news

News October 31, 2024

மோடி எப்படி வெல்கிறார் தெரியுமா?: கார்கே

image

தேர்தலில் முறைகேடு செய்வதன் மூலமே மோடி வெற்றி பெறுவதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். மோடி உண்மையில் எந்த தேர்தலிலும் வெல்லவில்லை, எல்லாமே முறைகேடுதான் எனவும், வாக்காளர் பட்டியலில் 10,000 பேரின் பெயரை நீக்கிவிட்டு 20,000 ஆயிரம் பெயரை சேர்ப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இதை எப்படி நிரூபணம் செய்வது என்பதுதான் கேள்வி எனவும் கூறியுள்ளார்.

News October 31, 2024

3 அணிகளுக்கு புதிய கேப்டன்

image

2024 ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்ட கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால், LSG, DC, KKR அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஐபிஎல்லில் சிறந்த வீரர்களாக செயல்படும் இவர்களுக்கு பதில் வேறு யார் யார் கேப்டனாக இருந்தால் சரியாக இருக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

News October 31, 2024

ஆங்கிலம் அறிவோம்: Hurricane Vs Tornado

image

Hurricane என்பதற்கும், Tornado என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? Hurricane என்பதை சூறாவளி என்றும் Tornado என்பதை சுழல் காற்று எனவும் சொல்லலாம். பொதுவாக அட்லாண்டிக் & பசிஃபிக் கடல் பகுதிகளில் தோன்றும் பெருங்காற்றை Hurricane என்கிறார்கள். பலத்த இடி, மின்னல், புயல் ஆகியவை ஒரே நேரத்தில் ஏற்படும்போது Tornado உருவாகிறது. இது குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாகும்.

News October 31, 2024

சென்னை மக்களுக்கு கவலைதரும் செய்தி

image

தீபாவளி தினத்தில் பட்டாசுகள் வெடித்து மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இதனால் சென்னை நகரின் பல பகுதிகளில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. மாலை 3 மணி நிலவரப்படி, 4 இடங்களில் மாசு தரக் குறியீடு 200-ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் மாசு தரக் குறியீடு 257 எனப் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் அரும்பாக்கம்(250), பெருங்குடி(238), வேளச்சேரி(217) உள்ளன. சூழலையும் கவனிங் மக்களே!

News October 31, 2024

கேட்டீங்களா.. STR எடுக்கும் புது அவதாரம்..!

image

நடிகர் சிம்பு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48ஆவது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பிசினஸ் மற்றும் பட்ஜெட் எகிறிய காரணங்களால் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது. இந்நிலையில், படத்தின் கதை மீது நம்பிக்கை இருப்பதால் தானே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் உலவி வருகிறது.

News October 31, 2024

கடவுள் இருக்கான் குமாரு..!

image

கடந்த ஐபிஎல் சீசனில் ₹55 லட்சம் சம்பளத்தில் KKR அணிக்காக ரிங்கு சிங் விளையாடினார். குறைந்த தொகையாக இருக்கிறதே என அவரிடம் கேட்டதற்கு, இது தனக்கு அதிக தொகை எனவும், கடவுள் கொடுத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார். அந்த சீசனில் அவருடைய அதிரடியான ஃபினிஷிங் டச் பேசப்பட்டது. இந்நிலையில், 2025 IPL சீசனுக்காக ₹13 கோடிக்கு அவரை KKR அணி தக்கவைத்துள்ளது.

News October 31, 2024

Alert: கொட்டப் போகும் மழை..!

image

வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2ஆவது வாரத்தில் தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அலர்ட் விடுத்துள்ளது.

News October 31, 2024

போன் யூஸ் பண்றீங்களா? உடனே இத படிங்க.. WARNING!

image

பொழுதுபோக்கு முதல் பொருள்கள் வாங்குவது வரை போன் தேவையாக உள்ளது. ஆனால், நீண்டநேரம் போன், கணினி பயன்படுத்துவதால் ‘TEXT NECK SYNDROME’ என்ற பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும், குழந்தைகள், இளைஞர்களை அதிகம் பாதிப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கழுத்து எலும்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, தசைகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் தலைவலி, தோள்பட்டை- கழுத்துவலி, நரம்பு பாதிப்பு ஏற்படும்.

News October 31, 2024

கே.எல்.ராகுலுக்கு சோதனை மேல் சோதனை

image

LSG அணியின் Retention தொடர்பாக அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட விருப்பங்களை காட்டிலும், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வீரர்களைத்தான் தக்கவைக்க விரும்பியதாக அவர் கூறியுள்ளார். கே.எல்.ராகுல் ரிலீஸ் செய்யப்பட்டதையும், உரிமையாளரின் இந்த கருத்தையும் முடிச்சு போட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

News October 31, 2024

‘அமரன்’ படத்திற்கு SK சம்பளம் இவ்வளவா..!

image

‘அமரன்’ படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு ₹30 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு சம்பளம் பெற்றதற்கு வொர்த்தான நடிப்பை SK வெளிப்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!