news

News October 31, 2024

ஒரு இன்ச் கூட விட்டுத் தரமாட்டோம்: PM

image

எல்லையில் ஒரு இன்ச் நிலத்தை கூட அண்டை நாடுகளுக்கு விட்டுத் தரமாட்டோம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். மேலும், ராணுவத்திற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை (ITC) அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீனாவை மையமாகக் கொண்டு லக்னோவிலும், பாகிஸ்தானுக்கு ஜெய்பூரிலும், திருவனந்தபுரத்தில் கடற்படைக்காக ITC-களை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

News October 31, 2024

ப்ரஷர் குக்கரும், வளிமண்டல அழுத்தமும்

image

சாதாரண பாத்திரத்தை விட குக்கரில் வேகமாக சமைக்க முடிகிறது. இதற்கு நீரின் கொதிநிலையே காரணம். சாதாரண பாத்திரத்தில் நீரின் கொதிநிலை 100°C-ஐ எட்டியதும் நீராவியாகி விடும் என்பதால் வெப்பம் அதிகரிக்காது. ஆனால், பிரஷர் குக்கரில் உள்ள நீர் 100°C எட்டியதும் உண்டாகும் நீராவி வெளியே செல்ல வழியில்லை. அப்போது வெளியே இருக்கும் வளிமண்டல அழுத்தத்தைவிட இருமடங்கு அழுத்தம் உண்டாக்கி, உணவும் விரைவாக வெந்து விடுகிறது.

News October 31, 2024

SHOCKING: 20 பேருக்கு HIV பரப்பிய 17 வயது பெண்

image

உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் 17 வயது டீன்-ஏஜ் சிறுமி மூலம் 20 இளைஞர்களுக்கு HIV தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலார்கட்டி பகுதியை சேர்ந்த இந்த சிறுமி, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் பணம் தேவைப்பட, உள்ளூர் இளைஞர்களுடன் உறவு கொண்டிருக்கிறார். அந்த வகையில் 20 பேருக்கு எயிட்ஸ் நோய்க்கு காரணமான HIV தொற்று பரவியுள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்துவருகிறது.

News October 31, 2024

ஸ்வீட் பறிமாறிக் கொண்ட இந்திய-சீன படைகள்

image

தீபாவளியை முன்னிட்டு கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய-சீன வீரர்கள் இனிப்பு பரிமாறிக் கொண்டனர். டெம்சோக், டெப்சாங் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த வீரர்களை இருநாடுகளும் நேற்று முழுமையாக திரும்பப் பெற்ற நிலையில், இன்று இனிப்பு வழங்கியுள்ளனர். 2020 கல்வான் மோதலுக்கு முன்பு இருந்த ரோந்து உரிமை தொடர்பாக கமாண்டர் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

News October 31, 2024

கண்டிப்பா இந்த இடங்களில் இன்று விளக்கு ஏத்துங்க..

image

தீபாவளியன்று வீட்டில் உள்ள சில விசேஷ இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். வீட்டின் நுழைவாயில், சமையலறை அறை, துளசி மாடம் போன்ற இடங்களில் விளக்கு வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர கோயில்கள், மடங்கள், மரங்கள் மற்றும் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தீபம் ஏற்றினால் நல்லது என்பது ஐதீகம். இந்த தீபத் திருநாளை நீங்கள் எப்படி கொண்டாடுகிறீர்கள்? SHARE IT

News October 31, 2024

பிஸ்தா உண்பதால் ஏற்படும் நன்மைகள்

image

மூளை தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிஸ்தாவுக்கு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த டஃப்ட்ஸ் பல்கலை. ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் லுடீன், ஜீயாக்சாண்டின் ஆகிய நுண்சத்துகள் உள்ளன. கண் பார்வை குறைபாடு நீக்கி, விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துகள்
பிஸ்தாவில் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, இரும்பு, தாமிரம் & செலினியம் போன்றவை முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.

News October 31, 2024

விசுவாசம்னா, அது கோலி தான்!

image

ஐபிஎல் 2025 தொடருக்கான ஆர்சிபி அணியில், அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி, ரூ.21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து 18 ஐபிஎல் சீசன்களுக்கும் ஒரே அணியில் ஆடிவரும் ஒரே வீரர் கோலி தான். அணி கோப்பையை வெல்லவில்லை என கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், அணியை விட்டுக் கொடுக்காமல், அதே அணியில் தொடரும் கோலி, இந்த முறை கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை கோப்பையை வெல்வாரா?

News October 31, 2024

ஜாலியா பட்டாசு வெடிங்க; ஆனா, இதையும் கவனிங்க

image

தீபாவளி வந்தாச்சு, கொண்டாட்டம் தொடங்கியாச்சு. ஆனால், இந்த மகிழ்ச்சியான நாள் யாருக்கும் துயரத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. ஜாலியாக பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தெருநாய்கள், கால்நடைகள் மற்றும் பிற உயிர்களை பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள். உங்களின் கொண்டாட்டம் அவற்றுக்கு கொடுமையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாலையில் சென்றுவரும் மக்களை பற்றியும் அக்கறை கொள்ளுங்கள். BE SAFE!

News October 31, 2024

ஹென்ரிச் கிளாசன், The Most Valuable Player!

image

2025 ஐபிஎல் ரிட்டென்ஷன் பட்டியலில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சன்ரைசர்ஸ் அணியின் ஹென்ரிச் கிளாசன். அவரை 23 கோடிக்கு தக்க வைத்துள்ளது அந்த அணி. அடுத்த இடங்களில் விராட் கோலி (RCB), நிக்கோலஸ் பூரன் (LSG) ஆகியோர் 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு உள்ளனர். சஞ்சு சாம்சன் (RR), ஜெய்ஸ்வால் (RR), பும்ரா (MI), பாட் கம்மின்ஸ் (SRH) 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டனர்.

News October 31, 2024

எளியவர்களுக்காக மக்கள் மனநிலை மாற வேண்டும்!

image

‘குயிக் காமர்ஸ்’ எனப்படும் ஆன்லைன் வணிகத்தால் சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரம் அழிவின் விளிம்பை எட்டியுள்ளது. இந்த பகாசுர ஆன்லைன் வர்த்தகத்தால் மளிகை கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், சாலையோர வணிகர்கள் என 2 லட்சம் கடைகள் மூடுவிழா கண்டுள்ளன. ‘பண்டிகை கால சேமிப்பு’ என்ற நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு நிலை மனமாற்றமும் போக்கும் எளியவர்களின் நிலையை எண்ணி மாற வேண்டும்.

error: Content is protected !!