India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தோனேசியாவில் தற்காலிக இன்பத் திருமண முறை அதிகரித்து வருகிறது. சுற்றுலா செல்லும் ஆண்கள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து செல்பவர்கள், அங்குள்ள பெண்களுக்கு ஒரு தொகையை கொடுத்து திருமண ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர். இதன்படி பெண்ணும், அவருடன் மனைவியாக வாழ்வார். அந்நபர் நாட்டிலிருந்து புறப்பட்டதும், திருமணம் செல்லாததாகி விடும். வறுமையால் பெண்கள் இந்த சட்டவிரோத திருமணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
கரூரில் அரசுப் பள்ளி ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை திருடி, அதன் மூலம் லோனில் கார் வாங்கிய ராஜா என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் தவெக நிர்வாகி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து தவெக கரூர் மாவட்ட தலைவர் மதியழகன், ராஜாவுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவருக்கு தவெகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். 16GB RAM, 512GB SSD கார்டு, திரையைப் பொறுத்தவரை முழு HD 1920×1080 மேற்பட்ட தெளிவுத்திறன், 6 மணிநேர பேட்டரி கொள்திறன் கொண்டதை தேர்ந்தெடுக்கலாம். USB-C, HDMI & Wi-Fi 6 போன்ற முக்கிய இணைப்புகள் இருப்பதை உறுதி செய்யவும். சேவை & உத்தரவாதத்தை வழங்கும் விற்பனையாளரிடம் இருந்து
மாடலை சோதித்து லேப்டாப் வாங்குவதே சிறந்தது.
தமிழகம் முழுவதும் வரத்து குறைவு காரணமாக தக்காளி, வெங்காயம் விலை மேலும் உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி ₹120 வரையும், வெங்காயம் ₹90 வரையும் விற்கப்படுகிறது. இதனால் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம், தக்காளி விற்குமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2009இல் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற ‘சிவா மனசுல சக்தி’ 2ஆம் பாகத்தை எடுக்கவிருப்பதாக அப்படத்தின் இயக்குநர் M.ராஜேஷ் அறிவித்துள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “SMS படத்தின் 2ஆம் பாகம் குறித்து ஜீவாவுடனும் பேசி இருக்கிறேன். திரைக்கதை தயாராகி வருகிறது. இது பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னர் படமாக இருக்கும்” என்றார். இப்படத்தை ஜீவாவே தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பங்குச்சந்தை இதுவரை இல்லாத சரிவை நோக்கி செல்கிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 4,100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து, ரூ.16 லட்சம் கோடி இழப்பை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர், சீனாவின் 140 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் ஆகியவற்றால், இந்தியச் சந்தையை விட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறி வருவதே இந்த சரிவுக்கு காரணமாகும்.
ஸ்மார்ட்ஃபோன் வந்ததில் இருந்து செல்போனை அடிக்கடி மாற்றுவது ஃபேஷனாகி விட்டது. அப்படி புது மொபைல் வாங்குவோர் பலரும், அதன் பின்னால் இருக்கும் ஸ்டிக்கரை பிய்த்து விடுவார்கள். ஆனால், செல்போனில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், வாரண்ட்டி claim-க்கு அந்த ஸ்டிக்கரை பல நிறுவனங்கள் கேட்கின்றன. எனவே, அந்த ஸ்டிக்கரை போனில் இருந்து எடுக்க வேண்டாம். எடுத்தால் கூட, போன் பாக்ஸில் அதை ஒட்டி பத்திரப்படுத்துவது நல்லது.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 7ஆவது வாரமாக உயர்ந்துள்ளது. செப். 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு $12.59 பில்லியன் உயர்ந்து புதிய வரலாற்று உச்சமாக $704.88 பில்லியனாக உயர்ந்தது. சீனா, ஜப்பான் & சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து, 4ஆவது பொருளாதாரமாக இந்தியா சாதனை படைத்துள்ளது. ஒரு வாரத்தில் $12.59 பில்லியன் அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்களை சாப்பிடுவதால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து கணிசமான அளவு குறைவதாக New England Medical இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது. USAஇல் கடந்த 30 ஆண்டு காலத்தில் 1.2 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், ஒருவர் தினமும் எவ்வளவு நட்ஸ்களை உட்கொள்கிறார்களோ அந்தளவு நன்மை ஏற்படுகிறது. அவர்கள் புகைப்பழக்கம் இல்லாமலும், உடற்பயிற்சி செய்பவர்களாகவும் இருப்பதால் ஆயுள் கூடுகிறதென்றும் தெரியவந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில், *மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைக்கவும் *ஒவ்வொரு வார்டிலும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு உருவாக்கவும் *தாழ்வான பகுதிகளில் இருக்கும் மின் பெட்டிகளை உயர்த்தி வைக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.