India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கவர்னர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என திக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட வைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்துள்ள கி.வீரமணி, மதச்சார்பின்மைக்கு எதிராக கவர்னர் நடந்து கொள்வதாகவும், மாணவர்களிடம் மதவெறியை தூண்ட முயற்சிக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மியான்மரில் இன்று (ஏப்.13) காலை 7:54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.6-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 28-ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்களால் சுமார் 3,500 பேர் பலியாகினர். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
9ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான மாணவர்களுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அவற்றை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், இத்தேர்வுக்கான ஊக்கத் தொகை பெறுவதற்கு தகுதிபெற்ற மாணவர்களின் விவரப் பட்டியலும் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
குளத்தில் வட்ட இலையோடு வளரும் தாமரை தமிழகத்தில் இரட்டை இலையோடு மலர்ந்து வருவதாக அதிமுக – பாஜக கூட்டணி குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். புதிதாக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், PM மோடியின் கனவை நிறைவேற்றுவார் எனவும் ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்றும் சூளுரைத்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள ‘குட் பேட் அக்லி’ ரசிகர்களை கவர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படம் 3 நாள் முடிவில் உலகளவில் ₹120 கோடி வரையிலும், இந்தியாவில் மட்டும் ₹62 கோடி வசூலை நெருங்கி இருக்கும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. படம் எப்படி இருக்கு.. நீங்க சொல்லுங்க?
சிக்கன் விலை இன்று(ஏப்.13) சற்று உயர்ந்துள்ளது. நாமக்கல் மொத்த சந்தையில் முட்டை ₹4.15க்கும், முட்டைக் கோழி ₹85க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் கறிக்கோழி ₹7 உயர்ந்து ₹96ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விலையில் தோல் நீக்கிய கோழிக்கறி கிலோ ₹200 – ₹240 வரையிலும், தோலுடன் கூடிய கோழிக்கறி ₹160 – ₹200 வரையிலும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் ஒரு கிலோ எவ்வளவு?
மே.வங்கத்தில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், வக்ஃப் சட்டத்தை அரசு அமல்படுத்தாது என அம்மாநில CM மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்தச் சட்டத்தை மத்திய அரசு தான் கொண்டு வந்தது. எனவே, அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மதத்தின் பெயரால் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலையில் தரிசனத்திற்காக சென்ற 10 பக்தர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் சன்னிதான ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பம்பாவின் திரிவேணி மணப்புரத்திலுள்ள காபி லேண்ட் ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பம்பா டூட்டி மாஜிஸ்திரேட் தலைமையிலான குழு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தது.
பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கிறிஸ்தவ மதபோதகரான இவர் 17 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகளுக்கு தனது வீட்டில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக காந்திபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாள்களாக தலைமறைவாக இருந்த நிலையில் அவர் நள்ளிரவில் சிக்கியுள்ளார்.
TN சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது. இதனால், திமுக தரப்பும் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் பெண்களுக்கான இலவசத் திட்டங்கள் அரசுக்கு கைகொடுக்காது என உளவுத் துறை கொடுத்த அறிக்கை திமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகளும் மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம். உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.