news

News October 31, 2024

பிஸ்தா உண்பதால் ஏற்படும் நன்மைகள்

image

மூளை தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிஸ்தாவுக்கு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த டஃப்ட்ஸ் பல்கலை. ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் லுடீன், ஜீயாக்சாண்டின் ஆகிய நுண்சத்துகள் உள்ளன. கண் பார்வை குறைபாடு நீக்கி, விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துகள்
பிஸ்தாவில் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, இரும்பு, தாமிரம் & செலினியம் போன்றவை முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.

News October 31, 2024

விசுவாசம்னா, அது கோலி தான்!

image

ஐபிஎல் 2025 தொடருக்கான ஆர்சிபி அணியில், அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி, ரூ.21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து 18 ஐபிஎல் சீசன்களுக்கும் ஒரே அணியில் ஆடிவரும் ஒரே வீரர் கோலி தான். அணி கோப்பையை வெல்லவில்லை என கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், அணியை விட்டுக் கொடுக்காமல், அதே அணியில் தொடரும் கோலி, இந்த முறை கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை கோப்பையை வெல்வாரா?

News October 31, 2024

ஜாலியா பட்டாசு வெடிங்க; ஆனா, இதையும் கவனிங்க

image

தீபாவளி வந்தாச்சு, கொண்டாட்டம் தொடங்கியாச்சு. ஆனால், இந்த மகிழ்ச்சியான நாள் யாருக்கும் துயரத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. ஜாலியாக பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தெருநாய்கள், கால்நடைகள் மற்றும் பிற உயிர்களை பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள். உங்களின் கொண்டாட்டம் அவற்றுக்கு கொடுமையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாலையில் சென்றுவரும் மக்களை பற்றியும் அக்கறை கொள்ளுங்கள். BE SAFE!

News October 31, 2024

ஹென்ரிச் கிளாசன், The Most Valuable Player!

image

2025 ஐபிஎல் ரிட்டென்ஷன் பட்டியலில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சன்ரைசர்ஸ் அணியின் ஹென்ரிச் கிளாசன். அவரை 23 கோடிக்கு தக்க வைத்துள்ளது அந்த அணி. அடுத்த இடங்களில் விராட் கோலி (RCB), நிக்கோலஸ் பூரன் (LSG) ஆகியோர் 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு உள்ளனர். சஞ்சு சாம்சன் (RR), ஜெய்ஸ்வால் (RR), பும்ரா (MI), பாட் கம்மின்ஸ் (SRH) 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டனர்.

News October 31, 2024

எளியவர்களுக்காக மக்கள் மனநிலை மாற வேண்டும்!

image

‘குயிக் காமர்ஸ்’ எனப்படும் ஆன்லைன் வணிகத்தால் சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரம் அழிவின் விளிம்பை எட்டியுள்ளது. இந்த பகாசுர ஆன்லைன் வர்த்தகத்தால் மளிகை கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், சாலையோர வணிகர்கள் என 2 லட்சம் கடைகள் மூடுவிழா கண்டுள்ளன. ‘பண்டிகை கால சேமிப்பு’ என்ற நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு நிலை மனமாற்றமும் போக்கும் எளியவர்களின் நிலையை எண்ணி மாற வேண்டும்.

News October 31, 2024

28 மாவட்டங்களுக்கு மழை ALERT

image

தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

News October 31, 2024

23 கோடிகளை பெற்ற கிளாசன்..SRH Retention list

image

சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ்(18 கோடி), கிளாசன் (23 கோடி), அபிஷேக் சர்மா (14 கோடி) நிதிஷ் குமார் ரெட்டி (6 கோடி), டிராவிஸ் ஹெட் (14 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். அணியில் இருந்து நட்சத்திர ஆட்டக்காரர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

News October 31, 2024

பள்ளிக்கு அருகில் புகையிலை விற்றால் ஜெயில்: கோர்ட் அதிரடி

image

புகையிலை பயன்பாடு விவகாரத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனைகளை ஆண்டுக்கு இருமுறை செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளின் அருகில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்து பிடிபட்டால் சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் ஆணையிட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்து கைதானவர்கள் ஜாமின் கோரிய வழக்கில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News October 31, 2024

விடுவிக்கப்பட்ட ராகுல்..LSG தக்கவைத்து வீரர்கள்

image

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரான்(21 கோடி), மயங்க் யாதவ் (11 கோடி), ரவி பிஷ்னோய் (11 கோடி), ஆயுஷ் படோனி (4 கோடி),மொக்சின் கான் (4 கோடி)ஆகியோர் தக்கவைக்கப்பட்டவர்கள். நட்சத்திர ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். ராகுல் RCB அணியில் இணைவார் என நம்பப்படுகிறது.

News October 31, 2024

2 Uncapped players மட்டுமே..PBKS தக்கவைத்த வீரர்கள்

image

நடைபெறவுள்ள IPL 2025 தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள Auction’க்காக பஞ்சாப் அணி Uncapped Players’ஆன ஷஷாங்க் சிங்(5.5 கோடி) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (4 கோடி) ஆகியோர் தக்கவைத்துள்ளது. தற்போது அந்த அணி அதிக பணத்துடன் அதாவது ரூ. 110.5 கோடியுடன் IPL acution’க்கு வருகிறது.

error: Content is protected !!