30, 2024

மூலிகை: நல்ல நுண்கிருமிகளை அதிகரிக்கும் சுண்டைக்காய்

image

வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரிமானம் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு இருப்பதாக அகத்தியர் பாடல் போற்றுகிறது. ருடின், கேம்பெரோல், குவெர்செடின், சோலாஜெனின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் வற்றல் சூரணத்தை சிறிதளவு மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News October 30, 2024

நடிகர் சூர்யா உருக்கமாக இரங்கல்

image

கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் இன்று காலை உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், மரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, நிஷாத் மறைவுக்கு சூர்யா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு முக்கிய நபராக கங்குவா படக்குழுவினரால் என்றும் நினைவுக் கூறப்படுவீர்கள் எனக் குறிப்பிட்டு, அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

தங்கம் கையிருப்பு 855 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது!

image

உலகளாவிய போர்கள், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், RBIஇன் தங்கம் கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது. இதுதொடர்பாக RBI வெளியிட்ட பதிவில், 2024 செப்டம்பர் நிலவரப்படி, 510.46 மெட்ரிக் டன் தங்கம் உள்நாட்டில் உள்ளது. மீதமுள்ள தங்கம் சர்வதேச வங்கிகளில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச்-செப் இடைப்பட்ட காலத்தில், 32 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு (9.32%) அதிகரித்துள்ளது.

News October 30, 2024

டாடா விட்டுச்சென்ற பாதையில் பயணிக்கும் லோதா

image

சமூகநலப் பணிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கிய ரத்தன் டாடாவை பின்பற்றும் வகையில் அபிஷேக் லோதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லோதா குழுமத்தின் மேக்ரோடெக் டெவலப்பர்ஸின் சி,இ.ஓ.,வான அவர் & அவரது குடும்பத்தினர் தங்கள் வசமுள்ள மொத்த பங்குகளில் இருந்து 5இல் ஒரு பங்கை மக்கள் நலப் பணிகளுக்காக தீபாவளியையொட்டி லோதா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளனர். இந்த பங்குகளின் மதிப்பு ₹20,000 கோடியாகும்.

News October 30, 2024

ஏலத்தொகையில் மாற்றம் செய்த பிசிசிஐ

image

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வீரர்களுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகையை ரூ.30 லட்சமாக பிசிசிஐ உயர்த்தியுள்ளது. இந்தாண்டு அணிகளின் பர்ஸ் 20% அதிகரித்து ரூ.120 கோடியாக உயர்ந்துள்ளதால், வீரர்களின் அடிப்படை விலையும் உயர்ந்துள்ளது. இதனால் உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்கள் பயனடைவர். இதற்கு முன் வீரர்களின் குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.20 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News October 30, 2024

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு..

image

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து சேவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களை காட்டிலும் இன்று அதிகளவில் மக்கள் வெளியேறுவர் எனத் தெரிகிறது. அத்துடன், மாலையில் கூட்ட நெரிசலும் அதிகரிக்கக்கூடும். இதனால், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர், முன்கூட்டியே பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்லவும்.

News October 30, 2024

தீபாவளி: குரங்குகளுக்காக நடிகர் ₹ 1 கோடி நன்கொடை

image

தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலை சுற்றி வசிக்கும் ஏராளமான குரங்குகளுக்கு உணவு வழங்க ₹ 1 கோடி நன்கொடையை அவர் வழங்கியுள்ளார். இதற்காகவே செயல்படும் ஆஞ்சநேயா சேவா டிரஸ்ட்டுக்கு இந்த நிதியை அவர் வழங்கியுள்ளார்.

News October 30, 2024

ராணுவத்தில் சேர ஆஃபர் வந்துச்சு: SK

image

ராணுவத்தில் சேர தனக்கு ஆஃபர் வந்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர், டெல்லியில் ராணுவ அதிகாரிகளுக்காக ‘அமரன்’ சிறப்புக் காட்சியை திரையிட்டோம். இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி. அதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் என்னிடம், உங்களுக்கு ராணுவத்தில் இணைய வாய்ப்பு தருகிறோம், நீங்கள் இணையலாம் என்றனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது’ என்றார்.

News October 30, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14488162>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) சீனர்கள் (7ஆம் நூற்றாண்டு) 2) குளிர் காலம் 3) நோய் இயல் 4) நெதர்லாந்து 5) லுஃப்ட்வாஃபே 6) Director General of Police 7) சான்ட்போனி 8) Fibre Glass. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!