India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (அக். 05) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (அக். 05) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ICC மகளிர் T20 WC தொடரின் முதல் போட்டியில் IND படுதோல்வி அடைந்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசி., 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை எளிதில் எட்டி வெற்றிபெறலாம் என இந்தியா களமிறங்கியது. ஆனால் NZ அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், இந்தியா 19 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ஒருவர் கூட 15 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை.
கடந்த மதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 18 மீனவர்களில் 13 பேரை ஊர் காவல்துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுவித்தது. அதேபோல கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், பருத்தித்துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் அவர்களை விடுதலை செய்தது.
*மேஷம் – சுகம் உண்டாகும் *ரிஷபம் – புகழ் தேடி வரும் *மிதுனம் – மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் *கடகம் – ஆதாயம் கிடைக்கும் *சிம்மம் – தாமதம் ஏற்படும் *கன்னி – வேலையை விருப்பத்துடன் செய்வீர் *துலாம் – விவேகத்துடன் செயல்படுங்கள் *விருச்சிகம் – தோல்வி வரும் *தனுசு – வீண் அலைச்சல் ஏற்படும் *மகரம் – வெற்றி கிடைக்கும் *கும்பம் – நன்மை உண்டாகும் *மீனம் – பக்தியுடன் இருப்பீர்.
விஜய்யின் விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டிற்கு புதிய சிக்கல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் வருவார்கள் என காவல்துறை கணித்துள்ளதால், வாகன நிறுத்துமிடத்திற்கு 150 ஏக்கர் தேவைப்படும் எனத் தெரிகிறது. ஆனால், பார்க்கிங்குக்கு தற்போது 45 ஏக்கர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் இடங்களை பெறுமாறு தவெகவுக்கு போலீஸார் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் சமீபத்திய நேர்காணலில் தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். ஒரு மல்டிஸ்டார் படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றபோது, நாயகன் இரவில் தனது ரூம் கதவை தட்டியதாக கூறியுள்ளார். கதவை திறக்க மறுத்ததையடுத்து அவர் கதவை உடைத்ததாகவும், அதன்பின் அவருடன் சேர்ந்து நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தான் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதாகவும் கூறியுள்ளார்.
ரகசியமாக இயங்கிவந்த ஹிஸ்புல்லா தலைவர் நசருல்லா, இஸ்ரேலின் தாக்குதலில் பலியானார். இதுபற்றி லெபனான் வெளியுறவு அமைச்சர் அப்தல்லா ரஷித் ஹபிப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். நசருல்லா கொல்லப்படும் முன், ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டு, அது அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்பின் நசருல்லா வெளியே வர, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல், நசருல்லாவை கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அக்.11 ஆயுத பூஜை, அக்.12 சரஸ்வதி பூஜை மற்றும் அக்.12 ஞாயிறு என அடுத்த வாரம் தொடர்ந்து 3 நாள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கும், மற்ற நகரங்களில் இருந்தும் அக்.9,10இல் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்யலாம்.
மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 160/4 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய நியூசி கேப்டன் டெவினே அரை சதம் (57*) அடித்து அசத்தினார். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேணுகா தாகூர் 2, அருந்ததி ரெட்டி, ஆஷா ஷோபனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 161 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Sorry, no posts matched your criteria.